ஆட்டம் காணுது அஸ்திவாரம்.. விஜயின் ஜனநாயகன்.. நோ ப்ரோன்னா ஓட்டு வந்துருமா? பாயிண்டை பிடித்த பிரபலம்
சென்னை: ஜனநாயகன் படம் மாஸ் மசாலா படமாக இருக்கும்.. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.. பிளான் பண்ணி இந்த படத்தை எடுத்துட்டு இருக்காங்க.. நிச்சயம் அதில்., அரசியல் இருக்கும்.. ஆனால், விஜயின் அரசியல் வீழ்ச்சி 2026-ல் கண்டிப்பாக இருக்கும். சினிமாவிலேயே தன்னை அடையாளப்படுத்தி கொள்ள நான்கைந்து வருடங்கள் விஜய்க்கு தேவைப்பட்டது. அப்படியிருக்கும்போது, அரசியலில் அனுபவமில்லாத விஜய், எப்படி வெற்றி பெறமுடியும்?" என்று பாலாஜி பிரபு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
MGR TV Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "பல தேர்தலை நாம் பார்த்து கொண்டு வருகிறோம், பல அரசியல் தலைவர்களே சிக்கல்களில் உள்ளார்கள்.. பெரிய பெரிய கட்சிகளே என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறார்கள்..

விஜயகாத்துக்கு உள்ள தைரியம் இருக்கா
இப்போது விஜய் வந்து என்ன செய்ய போகிறார்? மக்களுக்காக, அரசியலுக்காக விஜய் என்ன இதுவரை செய்தார்? இதுக்கு முன்னாடி அவரது அரசியல் அனுபவம் என்ன? அனுபவம் இல்லாவிட்டாலும், விஜயகாந்த் போல தைரியம் இருக்கா? திமுகவை எதிர்த்து பேசக்கூடிய விஜய், பாஜகவை ஏன் எதிர்த்து பேச மாட்டேங்குறாரு? மத்திய அரசை எதிர்த்து ஏன் பேசல?
மக்களுக்கு விஜய்யின் கருத்துக்கள் போய் சேரணும் இல்லையா? "நோ ப்ரோ, ராங் ப்ரோ" என்று பேசினால் மட்டும் ஓட்டு போட்டுருவாங்களா? அரசியல் என்றால் விளையாட்டா? தமிழக முதல்வர் பதவி என்பது சாதாரண விஷயமா? இதற்கு விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கு?
எம்ஜிஆரை எடுத்துக் கொண்டால், ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார், அண்ணாவுடன் இருந்தார், கலைஞருடன் இருந்தார்.. நெடுஞ்செழியன் உட்பட பல தலைவர்களுடன் பயணித்தவர். தனிக்கட்சி துவங்கி, எம்எல்ஏக்களை நிறுத்தி வெற்றி கண்டார். அதற்கு பிறகுதான் அவரே எம்எல்ஏ ஆனார்.. அதற்குபிறகே ஆட்சியை பிடித்தார். 67, 77 இன்னைக்கு 26 என்கிறார் விஜய்.. வெளிப்படையாகவே சொல்றேன், வரும் தேர்தலில் விஜய்க்கு பெரிய தோல்வி வரும்.
ரசிகர் கூட்டம் இருப்பதை கண்டு முடிவு செய்யக்கூடாது. வடிவேலு திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தபோதுகூடத்தான் கூட்டம் வந்தது. கவர்ச்சி நடிகையை மேடையேற்றினால் அவருக்கும் கூட்டம் வரத்தான் செய்யும்.. விஜய்யிடம், விஜயகாந்த் கிட்ட இருந்த முரட்டுத்தனம், அசால்ட்டுத்தனம் ஏதாவது இருக்கா? விஜயகாந்த் பலருக்கு சோறு பொங்கி போட்டார்.. விருதாச்சலம் தொகுதியில் எதிர்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும், அங்கு நின்று வெற்றி பெற்றார். அந்த தைரியம் விஜய்க்கு இருக்கா?
பண்ருட்டி ராமச்சந்திரன்
விஜய்க்கு அரசியல் தெரியாவிட்டாலும், அரசியல் தெரிந்தவர்களையாவது கூட வைத்திருக்கிறாரா? விஜயகாந்த்துக்கு அன்று பண்ருட்டி ராமச்சந்திரன் என்ற மூத்த ஆலோசகர் உடனிருந்தார்.. எதுவுமே தெரியாமல் எப்படி அரசியலுக்கு விஜய் வந்தார் ? சினிமாவிலேயே ஆரம்பத்தில் விஜய் வெற்றி பெறவில்லை. முதல்படம் "நாளைய தீர்ப்பு" எடுத்தபோதே வீடு, வாசலை விற்றார் எஸ்ஏசி..
எப்படியாவது என் பையனை காப்பாத்துங்க என்று விஜயகாந்த் கிட்ட போய் கெஞ்சினார் விஜய்யின் அப்பா. நன்றிக்கடனுக்காக மாஸ் ஹீரோவான விஜயகாந்த், செந்தூர பாண்டி படத்தில் நடித்து தந்தார்.. இந்த படம் விஜய்க்கு பிராண்டாக மாறியது..
தேவுடா என்டிஆர்
ரசிகன் படத்தில் அளவுக்கு அதிகமாக கிளாமரை ஏற்றித்தான் அந்த படத்தை ஓட்டினார்கள்.. காதலுக்கு மரியாதை படம்தான் விஜய்யை அடையாளம் காட்டியது. அவரை நடிகராக அடையாளப்படுத்தவே, நான்கைந்து வருடங்கள் விஜய்க்கு தேவைப்பட்டது. திறமை இருந்தும், பூவை உனக்காக படம் வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படியிருக்கும்போது, அனுபவமே இலலாமல், எப்படி ரசிகர்கள் ஓட்டு போடுவார்கள் என்று நம்புகிறார்?
ஆந்திராவில் என்டிஆர், ஆரம்பத்திலிருந்தே பெருமாள், கிருஷ்ணர், என கடவுள் வேடங்களில் அதிகமாக நடித்து வந்தார்.. வெறித்தனம் பிடித்த தெலுங்கு ரசிகர்களும், என்டிஆரை, கடவுளாகவே பார்த்தார்கள்.. தேவுடா என்று கொண்டாடினார்கள்.. ஒருவித சுப்ரீம் பவர் அவரிடம் இருந்ததால்தான், முதல்வராக அவரை ரசிகர்களே உயர்த்தினார்கள். அப்படி விஜய்கிட்ட என்ன கவர்ச்சி இருக்கிறது? அரசியல் மேடை ஏறுவதும் இல்லை.. பவர்புல் பேச்சும் அவரிடம் இல்லை.. நண்பா, நண்பி என்று பேசினால் ஓட்டு போடுவாங்களா?
ஜனநாயகன் - மாஸ் மசாலா
ஜனநாயகன் படம் மாஸ் மசாலா படமாக இருக்கும்.. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.. பிளான் பண்ணி இந்த படத்தை எடுத்துட்டு இருக்காங்க.. நிச்சயம் அதில்., அரசியல் இருக்கும்.. ஆனால், விஜயின் அரசியல் வீழ்ச்சி 2026-ல் கண்டிப்பாக இருக்கும். சினிமாவிலேயே தன்னை அடையாளப்படுத்தி கொள்ள நான்கைந்து வருடங்கள் விஜய்க்கு தேவைப்பட்டது. அரசியலில் விஜய், எப்படி வெற்றி பெறமுடியும்?" என பாலாஜி பிரபு கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications