விஜய் டிவி சீரியல் நடிகையின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த விஜய் சேதுபதி.. வியப்பில் ரசிகர்கள்
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் கதாநாயகி பவித்ராவின் பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி நேரில் சென்று வாழ்த்து கூறியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் கதாநாயகியின் பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
விஜய் சேதுபதியின் தீவிரமான ரசிகையாக இருக்கும் பவித்ரா பிறந்தநாளுக்கு அவருடைய தோழி விஜய் சேதுபதி அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
விஜய் சேதுபதியை நேரில் பார்த்ததும் பவித்ராவால் பதில் பேச முடியாமல் திணறி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஆக்டிவான நடிகர்
மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி எப்போதும் எளிமையின் சிகரமாக இருந்து வருகிறார். ஒரு வருடத்திற்கு பல படங்களை கொடுக்கும் விஜய் சேதுபதிக்கு பிரீ டைம் கிடைக்குமா? என்பது பலருடைய கேள்வியாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் .இந்த நேரத்தில் தற்போது அவர் சின்னத்திரையிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். சீரியலில் இவருடைய குரல் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது விஜய் சேதுபதி அவருடைய ரசிகர் ஒருவருக்கு செய்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கதாநாயகியாக கலக்கல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் கதாநாயகியாக நடிகை பவித்ரா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான். இந்த சீரியலுக்கு முன்பு வரைக்கும் இவர் தங்கை கேரக்டரிலும் தோழியாகவும் தான் நடித்து வந்தார். முதல் முறையாக ஈரமான ரோஜாவே சீரியலில் இவர் கதாநாயகியாக நடிக்கும் போது இவர் ஹீரோயினியாக நடித்து விடுவாரா? என்றெல்லாம் இவரு காது படவே பலர் கேள்வி எழுப்பியிருந்தார்களாம். ஆனால் தனக்கு திறமை இருக்கிறது அதை நிரூபித்து காட்டுகிறேன் என்று முதல் சீரியலில் கதாநாயகியாக இவர் ரசிகர்கள் மனதில் மாஸாக இடத்தை பிடித்து விட்டார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலிலும் இவர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்தது .சீரியலின் கதை லாஜிக் இல்லாமல் இருக்கிறது இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் நடந்து விடக்கூடாது என்றெல்லாம் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனாலும் தற்போது இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பவித்ராவிற்கு பிறந்தநாள் கொண்டாட்ட பட்டு இருக்கிறது. பவித்ராவின் பிறந்த நாளை அவருடைய நண்பர்கள் சீரியல் நடிகர்கள் பலரும் சேர்ந்து கொண்டாடி இருக்கின்றனர்.

திடீர் சர்ப்ரைஸ்
இந்த நிலையில் நடிகை பவித்ரா விஜய் சேதுபதியின் தீவிரமான ரசிகையாம் அதை பல இடங்களில் கூறியிருக்கிறார் .விஜய் சேதுபதியை தனக்கு எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை இவர் இதற்கு முந்தைய பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போது விஜய் சேதுபதி இவருடைய பிறந்தநாளுக்கு திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். பவித்ரா இந்த நாளை தன்னால் மறக்கவே முடியாது என்று கூறி இருக்கிறார். விஜய் சேதுபதியை பார்த்த நிமிடத்தில் அவர் இன்ப அதிர்ச்சியில் திகைத்து இருக்கிறார் .இந்த நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விஜய் சேதுபதி பற்றியும் இந்த நிகழ்வு பற்றியும் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

நெகிழ்ச்சியான பதிவு
சினிமா தெரிந்த காலத்தில் இருந்து பயணித்த ஒரு உணர்வு நான் விஜய் சேதுபதியை சந்திப்பதற்கு முன்பு மிகவும் நேசித்த ஒரு நபர், இந்த சந்திப்பிற்கு பிறகு மரியாதை மலையேறிவிட்டது. ஒரு பெரிய ஆளுமை எப்படி இவ்வளவு இதயத்தை உஷ்ணப் படுத்துகிறது மற்றும் பூமிக்கு இறங்குகிறது அவருடைய அர்த்தமுள்ள உரையாடல்கள் என் இதயத்தில் பொறிக்கப்படும் என்றென்றும் போற்றப்படும், பிறந்தநாளுக்கு முந்தைய ஆச்சரியம் இதுவே சிறந்ததாக இருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க ஒரு ரசிகை கொண்டாடும் தருணம் என்று கூறி இந்த ஆச்சரியத்தை நடத்தி வைத்த சமந்தா கிருஷ்ணன் மற்றும் ரியோ ராஜ்க்காக நன்றியும் கூறி இருக்கிறார்
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: ஒன்று சேர்ந்த மருமகள்கள்.. கோமதி குடும்பத்தில் பெரிய குழப்பம்! பாவம் பாண்டியன் -
Pandian Stores 2 promo: பாண்டியன் வீட்டிற்குள் நடந்த விபரீதம்.. மயில் எடுத்த முடிவு! சரவணனுக்கு 2வது கல்யாணம்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: பாண்டியன் செய்த செயலால் கதறி அழுத கோமதி.. மயில் அப்பாவுக்கு கிடைத்த ஆதாரம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications