விஜய் கூட்டணி யாரோடு? ஓபனாக விளக்கம் கொடுத்த எஸ்.ஏ சந்திரசேகர்.. ஆனால் இது மட்டும் பிடிக்காதாம்!
சென்னை: நடிகர் விஜய் அரசியலில் அடி எடுத்து வைத்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கழகத்தினை தொடங்கி வரும் 2026 ஆம் ஆண்டில் தேர்தலை சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய கூட்டணி எந்த கட்சியோடு இருக்கும் என்பது குறித்த கேள்விக்கு விஜய்யின் அப்பாவான இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் சந்திரசேகர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார். இப்போது அந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது. அதை தொடர்ந்து மீண்டும் சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல எஸ்ஏ சந்திரசேகரின் ஒரே மகனான விஜய் இளம் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுபோல அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜயும் அவருடைய தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்கள் என்ற செய்திகள் பரவி வந்தது.
ஆரம்பத்தில் இருந்து விஜய்க்கு அவருடைய தந்தை தான் கதை கேட்பது, கால் சீட்டு கொடுப்பது போன்ற எல்லா வேலைகளையும் செய்து வந்தார். ஆனால் துப்பாக்கி படத்தில் இருந்து விஜய் தானே கதை கேட்க தொடங்கியிருந்தார். அது போல தன்னுடைய வேலைகள் எல்லாவற்றையும் தானே பார்க்க தொடங்கியதாகவும் கூறப்பட்டது.
அந்த நேரத்தில் விஜய் உடைய மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் எஸ்ஏ சந்திரசேகர் விண்ணப்பம் அளித்திருந்தார். இந்த தகவல் வெளியானதும் விஜய் அரசியலுக்கு வந்து விட்டதாக செய்திகள் வேகமாக பரவி வந்தது. இதனால் விஜய் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தனது தந்தையுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று அறிக்கை விட்டார்.
அந்த நேரத்தில் தன்னுடைய அப்பாவையே விஜய் ஒதுக்கி வைத்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்குப் பிறகு எஸ் ஏ சந்திரசேகர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது விஜய் அவரை நேரில் சென்று பார்த்தார். அதற்குப் பிறகு புஸ்ஸி ஆனந்திற்கு எல்லா பொறுப்புகளையும் கொடுத்து விட்டார் என்று சந்திரசேகர் பல பேட்டிகளில் விமர்சித்து இருந்தார். அதற்குப் பிறகு சில வருடங்களாகவே கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருடைய அப்பாவும் அம்மாவும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய் தவக கட்சியை தொடங்கி இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தார். அதே நேரத்தில் அவருடைய அப்பா பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது விஜயின் அரசியல் வாழ்க்கை குறித்து நெகிழ்ந்து பேசி இருந்தார். அப்போது அவரிடம் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் தவெக கட்சியில் நான் ஒரு சாதாரண தொண்டன். விஜய் என்னுடைய மகனாக இருக்கலாம் ஆனாலும் கட்சியில் இதை செய் அதை செய் என்று சொல்லும் உரிமை எனக்கு இல்லை. எந்த தலைவனுக்கும் தொண்டன் ஆணை இட முடியாது. அதுபோல குடும்ப அரசியல் இருக்கக் கூடாது என்று தளபதி உறுதியாக இருக்கிறார். எனவே அதை சொல்லும் அதிகாரம் எனக்கு அறவே இல்லை என்று அந்த பேட்டியில் சந்திரசேகர் பேசியிருக்கிறார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications