Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீர்த்தி கல்யாணத்தில் விஜய் வந்த போது இதுதான் நடந்தது! தனி விமானத்தில் அந்த குரல்! ப்ரீத்தி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட போது இணையத்தில் அதிகமான விமர்சனங்கள் எழுந்தது. அது குறித்து நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமணம் காலையில் இந்து முறைப்படியும், மாலையில் கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெற்றது. தன்னுடைய 15 வருட காதலரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். இது சமூக வலைதளத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

Television Keerthy Suresh

கீர்த்தி இத்தனை வருடங்களாக காதலித்த விஷயம் திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. அதற்கு முன்பு கீர்த்தி பற்றி அதிகமான சர்ச்சைகளும் கிளம்பியது. அதிலும் நடிகர் விஜய் கீர்த்தியை காதலிப்பதாக கூட செய்திகள் பரவி வந்தது. அப்போது விஜயின் நண்பர் சஞ்சீவின் வீட்டில் கீர்த்தி சுரேஷ் தங்கி இருந்ததால் விஜய் தான் கீர்த்தியை அங்கு தங்க வைத்திருக்கிறார் என்றும் சிலர் வதந்தி கிளப்பி வந்தனர்.

ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இப்போது நடிகர் சஞ்சீவின் மனைவியான நடிகை ப்ரீத்தி பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், கீர்த்தி என்னுடைய சொந்த தங்கை போல தான். என்னுடைய கணவர் சஞ்சீவை கீர்த்தி சார் என்று தான் கூப்பிடுவார். எங்களுக்கு கீர்த்தியின் குடும்பம் ஏற்கனவே பழக்கம் அந்த நட்பு முறையில் தான் கீர்த்தி எங்கள் வீட்டில் தங்கி இருந்தார். ஆனால் அது பற்றி பல வதந்திகள் பரவி வந்தது.

அந்த நேரத்தில் நாங்கள் அது குறித்து விளக்கம் கொடுக்காத காரணம் இதை நினைத்து கீர்த்தி எதுவும் மன கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான். அவளுக்கு சென்னையில் தெரிந்த ஒரே குடும்பம் நாங்கள்தான். நாங்கள் இது பற்றி கீர்த்தியிடம் பேசும் போது தேவையில்லாத வருத்தம் படுவாள் என்று நாங்கள் பேசுவது இல்லை.

சமூக வலைத்தளத்தில் அதிகமான கமெண்ட்களும் சர்ச்சைகளும் வந்து கொண்டே இருப்பது வழக்கம். அதற்கு நாம ரியாக்ட் செய்ய தொடங்கி விட்டால் அப்புறம் நம்மால் எழுந்து நடக்க கூட முடியாமல் போய்விடும் அந்த இடத்திலேயே அப்படியே உட்கார்ந்து இருக்க வேண்டியது தான். அதனால் தான் நாங்கள் இது பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை.

கீர்த்தி காதலிக்கும் விஷயம் அவளுடைய பிறந்தநாள் அன்று தான் எங்களுக்கு தெரியும். கீர்த்தி தான் என்னிடம் சொன்னது. அவளுடைய கணவர் ரொம்பவும் நல்ல மனிதர். கீர்த்தியை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். இத்தனை வருடங்கள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அவர் எவ்வளவு சப்போர்ட் கொடுத்திருந்தால் கீர்த்தியால் இன்று இவ்வளவு ஜெயித்திருக்க முடியும்.

அதுபோல விஜய் சார் கீர்த்தி கல்யாணத்தில் கலந்து கொண்டது குறித்து கூட சில சர்ச்சைகள் பரவி வந்தது. எங்களுக்கு விஜய் சார் கல்யாணத்திற்கு வருவது முன்னாடியே தெரியாது. கல்யாணத்திற்கு முந்தைய நாள் கூட கீர்த்தி நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் தான் வருகிறார்கள் என்று சொல்லி இருந்தார். நாங்கள் யார் யார் என்று விசாரிக்கவில்லை.

அப்போது அடுத்த நாள் காலையில் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெறும் போது விஜய் சார் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் அங்கிருந்த எல்லோரும் அவரோடு புகைப்படங்கள் எடுத்தனர். மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்கும்போது கூட அவரால் அங்கு இருக்க முடியவில்லை. அவருக்கு வேலை இருப்பதால் அவர் அர்ஜெண்டாக கிளம்பிவிட்டார்.

Television Keerthy Suresh

அங்கு அவர் ஒரு மணி நேரம்தான் இருந்திருப்பார். அப்போது அவரோடு எல்லோரும் போட்டோ எடுத்தார்கள். நாங்கள் தூரமா நின்று ஹாய் சொல்லிவிட்டு ரசித்து கொண்டு தான் இருந்தோம். ஏற்கனவே சமூக வலைதளத்தில் பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் நாங்கள் அங்கு நடப்பதை ரசித்துக் கொண்டு மட்டும் இருந்தோம்.

அதுபோல கல்யாணம் ஏற்பாடுகள் எல்லாமே கீர்த்தியும் அவருடைய கணவர்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் எல்லோரும் அந்த ரெசார்ட்க்கு போன நேரத்தில் எல்லோரையும் ஒரு தனி விமானத்தில் ஏற்றி வைத்திருந்தார்கள். அப்போது அந்த விமானத்தில் கீர்த்தி மற்றும் அவருடைய கணவர் தட்டில் இருவரும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பெயரை சொல்லி வரவேற்றார்கள். விமானத்தில் அந்த குரல் எங்கள் எல்லோரையும் வியக்க வைத்தது என்று அந்த பேட்டியில் ப்ரீத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+