நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியை ஞாபகம் இருக்கா?என்ன வேலைலாம் பண்ணி இருக்காரு பாருங்க..? இவரா இப்படி!
சென்னை: பிரபல நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிகராகவும்,குணசித்திர நடிகராகவும் அவரது ஓரு முகம் பலருக்குத் தெரியும். ஆனால் சினிமா துறையில் அவருடைய இன்னொரு முகத்தை பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ் சினிமாவில் தன்னுடைய மேனரிசத்தாலும், டயலாக் டெலிவரி செய்யும் விதத்தாலும் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி, காமெடியில் இரட்டை அர்த்த வசனங்களை கலக்கி இறக்கி அடிப்பதில் முத்திரை பதித்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆவார்.

இவர் ஆரம்பத்தில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நாளடைவில் இவர் நடித்த காமெடி கதாபாத்திரங்களே இவரது பெயரை இன்றும் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்க செய்கிறது.
பொதுவாக சினிமாவில் இன்றைக்கு பல நடிகர்களும் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் ஏறக்குறைய மூன்று தலைமுறைக்கு மேலான பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதோடு திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை மூலமாகவும் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்துள்ளார்.திரையில் இவரது திறமை அறிந்திருக்கும் பலருக்கு திரைக்குப் பின்னால் இவரது திறமை குறித்த தகவல்கள் கொஞ்சம் ஆச்சரியத்தை தருகிறது .அடிப்படையில் வெண்ணிறஆடை மூர்த்தி ஒரு பத்திரிக்கையாளர் ஆவார்.
என்னதான் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இவருக்குள் இருக்கும் பத்திரிக்கையாளன் தான் இவரை ஒரு படத்திற்கு கதை ,வசனம் எழுதும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறான். வெள்ளி விழா நாயகன் மைக் மோகன் என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட மோகன் படத்திற்கு தான் வெண்ணிற ஆடை மூர்த்தி கதை வசனம் எழுதியுள்ளார்.
அன்னக்கிளி,ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற எவர்கிரீன் தமிழ் படங்களை இயக்கிய தேவராஜ் -மோகன் என்ற இரட்டை இயக்குனர்களில் ஒருவரான மனோ மோகன் இயக்கி மைக் மோகன் நடித்த "ருசி" என்ற படத்திற்கு தான் வெண்ணிற ஆடை மூர்த்தி கதை வசனம் எழுதியுள்ளார்.கங்கை அமரன் இசையமைத்த இந்த படம் அந்த சமயத்தில் ஓரளவு மட்டுமே வெற்றியை பெற்றது. அதனால் தான் என்னவோ வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற எழுத்தாளரை தமிழ் சினிமா நினைவில் கொள்ளவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications