மேலாடையின்றி நடிகர் ஸ்ரீ.. வில்லங்கமாக வந்த வீடியோ.. மீட்டெடுக்கப்பட வேண்டிய அற்புத கலைஞன்: பிரபலம்
சென்னை: ஸ்ரீயின் நிலைமைக்கு உண்மையான காரணம் தெரியவில்லை. பல கனவுகளுடன் வாழ்ந்து மறைந்த மனோஜ் போலவே , ஸ்ரீ-க்கும் நிறைய கனவுகள் இருந்திருக்கலாம்.. அதற்கான வாய்ப்புகளும் கிடைக்காமல் போயிருக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கூறியிருக்கிறார். நடிகர் ஸ்ரீயின் வீடியோவை யார் எடுத்தது? யார் சோஷியல் மீடியாவில் பதிவிட்டது? அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்றும் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
மேலாடை அணியாமல், வெள்ளை நிற தலைமுடியை நீளமாக வளர்த்துவிட்டு, நடிகர் ஸ்ரீ-யின் சில வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன.. ஆனால், இந்த வீடியோ அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தாலும், குழப்பம், சந்தேகத்தையும் சேர்த்து தந்துள்ளது..

பாலின அறுவை சிகிச்சை?
ஒருவேளை ஸ்ரீ, பாலின அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா? கஞ்சா போதைக்கு அடிமையாகிவிட்டாரா? மன அழுத்தம் அதிகமாகிவிட்டதா? என்றெல்லாம் பல கேள்விகளை இணையவாசிகள் எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், 2nd Floor Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "அளவுக்கு மீறிய தனிமைதான் இதுக்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்.. கொடுமையான தனிமை, கிட்டத்தட்ட மனநோயாளியாக மாற்றக்கூடிய நிலைமையை தந்துவிடும்..
நடிகர் ஸ்ரீயை அப்படி சொல்லவில்லை.. ஆனால், கடந்த 2 வருடம் யாரிடம் பேசாமல், தனிமையில் இருந்ததால் மனசிதைவு ஏற்பட்டிருக்கலாம்.. தன்னை ரூமில் அடைத்து கொள்வது மட்டுமே தனிமை இல்லை.. யாருடனும் தொடர்பு இல்லாமல் இருப்பதும் தனிமைதான்.. சிறைச்சாலைகளிலும்கூட, டிவி, ரேடியோக்களை அனுமதிக்கிறார்கள்.. காரணம், கைதிகளுக்கு வெளித்தொடர்பு இல்லாமல் போய், மனஅழுத்தத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
நடிகை கனகா
ஆனால் வெளித்தொடர்பு சிறிதும் இல்லாமல் தனிமையில் அவதிப்படுபவர்கள்தான், நடிகர் ஸ்ரீ போன்ற நிலைமைக்கு ஆளாகிறார்கள். அற்புதமான கலைஞர் ஸ்ரீ.. வருங்காலத்தில் சிறப்பாக வந்திருக்க வேண்டிய கலைஞன்.. வீடியோவை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.. அருவருப்பான சில செயல்கள் வீடியோவில் இருந்தாலும், இதை யார் எடுத்து ரிலீஸ் செய்தது தெரியவில்லை.
மன அழுத்தம், மன இறுக்கத்திற்கு ஆளானதில் நடிகை கனகாவையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால், அவர் தனியாகவே கடைகளுக்கு சென்று வருகிறார்.. அனைவரிடமிருந்தும் தனிமைப்படுத்தி கொண்டு, அன்றாட பொழுதை கழித்து வருகிறார். அதுபோல நடிகர் ஸ்ரீ-க்கு மன அழுத்தம் இருப்பதாக தெரிகிறது.. இதனை கவுன்சிலிங்கில் குணப்படுத்த முடியும்..
மனோஜ் போலவே மனக்குமுறல்
ஸ்ரீயின் நிலைமைக்கு உண்மையான காரணம் தெரியவில்லை. பல கனவுகளுடன் வாழ்ந்து மறைந்த மனோஜ் போலவே , ஸ்ரீ-க்கும் நிறைய கனவுகள் இருந்திருக்கலாம்.. அதற்கான வாய்ப்புகளும் கிடைக்காமல் போயிருக்கலாம்.. காதல் தோலவி அல்லது படவாய்ப்புகள் இல்லாததுதான் ஸ்ரீயின் நிலைமைக்கு காரணமாக இருக்கலாம்.. அல்லது அளவுக்கு அதிகமாக உறவுகளின் பிரிவு ஆற்றாமையும் காரணமாக இருக்கலாம்.
மனம் மட்டுமல்லாமல், உடம்பும் சேர்ந்து அவருக்கு மெலிந்துள்ளது.. சாப்பாடும் சரியாக சாப்பிட்டிருக்க மாட்டார்.. மனம் பாதிக்கப்பட்டால், உணவு எப்படியிருந்தாலும் சாப்பிட தோன்றாது..
பாசிட்டிவ் மனநிலை
ஸ்ரீ-யின் இந்த வீடியோக்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன.. சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது. ஒவ்வொருவரும் ஸ்ரீயை பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள், பரிதாபப்படுகிறார்கள், நல்ல கலைஞன் என்று அனைவருமே கமெண்ட் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் இந்த நேசத்தை, இப்போதுதான் ஸ்ரீ நேரடியாக பார்க்கிறார்.. மக்களின் இந்த பாராட்டு, பாசத்தை கண்டு, இனிமேல் ஸ்ரீ-யின் மனம் மெல்ல பாசிட்டிவ்வாக மாறலாம்..
உளவியலான சிக்கலை ஆராய்ந்து கவுன்சிலிங் தந்தால் போதும்.. அதற்குள் ஸ்ரீ மீது முத்திரையை குத்த ஆரம்பித்துவிட்டார்கள்.. ஸ்ரீயை பார்த்தால் குடிப்பழக்கத்திற்கு ஆளானது போல தெரியவில்லை. பசி, பட்டினியால் வாடியதுதான் தெரிகிறது.. இழப்புகள், தோல்விகள், எதுமாதிரியான பிரச்சனைகளில் அவர் சிக்கியிருந்தாலும், மீட்டெடுக்கப்பட வேண்டிய கலைஞன் ஸ்ரீ" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications