Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோண்ட தோண்ட அசிங்கம்.. பிரபல வாரிசு நடிகருமா? "கேடயம்" ஸ்ரீகாந்த்! பார்ட்டிக்கு போன நடிகைக்கு பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 1 மாத காலமாக பிரசாந்த் என்பவரிடம் விசாரணை நடத்தி வந்த போலீசார், அனைத்து விவரங்களையும் சேகரித்தபிறகுதான், நடிகர் ஸ்ரீகாந்திடம் நெருங்கியிருக்கிறார்கள்.. இப்போது கொகைன் வாங்கிய ஸ்ரீகாந்த், தான் மட்டுமே அதை பயன்படுத்தினாரா? அல்லது வேறு யாருக்காவது விற்றாரா? தெரியவில்லை. பிறருக்கு விற்றிருந்தால், அது மிகப்பெரிய சிக்கலாக வெடிக்கும். நடிகர் கிருஷ்ணாவும் இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார் என மூத்த பத்திரிகையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "அதிமுக ஐடி விங்கில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் பிரசாந்த்.. அஜய் வாண்டையார் என்பவர் சமீபத்தில்தான் அதிமுகவில் சேர்ந்தார்...

srikanth

இவர்கள் எல்லாம் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில், கடந்த மாதம் மதுஅருந்த சென்றுள்ளனர்.. அப்போது அங்கிருந்த இன்னொரு குரூப்புடன் இவர்களுக்கு மோதல் ஏற்பட்டது.

கைகலப்பு - மண்டை உடைப்பு

அந்த எதிர்தரப்பு குரூப்புடன், பிரசாந்த் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.. தற்போது நுங்கம்பாக்கம் பாரில், டான்ஸ் ஆடுவதில் ஏதோ தகராறு ஏற்பட்டு அது கைகலப்பு வரை சென்றது.. இதில் எதிர்தரப்பு நபரின் மண்டை உடைக்கப்பட்டு 16 தையல் போடப்பட்டிருக்கிறது. மேலும் அந்த எதிர்தரப்பு நபர் சற்று வயதானவர் என்றும் சொல்கிறார்கள்.

இதற்கு பிறகுதான், தலைமறைவாக இருந்த பிரசாந்த், அஜய் வாண்டையார் உள்ளிட்டோரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.. அப்போதுதான்,பிரசாந்த் சினிமா உலகை சார்ந்தவர் என்றும், ஸ்ரீகாந்த்தை வைத்து படம் எடுத்தவர் என்றும் தெரியவந்தது. அந்தவகையில், ஸ்ரீகாந்த் - பிரசாந்த்துக்கு ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. பிறகு ஸ்ரீகாந்த்துக்கு, பிரவின் என்ற நபரிடம் சில போதைப்பொருளை வாங்கி தந்துள்ளதும் தெரியவந்துள்ளது..

நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை

இந்த விசாரணை முழுக்க கடந்த 1 மாத காலமாக நடத்தி வந்த போலீசார், அனைத்து விவரங்களையும் சேகரித்த பிறகுதான், ஸ்ரீகாந்திடம் நெருங்கியிருக்கிறார்கள்.. இப்போது கொகைன் வாங்கிய ஸ்ரீகாந்த், தான் மட்டுமே அதை பயன்படுத்தினாரா? அல்லது வேறு யாருக்காவது விற்றாரா? என்பதுதான் சிக்கலாக கிளம்பியிருக்கிறது. நடிகர் கிருஷ்ணவும் இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.

சாதாரண ஆல்கஹால் என்றால், நான்கைந்து நாட்கள் உடம்பில் போதை இருக்கும்.. ஆனால் சின்தட்டிக் டிரக்ஸ் என்றால், இந்த போதை உடம்பில் 40 நாட்களுக்கு மேல் தங்கியிருக்குமாம்.. அந்தவகையில், ஸ்ரீகாந்த் கொகைன் உட்கொண்டது உறுதியானது.. அத்துடன், அவர் போதைக்கு அடிமையாகியிருந்து வந்ததும் நிரூபணமாகியிருக்கிறது. தற்போது புழலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சினிமா பார்ட்டிகள்

சினிமாவில் பார்ட்டிகள் நடந்தால், அதில் ஸ்ரீகாந்த் பெரும்பாலும் பங்கேற்று வந்துள்ளதாகவும், ஸ்ரீகாந்துடன் பிரசாந்தும் அந்த பார்ட்டிகளில் கலந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள்.. இவர்களை தொடர்ந்து இன்னொரு தயாரிப்பாளரின் மகன், வாரிசு நடிகரின் மகன் சிக்க போவதாகவும் சொல்கிறார்கள்.

சாதாரண மதுபோதை பிரச்சனை என்றால், ஜாமீனில் விட்டுவிடுவார்கள். ஆனால் கொகைன் என்பது, இங்கு தடை செய்யப்பட்டு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, அதனை விற்று உபயோகித்திருக்கிறார்கள்.. இது மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கிறது. அரசியல், சினிமா நபர்கள் ஈடுபட்டிருப்பதால், விசாரணையும் விரிவடைந்துள்ளது.

கொகைன் தாக்கம்

இந்த கொகைன் சாப்பிட்டால், சாப்பாட்டுக்கு பதில் ஜூஸ் போன்ற திரவ உணவுகளையே சாப்பிட நேரிடும்.. கொகைன் உட்கொள்வதால் வாசனை பெரிதாக வெளியே தெரியாது, பசி தெரியாது, களைப்பு தெரியாது. இதனால் இரவு பகல் தூங்காமலும் நடிக்க முடியுமாம்..

ஆனால், தூங்கிவிட்டால் 3 நாட்களானாலும் லேசில் எழ முடியாது.. அதனால்தான் பல சினிமா பிரபலங்கள் இந்த கொகைனை பயன்படுத்துவதாக கூறுகிறார்கள்..

நடிகர், நடிகைகள்

தற்போது ஸ்ரீகாந்த் பங்கேற்ற பார்ட்டிகளில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் யார்? என்ற லிஸ்ட்டை போலீசார் கையில் எடுத்துள்ளனர்..

சினிமா துறையினருக்கே, பிரசாந்த்தான், போதைப்பொருளை சப்ளை செய்யக்கூடிய நபராக இருந்திருக்கலாம் என்றும், அதிலும் ஸ்ரீகாந்தின் நட்பை பயன்படுத்தியே, சினிமா வட்டாரத்தினரின் அறிமுகங்களை பிரசாந்த் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.

கேடயம் ஸ்ரீகாந்த்

அந்தவகையில், ஸ்ரீகாந்த் கேடயமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளதாம். அந்தவகையில், உண்மையிலேயே ஸ்ரீகாந்த்தை நினைத்து வருத்தமாக உள்ளது. எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர், பல வெற்றி படங்களை தந்தார்.. ஆனால், சமீபகாலமாக படங்களும் இல்லை.. இந்த சூழலில் கைதாகி உள்ளது கவலையை தருகிறது.

accused 1 பிரசாந்த், accused 2 பிரதீப், accused 3-ல் ஸ்ரீகாந்த்தை காவல்துறை கொண்டுவந்துள்ளது.. எங்கோ உச்சத்தில் இருந்த நடிகரை, அக்யூஸ்ட்டில் சேர்த்துள்ளதை கண்டு சினிமா வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+