Retro Box Office: ரெட்ரோ லாபத்தில் ரூ. 10 கோடியை நடிகர் சூர்யா என்ன செய்தார் பாருங்கள்!
சென்னை: ரெட்ரோ திரைப்படத்தில் கிடைக்கப் பெற்ற லாபத்தில் ரூ 10 கோடியை நடிகர் சூர்யா என்ன செய்திருக்கிறார் தெரியுமா? சூர்யாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்த மனசு யாருக்கு வரும்!
கடந்த மே 1 ஆம் தேதி நடிகர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு முதல் நாளே அதிக வரவேற்பு இருந்தது. எனினும் விமர்சனம் என வரும் போது எல்லாருக்கும் எல்லா படங்களும் கதைகளும் பிடிக்கும் என சொல்ல முடியாது.

அது போல் ரெட்ரோவுக்கும் விமர்சனங்கள் கலவையாகவே வந்தன. எனினும் முதல் நாளிலேயே நல்ல வகையில் பெர்ஃபார்ம் செய்துள்ளது. முதல் நாளிலேயே அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ 19.25 கோடி வசூலானது. இரண்டாவது நாள் 7.75 கோடியும் மூன்றாவது நாள் மொத்தம் ரூ 8 கோடியும் வசூலானது.
அது போல் நான்காவது நாள் ரூ8.15 கோடியும் 5ஆவது நாள் ரூ 3.4 கோடியும், 6ஆவது நாள் ரூ 2.5 கோடியும் வசூலானது. 7ஆவது நாள் ரூ. 89 லட்சம் ஆகும். எனவே இந்தியாவில் கடந்த 7 நாட்களில் இந்த படத்திற்கு ரூ 49.94 கோடி வசூல் ஈட்டியதாக சொல்லப்படுகிறது.
வெளிநாடுகளில் ரிலீஸாகியுள்ள லிஸ்டை பார்த்தால் படம் ரூ 100 கோடியை தாண்டியிருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். இந்த படம் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வெளியாகியுள்ளது.
A ‘ONE’ hundred crore LOVE at the Box Office for #TheOne's show💥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 6, 2025
Book your tickets for #Retro Experience
🔗 https://t.co/zLoKNZJF7N #TheOneWon #RetroRunningSuccessfully #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj… pic.twitter.com/nvkrEm4SJC
கடந்த 6ஆவது நாள் அன்று இந்தியாவில் ரூ 49 கோடி வசூல் என்றால் உலக அளவில் ரூ 81 கோடி வசூலானது. அதாவது வெளிநாடுகளில் மட்டும் 6ஆவது நாள் ரூ 23.15 கோடி கிடைத்தது என்கிறார்கள். இதைத்தான் படத்தயாரிப்பு நிறுவனம் A one hundred crore love at box office என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் ரூ 10 கோடியை எடுத்து நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷனுக்கு கொடுத்துள்ளார். இதனால் சூர்யாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் படிப்பதற்கு பணம் கட்ட முடியாத ஏழை, எளிய மாணவர்களின் கல்வி செலவை ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications