நடிகர் உமாபதிக்கு அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மீது காதல் வந்தது இப்படித்தானா? வெளிவந்த ரகசியம்
சென்னை: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் இடையே இருக்கும் காதல் குறித்த செய்திகள் தான் தற்பொழுது இணையத்தில் சூடாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
எந்தவித சம்பந்தமும் இல்லாத இவர்களுக்குள் எப்படி காதல் ஏற்பட்டது என்கிற குழப்பம் பலருக்கு இருந்து வந்தது. அதற்கான பதில் தற்பொழுது கிடைத்துள்ளது.
பொதுவாக பல நட்சத்திர ஜோடிகள் தாங்கள் ஜோடியாக ஏதேனும் படத்தில் இனைந்து நடித்தால் அவர்களுக்கிடையே காதல் ஏற்படுவது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்று. அஜித்-ஷாலினி, சூர்யா -ஜோதிகா போன்று பல நட்சத்திர ஜோடிகள் அதற்கு உதாரணமாய் இருக்கிறார்கள்.ஆனால் எந்தவித படத்திலும் இணைந்து நடிக்காமல், எந்த நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்து கொண்டது கூட கிடையாது.

இந்த சூழ்நிலையில் உமாபதி-ஐஸ்வர்யா இடையே காதல் இருப்பதாக செய்திகள் பரவி வந்தது.எப்படி இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது என்று பலர் குழப்பத்தோடு இணையத்தில் கேள்விகளை கேட்டு வந்தனர்.ஜீ தொலைக்காட்சியில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை சமீபத்தில் புதிதாக நடத்தி வந்தனர்.
நடிகர் அர்ஜுன் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார்.நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி சர்வைவர் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.தனது தந்தை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பதால் சர்வைவர் சூட்டிங் பார்ப்பதற்கு ஐஸ்வர்யா அடிக்கடி செட்டுக்கு வருவாராம். அப்பொழுதுதான் உமாபதியின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது.
அப்படி சாதாரண நட்பாக ஆரம்பித்த அவர்களது அறிமுகம் இப்பொழுது காதலில் வந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.சமீபத்தில் தனது சொந்த செலவில் பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோவிலை கட்டிய நடிகர் அர்ஜுன் அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் தம்பி ராமையாவை குடும்பத்தோடு அழைத்து இருந்தாராம்.அந்த நிகழ்ச்சியில் வைத்து இரு குடும்பத்தினரும் இவர்களது காதல் குறித்து பேசி திருமண தேதியையும் குறித்து விட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இவர்களது திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்கிறதாம். சூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்து காதலில் விழுந்து கல்யாணத்தில் முடிந்து சிறந்த நட்சத்திர ஜோடியாக இன்றைக்கும் உலா வரும் தளபதி விஜய்-சங்கீதா ஜோடியை போல் இந்த ஜோடியும் சிறப்பாக வாழ பலர் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications