விஜய் சேதுபதி அப்போ இருந்த மாதிரி இப்போ இல்ல...! வெளிப்படையாக பேசிய நடிகர் வேலராமமூர்த்தி
சென்னை: நடிகர் வேலராமமூர்த்தி எழுத்தாளராக இருக்கும் நிலையில் மதயானை கூட்டம் என்ற திரைப்படத்திற்கு பிறகு இப்போது அதிகமான தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதோடு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலிலும் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி குறித்து வேலராமமூர்த்தி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது பலருடைய பாராட்டைப் பெற்று வருகிறது.

சினிமா துறையில் ஒரு சிலர் தங்களுடைய நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அதுவும் முதல் திரைப்படத்திலேயே யார்ரா இவர் என்று கேட்கிற வகையில் ஒரு சிலர்தான் நடிப்பில் அசத்துகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகர் வேலராமமூர்த்தி. அதுபோல நடிகர் விஜய் சேதுபதியும் தான். இவர்கள் இருவரும் சங்கத்தலைவன் என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அந்த அனுபவம் குறித்து நடிகரும் எழுத்தாளரும் நடிகருமான வேல்ராஜ் மூர்த்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடிகர் வேலராமமூர்த்தி மதயானை கூட்டம், என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைத்தார். அதை தொடர்ந்து அவர் சங்குதேவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது குறித்து வேலராமமூர்த்தி பேசுகையில், "சங்கு தேவன் திரைப்படம் தெருக்கூத்து கலைஞர், செவ்வாய் தோஷம்னு ஒரு அருமையான கதை. அதுல தெருக்கூத்து கலைஞன் என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் அப்போ அந்த படத்தோட இயக்குனர் சுதாகருக்கு விஜய் சேதுபதிக்கும் இடையே பிரச்சனை வந்துவிட்டது.
அதனால் அவர் எடுத்த சீனையே திரும்பத் திரும்ப எடுத்து படம் ட்ராப் ஆயிடுச்சு. அப்போ இருந்த விஜய் சேதுபதி வேற. ஆனால் அவர் சேதுபதி படத்தில் நடிக்க வரும்போது வேறு ஒரு நல்ல விஜய் சேதுபதி தான் இருந்தார். அதுபோல ரணசிங்கம் படத்துல நடிக்க வரும்போது அதைவிட வேறு சேதுபதி உருமாற்றம், குணமாற்றம் என்று காரல் மார்க்ஸ் சொல்லுவாரே அதுபோல விஜய் சேதுபதி மாறி இருந்தார் என்று அந்த பேட்டியில் வேல ராமமூர்த்தி பேசியிருக்கிறார்.
வேல ரொம்ப மூர்த்தி அதிகமாக நடிக்கும் திரைப்படங்களில் கிராமத்து கேரக்டரில் நடித்தால் அந்த கேரக்டருக்கு அப்படியே ஒன்று விடுகிறார். அதிலும் "எலந்தாரி பைய கரியை அள்ளி சாப்பிடணும்" என்று அவர் பேசிய வசனம் பெரிய அளவில் புகழடைந்தது. அதற்கு பிறகு தான் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இறந்ததும் அதே சாயல் மற்றும் பேச்சு வழக்கு பயன்படுத்தும் வேலராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கமாண்ட் செய்து வந்தனர்.
அதனாலயே அவரே அந்த சீரியலில் வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் இப்போது அவரே எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அது அவருடைய நடிப்பிற்கு கிடைக்கும் அங்கீகாரம் தான். தனக்கு கிடைத்த கேரக்டரை சரியாக வேலராமமூர்த்தி செய்து வருகிறார் என்று சிலர் அவரை பாராட்டியும் வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications