இக்கட்டான சூழலில் வேல ராமமூர்த்தி.. நடிகை ராதிகா, ரம்யா கிருஷ்ணன் கூட சொன்னது.. 20 நாள் ஆகிட்டாமே
சென்னை: சமீபத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவால் ஒட்டு மொத்த திரை உலகமும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மாரிமுத்துவின் குடும்பத்தினரை போலவே அவருடைய இறப்பை அவருடைய ரசிகர்களும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இது எதிர்நீச்சல் சீரியலுக்கு விழுந்த மிகப்பெரிய அடிதான்.

ஆதி குணசேகரன் ஆக எதிர்நீச்சல் வீட்டில் உள்ள அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவருடைய அடக்குமுறைகள் ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களும் இவர் மீது கடுப்பில் இருந்தாலும் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டிக் கொண்டிருந்தனர்.
அதனால்தான் பலருக்கும் மனதில் இடி இறங்கியது போல இவருடைய மறைவு இப்போதும் கஷ்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. வில்லனையும் இந்த அளவிற்கு ரசிகர்கள் ரசிப்பார்களா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தான் நடிகர் மாரிமுத்துவின் இறப்பு குறித்து அதிகமான ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த அளவிற்கு குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலமாக தன்னுடைய நடிப்பை தத்துரூபமாக மாரிமுத்து காட்டி இருந்தார். அதனாலேயே எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது. பெண்களை எப்போதும் அடக்கித்தான் ஆள வேண்டும் என்ற ஒரு கொடூரமான கதாபாத்திரமாக சீரியல் முழுவதும் மாரிமுத்து வலம் வந்தார்.

அது மட்டுமல்லாமல் அவருடைய தனித்துவமான செருமல்கள், ஏய்... இந்தம்மா.. என்ற வார்த்தை மூலமாக இவர் உலகெங்கிலும் உள்ள சன் டிவி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார். இந்த நிலையில் மாரிமுத்துவின் மறைவிற்குப் பிறகு அவர் நடித்த குணசேகரன் கேரக்டரில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்தது. அந்த நேரத்தில்தான் சமூக வலைதளத்தில் நடிகர் மாரிமுத்துவை போலவே தோற்றத்தையும் பேச்சு வழக்கத்தையும் கொண்ட நடிகர் வேல ராமமூர்த்தி பற்றி பேசப்பட்டது.
வேல ராமமூர்த்தி இந்த சீரியலில் குணசேகரனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் தங்களுடைய விருப்பங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி இனிமேல் குணசேகரனாக நடிக்க போகிறார் என்று செய்தி வைரலாகி வந்தது. இந்த நிலையில் வேலூர் ராமமூர்த்தி பெட்டியில் ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் சேனல் தரப்பில் இருந்து தன்னிடம் நடிக்க வரும்படி கேட்டார்கள் என்றும், ஆனால் இப்போது நான் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார். அது மட்டும் இல்லாமல் நான் வீட்டுக்கு சென்று 20 நாட்கள் ஆகி விட்டது. அந்த அளவிற்கு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். ஆனால் என்னுடைய நண்பர்கள் பலரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சொல்லி என்னை நடிக்க கொண்டிருக்கிறார்கள். அதனால் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.

அதோடு நான் சினிமாக்களில் நடித்து இப்போதுதான் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறேன். என்னிடம் ராதிகா, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் சீரியலில் நடிக்கும்படி கேட்டு இருந்தார்கள். நான் அப்போதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டேன். எனக்கு சீரியலில் நடிக்க வேண்டும் என்பதெல்லாம் இப்போதைக்கு ஆசை இல்லை.
இப்போதைக்கு கிடைக்கும் திரைப்படங்களில் நடிப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது குணசேகரன் கேரக்டர் கிடைத்தால் என்னுடைய நடிப்பை அதில் சிறப்பாக காட்டுவேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்று இன்னும் ஒரு சில நாட்களில் உறுதியான தகவல்கள் தெரியவரும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications