எஸ்வி சேகருக்கு கல்யாணமா? கையில் கட்டு கட்டாய் பணம்.. ஹேப்பியாக கொடுத்த போஸ்! ஆனால் மேட்டரே வேறயாமே!
சென்னை: நடிகர் எஸ்வி சேகர் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. சீரியல் ஒன்றின் ஷூட்டிங்கின் போது அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக பின்னர் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கையில் கட்டு கட்டாக பணத்துடன் அதுவும் புத்தம் புதிய நோட்டுகளுடன் எஸ்வி சேகர் சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதாவது மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார் எஸ்வி சேகர்.
சின்னத்திரை, சினிமா, நாடகம் என பல ஆண்டுகளாக பிரபல நடிகராக வலம் வருபவர் எஸ்வி சேகர். அதிமுக சார்பாக எம்எல்ஏவாகவும் சட்டசபைக்கு சென்றவர். தொடர்ந்து பாஜகவிலும் பயணித்த அவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வெளியேறினார். கடந்த சில நாட்களாக திமுக மேடைகளிலும் அவர் பேச்சாளராக பங்கேற்று வருகிறார்.
முன்னதாக கடந்த 201 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார் எஸ்வி சேகர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தற்போது அந்த வழக்கு தொடர்பாக எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடகம் ஒன்றில் பெண் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் ஆபாச சைகை காட்டியதாக எஸ்வி சேகருக்கு எதிராக கண்டனம் எழுந்திருக்கிறது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பிரஸ் கிளப்பும் வலியுறுத்தி உள்ளது. இதற்கு இடையே சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் எஸ்வி சேகர். ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு பரபரப்பை கிளப்புவது எஸ்வி சேகரின் வழக்கம்.
அந்த வகையில் நேற்று திடீரென இளம் நடிகை ஒருவருடன் மணக் கோலத்தில் இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியானது. எஸ்வி சேகர் நடிகை ஷோபனா மணக் கோலத்தில் இருக்க ஷோபனாவுக்கு எஸ்வி சேகர் தாலி கட்டுவது போல புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் திடீரென வேகமாக பரவியது. பலரும் தங்கள் இஷ்டப்படி கதை கட்டிக் கொண்டிருக்க அது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் மீனாட்சி சுந்தரம் சீரியலுக்கான ப்ரோமோ என்பது அதற்குப் பிறகு தான் தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று காலையிலேயே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் எஸ்.வி சேகர். கையில் கட்டுக் கட்டாக பணத்துடன், அதுவும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தான் தனது பெயரில் போலியாக பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி மர்ம நபர்கள் சிலர் பணம் கேட்டு வருவதாகவும், யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தவே அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளாராம். மேலும் ஆண்டவன் புண்ணியத்தில் தான் பண வசதியுடன் நன்றாக இருப்பதாகவும் யாரிடமும் பணம் கேட்கும் நிலையில் இல்லை என்பதை உணர்த்தவே கையில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளை வைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் எஸ்வி சேகர். என்ன இருந்தாலும் இது ரொம்ப ஓவர் என விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications