Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோசமான ஹேஷ்டேக்கு.. சூர்யாவை சுற்றி பின்னப்படும் வலை! விமர்சனத்தை தகர்த்து முன்னேறி.. ரூ.60 கோடி செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெட்ரோ படத்தில் பாராட்டத்தக்க சில அம்சங்கள் இருந்தாலும், சூர்யா ரசிகர்களை இப்படம் திருப்திபடுத்தவில்லை, சூர்யா கடுமையாக உழைத்திருந்தாலும், அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை என்கின்றன எதிர்மறை விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் வலம்வருகின்றன.. இதை வைத்தே சூர்யாவுக்கு மார்க்கெட் இல்லை என்று கூறி அவரை ஒதுக்கவும் சிலர் முயன்றுவருவதாக கூறப்படுகிறது. இதற்குதான் மூத்த பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2 நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "கங்குவா படத்துக்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் நிறைய வந்தது உண்மையே.. ஆனால், ரெட்ரோ படத்தில் சூர்யா நன்றாகவே உழைத்துள்ளார்.. அவருடைய பங்கை சிறப்பாக செய்துள்ளார்.. இந்த படம் கருத்தியல் ரீதியான தோல்வியா? கமர்ஷியல் ரீதியான தோல்வியா என்பது விவாதிக்கக்கூடிய விஷயம்.

Television Surya rs 60 crore 60

நடிகர் சூர்யாவை ஒழித்து கட்டுவதற்காகவே சிலர் எதிராக பேசுகிறார்கள்.. சூர்யாவுக்கு எதிராக சில அரசியல் சக்திகளும், சினிமாவிலிருந்தே சூர்யாவை ஓரம்கட்ட, சில திரைப்பட பிரமுகர்களும் பின்னணியில் உள்ளனர்..

அதனால்தான், திட்டமிட்டே ரெட்ரோ படத்தை சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகிறார்கள். இது மிகவும் தவறானது.. எப்போதோ பேசிய ஜோதிகாவின் பேச்சு, சிவக்குமாரின் பேச்சுக்களை வைத்து, இப்போதுவரை அவர்களை டார்கெட் செய்வது ஏற்புடையதல்ல" என்று தெரிவித்திருந்தார்.

சூர்யாவுக்கு மார்க்கெட் டல்லு

இந்நிலையில், இதே கருத்தைதான் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனும் தெரிவித்துள்ளார்.. "சூர்யாவுக்கு படம் மொக்கை, பிளாப், என்று சொல்வதெல்லாம் பொய், நிஜமாகவே சூர்யாவின் மார்க்கெட் எகிறியிருக்கிறது.. எனவேதான், தன்னுடைய 30 கோடியிலிருந்து 60 கோடிக்கு சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார் சூர்யா" என்று கூறியிருக்கிறார்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "கங்குவா படத்துக்கு பிறகு சூர்யாவுக்கு மார்கெட் குறைந்தது உண்மைதான்.. ரொட்ரோ படத்துக்காக 30 கோடி ருபாய் சம்பளம் பெற்றுள்ளார்.. அந்த படத்தை தற்போது நெட்பிலிக்ஸ் 65 கோடிக்கு வாங்கியிருக்கிறது. இதனால், சூர்யா, ஜோதிகா இருவருக்கும் லாபம்தான்.. இது பிளஸ் பாயிண்ட்தான்.

ஜோதிகாவுக்கு லாபம்

வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் எடுக்கிறார். இதில் சூர்யாவுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டது. லக்கி பாஸ்கர் என்ற வெற்றிப்படத்தை தந்த வெங்கி அட்லூரியின் அடுத்த படத்தில் சூர்யாவுக்கு 60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.. இந்த படத்தின் ஓடிடி உரிமையை 85 கோடிக்கு வாங்கியிருக்கிறது நெட்பிலிக்ஸ் நிறுவனம். எனவே சூர்யாவுக்கு மார்க்கெட் அவுட், படம் மொக்கை என்பதெல்லாம் பொய்" என்று தெரிவித்துள்ளார்.

கர்ப்பமான நடிகைகள்

இந்த பேட்டியில் பல்வேறு தகவல்களை பற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைகள் யார் யார்? என்று சொல்லியிருக்கிறார்..அதில், மயில் நடிகை, பூ நடிகை, வெளிநாட்டு நடிகை, மும்பை மாடல் நடிகைகளை பற்றி கூறியிருக்கிறார்கள்.. இவர்கள் தங்களது திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, அதற்கு பிறகே வயிற்றில் 2 மாதம், 3 மாதக் குழந்தையுடன் தங்களது கணவன்மார்களை மணமுடித்ததாக கூறியிருக்கிறார்.

வாடிவாசல் - எதிர்பார்ப்பு

இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சூர்யா படம் நல்லா இல்லை என்றால், அதை தாராளமாக சொல்லலாம்.. கங்குவா படம் உண்மையிலேயே நல்லா இல்லை..

மற்றொருபுறம் ஜெய் பீம் படத்துக்கு பிறகு பாமக தரப்பில் சூர்யாவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.. நீட் தேர்வு பற்றி சூர்யா கருத்து சொல்லவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர் என்ற முத்திரை குத்தி பரப்புரை செய்கிறார்கள்.. அன்று கோவில் சம்பந்தமாக ஜோதிகா சொன்ன கருத்து, சிக்ஸ் பேக் பற்றி சிவக்குமார் சொன்ன கருத்து, இவைகளை வைதது இன்னமும் சோஷியல் மீடியாவில் சிவக்குமார் குடும்பத்தை விமர்சித்து வருகிறார்கள்.

ஐடி விங்குக்கு செலவு

சூர்யாவை சினிமாவில் அழிச்சிவிடணும், முன்னுக்கு வரக்கூடாது என்று சினிமாவிலேயே சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள்.. குறிப்பாக விஜய் டிவியிலிருந்து வந்த பிரபல நடிகர், அடுத்த தளபதியாக வரணும் என்று நினைக்கிறார்.. அவர்தான் தன்னுடைய ஐடி விங்கை வைத்து, சூர்யாவை கடுமையாக தாக்கி வருகிறார்.. இதற்காகவே பல லட்சங்களையும் செலவு செய்து கொண்டிருக்கிறார்.

இப்படி பலரும் சூர்யா மீது வன்மம் கக்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால், சூர்யா ஆர்ஜே பாலாஜி படத்தில் நடித்து வருகிறார்.. இது வெற்றிப்படமாக வர வாய்ப்புள்ளது.. வெற்றிப்படங்களை தொடர்ந்து தரும் வெற்றிமாறனின் வாடிவாசல் படமும் சூர்யாவுக்கு வேற லெவலில் பெயர் பெற்றுத்தர போகிறது. என்னதான் தாக்குதல் நடத்தினாலும், சூர்யா எதை பற்றியும் கவலைப்படுவதில்லை .. அகரம் அறக்கட்டளை மூலம் 8000 பேருக்கு கல்வி தந்து, உலக நாடுகளில் பலரை பணியாற்ற செய்துள்ளார்..

அவர் தன்னுடைய பொதுப்பணிகளை இப்படி செய்து கொண்டேதானிருப்பார். சூர்யா மேலே வரக்கூடாது என்று பலரும் சதி செய்தாலும், அவரது நல்ல எண்ணம் அனைத்து சதியையும் முறியடித்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

சோஷியல் மீடியா வன்மம்

இதனிடையே சோஷியல் மீடியாவிலும் சில கருத்துக்கள் வலம்வருகின்றன.. அதாவது, ரெட்ரோ படத்தில் பாராட்டத்தக்க சில அம்சங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக, சூர்யா ரசிகர்களை இந்த படம் திருப்திபடுத்தவில்லை.. முதல் பாதி குறை எதுவும் இல்லாத வகையில் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், 2ம் பாதி ஒட்டுமொத்த படத்தையும் கீழே கொண்டு போய் விடுகிறது. சூர்யா இந்த படத்தில் கடுமையாக உழைத்திருந்தாலும், அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

முழுக்க முழுக்க இது சினிமாவுக்கான விமர்சனம் என்றாலும், ஜெய் பீம் படம் வெளியானதிலிருந்தே வேண்டுமென்றே பலரும் வன்மத்தை கக்கி வருகிறார்கள். அடுத்தடுத்து வெளியாகும் படங்களை பற்றின நெகட்டிவ் கமெண்ட்கள், சூர்யா குடும்பத்தினரின் பேச்சுக்களையும் சர்ச்சையாக்கி கொண்டிருக்கிறார்கள்.

மோசமான ஹேஷ்டேக்குகள்

அதேபோல, மோசமான ஹேஷ்டேகுகள் போன்ற விஷயங்களை வேண்டுமென்றே பரப்புவதும் நடக்கிறது. படத்தையோ அதன் குறைகளையோ விமர்சிக்காமல் சூர்யாவை பாடிஷேம் செய்வதும், அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசுவதும் மிகவும் அதிகமாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் சூர்யாவை மட்டுமே டார்கெட் செய்து ஆடியன்ஸ் என்கிற பெயரில் ஒரு சில பேர் கங்கணம் கட்டிக்கொண்டு அவரை வசைப்பாடி வருகிறார்கள்..

இதற்கு பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.. அரசியல் இருக்கும் அளவுக்கு சூர்யா அப்படி என்ன செய்தார் என தெரியவில்லை. ஆனால், திரையுலகிலேயே சூர்யாவை முடக்கி போடும் வேலைகள் திரைமறைவில் நடக்கிறது. எத்தனை வகையான முட்டுக்கட்டைகள் போட்டாலும், அனைத்தையும் தகர்த்துக் கொண்டு மேலே வருவார் சூர்யா" என்கிறார்கள்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+