மதுரை அவனியாபுரத்தில் பரபரப்பு.. அரிவாளை தூக்கி வந்த நடிகர் வேலராம மூர்த்தியின் மனைவி
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் நடிகர் வேல ராமமூர்த்தியின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ளதால் அவருடைய மனைவி வீட்டிற்கு வெளியே வர முடியவில்லை என்று அரிவாளை தூக்கிக்கொண்டு வந்து அந்த தடுப்புகளை அகற்றி இருக்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதற்காக சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருப்பதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் நடிகரும், எழுத்தாளருமான வேலராமமூர்த்தியின் வீட்டு வாசலில் இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதால் அவருடைய மனைவி வீட்டிற்கு வெளியே வர முடியவில்லை என்று அங்கிருந்த காவலர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

தன்னுடைய வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்கள். அதுபோல இன்று மாலை தன்னுடைய உறவினர்கள் வர இருக்கிறார்கள் இந்த நேரத்தில் இதுபோல தடுப்புகள் வைத்து வீட்டு வாசலை அடைத்தால் உள்ளே எப்படி வர முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். பிறகு தன்னுடைய வீட்டில் இருந்து ஒரு அரிவாளை கொண்டு வந்து அங்கிருந்த தடுப்புகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை வெட்டி தடுப்புகளை அகற்றி இருக்கிறார்.

பிறகு காவல்துறையினர் வேல ராமமூர்த்தியின் மனைவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதில் ஒரு பகுதியை இன்று ஒரு நாள் பயன்படுத்திக் கொள்ளுங்கள், பிறகு உங்கள் வீட்டிற்கு செல்வதற்கு வசதியாக இடம் அமைத்து தருகிறோம் என்று பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அதற்கு வேலராமமூர்த்தியின் மனைவி சம்மதம் சொல்லி இருக்கிறார்.

அவனியாபுரத்தில் தெரு பகுதியில் வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் இருந்து வெளியே வரும் வகையில் தடுப்புகள் வைத்திருந்தால் நன்றாக இருக்கும், ஒரு நாள் முழுக்க வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாத வகையில் முழுமையாக அடைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். அதுபோல அங்கு போடப்பட்டிருக்கும் தடுப்புகளை தாண்டி முதியவர்கள் செல்வதற்கு கடினமாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications