"காசி"யில் கருவிழியை மறைத்து! விரல்களை புண்ணாக்கினாலும்! விக்ரமால் கலாபவன் மணியை தொட முடியவில்லையே!
சென்னை: மலையாள திரைப்படத்தின் ரீமேக்கான காசி திரைப்படத்தில் கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும் சில காட்சிகளில் கலாபவன் மணியின் நடிப்பை தொட முடியவில்லை என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காசி... வினயன் என்கிற மலையாள இயக்குனர் திலீப்பை நாயகனாக்கி கேரளத்தில் ஒரு படமெடுத்துக் கொண்டிருதார். அந்த படத்தில் சிறிய வேஷத்தில் கலாபவன் என்கிற மிமிக்ரி குழுவின் சாலக்குடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணி நடித்துக் கொண்டிருந்தான்.

அந்தப் படத்தின் ஷுட்டிங்கினிடையில் ஒரு ரெஸ்ட் சமயத்தில் மணியோடு "எந்தெங்கிலும் மிமிக்ரி காணிக்குடா" என அங்கிருந்தவர் சொல்ல கலாபவன் மணி காட்டிய மிமிக்ரி ஒரு பார்வையற்றவர் சாலையை கடப்பது எப்படி என... அற்புதமான அந்த மிமிக்ரியை பார்த்து அந்த செட்டே கை தட்டியது. இயக்குனர் வினயனோ 'எடா மணி.. நீ காண்பித்தது மிமிக்ரி அல்லடா... அது ஒரு கதை... இதை வைத்து ஒரு படமே எடுக்கலாம். எடுத்தால் நீ தான் நாயகன்..."
கட்டிப் பிடித்து புகழ்ந்த வினயன் பின் அதை மறந்தே போனார்.. ஆனால் சிறிய வேடங்களில் கோமாளித்தனம் செய்த மணி மறக்கவில்லை. வினயனை தேடிப் போய் "சேட்டா.. என்னை நாயகனாக்கி படம் எடுப்பதாக சொன்னீர்களே.. என்ன ஆச்சு..." என நச்சரிக்கத் தொடங்கி விட்டார்.
ஒரு கட்டத்தில் வினயன் பார்வையற்றவர் பாட்டு பாடும் பிச்சைக்காரன் கதையை எழுதி மணி நடிக்க உருவான படம் தான் "வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்.." படம் ரிலீசாகி முதலில் தியேட்டரில் ஆளே இல்லை. மௌத் பப்ளிசிட்டி மூலம் 5- ம் நாள் முதல் கூட்டம் வரத் தொடங்க சூப்பர் ஹிட். வெறும் 45 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட அப்படம் மூன்றரைக் கோடியை வாரிக் குவித்தது.
அப்படி கலாபவன் மணியும் நாயகனானார். இந்த மலையாளப் படம் ரிலீசாகி சில நாட்களில் வினயனுக்கு நடிகர் பார்த்திபனிடமிருந்து போன்... "நீங்களே இயக்குங்கள் சார்... நான் நடிக்கிறேன்".. ஆனாலும் வினயனுக்கு தமிழ் கலாச்சாரம் புரியாததால் தயக்கம். மேலும் கமல் போன்ற நாயகன் பார்வையற்றவராக நடித்தும் 'ராஜபார்வை' படம் தோல்வியடைந்த கதையை அவர் அறிந்திருந்தார்.
தமிழர்களின் ரசனை மேல் அவருக்கு நம்பிக்கையில்லை. பார்த்திபனிடம் மறுத்து விட அடுத்து நடிகர் பிரகாஷ் ராஜின் மூவ்... அதற்கும் வினயன் மறுத்து விடுகிறார். இந்த நிலையில் கண்ணூரை சேர்ந்த ஷைலஜா என்ற பெண்ணிடமிருந்து வினயனுக்கு கால் வருகிறது.
"சேட்டா என் கணவர் நடிகர் விக்ரம். உங்களை சந்திக்க ஆசைப்படுகிறார்" எனச் சொல்ல சென்னையிலிருந்த வினயனை விக்ரம் சந்திக்கிறார். விக்ரம், வினயனை சென்னை கமலா தியேட்டருக்கு தன் 'சேது' திரைப்படத்தை பார்க்க அழைத்துக் கொண்டு போகிறார். போகும் முன் அவர் கேட்டது 'வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' படத்தை தமிழில் தான் நடிக்க வினயன் இயக்க வேண்டுமென... ஒன்றும் பேசாத வினயன் 'சேது'வை பார்த்து விட்டு பாராட்டுகிறார்.
ஆனாலும் மணியின் பார்வையற்றப் பாத்திரத்தில் நடிக்க இது மட்டும் போதாது என அவருக்கு தோன்றுகிறது. மணி தன் உண்மையான கண் விழிகளை இமைகளுக்குள் மறைத்து வெண்படலம் மட்டும் வெளியில் தெரியும்படி ரொம்ப கஷ்டப்பட்டு நடித்திருந்தார். வினயன் சம்மதம் தெரிவிக்காததை அறிந்த விக்ரம் சில நாட்களுக்குப்பிறகு வினயனை சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார். உடனே அவர் வினயனோடு எதுவுமே சொல்லாமல் 'வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' படத்தின் ஆலிலக் கண்ணா பாடலை பாடி நடிக்கத் தொடங்குகிறார்.
கண் விழிகளை மறைத்து விக்ரம் செய்த நடிப்பைப் பார்த்து வியந்து போகிறார் வினயன்.. விக்ரமின் அப்சர்வேஷன் அபாரம் என அவருக்கு புரிகிறது... உடனே இயக்குனர் கோகுல கிருஷ்ணாவை அழைத்து தமிழுக்கு ஏற்றார் போல் திரைக்கதையை மாற்றி வசனங்களையும் எழுத வைக்கிறார் வினயன். மலையாளத்தில் புகழ் வாய்ந்த தயாரிப்பாளர் அரோமா மணி தயாரிக்க வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும் படம் 'காசி' என உருவாகிறது.
ஒரு காட்சியின் கண் கேட்டு குடும்பத்தினர் திட்டியதும் பறை போன்ற சிறிய கருவியை இசைத்து அழும் காட்சி உண்டு. வினயன் விக்ரமோடு லாங் ஷாட் எடுத்துவிட்டு க்ளோசப்பில் ட்ரெயினிங் உள்ள வாசிப்பாளரின் கைகளை எடுக்க தீர்மானித்தார் வினயன். விக்ரம் "இந்த ஷாட்டை நானே நடிப்பேன். நாளை எடுக்கலாம்" என விக்ரம் சொல்ல வினயன் "அது வாசிப்பது கஷ்டம்"... என சொல்ல...பின் விக்ரமுக்காக சம்மதிக்கிறார்.
அந்த ராத்திரி ஒரு வாசிப்பாளரை அழைத்து இரவு முழுவதும் வாசித்து பழகுகிறார் விக்ரம். அடுத்த நாள் புண்ணாகியுள்ள விரல்களோடு டேக்கில் அவர் வாசித்ததை கண்ட வினயன் ஆச்சர்யப்பட்டு போகிறார்.. படம் வெளியாகி மதுரையில் ஒரு தியேட்டரில் விக்ரமும் வினயனும் வெளியே வர 'மகனே காசி' என சிலப் பெண்கள் ஓடி வந்து விக்ரமை கட்டிப் பிடித்து அழ அதிசயமாக பார்த்து வியக்கிறார் வினயன்...
காசி சூப்பர் ஹிட். ரஹ்மான் பெருவெற்றிகளோடு பவனி வந்தபோது இளையராஜா- ஹரிஹரன் கூட்டணி அழகாக வெற்றியை பெற்றது காலத்தின் கட்டாயம்.. என்னக்கென்னவோ இப்படத்தில் மணியின் ரீச்சை விக்ரம் எட்டவில்லையோ என்றே தோன்றுகிறது.. தங்கை இறந்ததும் மணி வில்லனின் கழுத்தைப் பிடித்து இறுக்கிக் கொல்லும் காட்சியில் மணியின் முகத்தில் தெரியும் வெறி.... அப்பப்பா... எந்த நடிகனும் செய்யாத நடிப்பு... விக்ரமால் அதை தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை.
மணி...We really miss you... இவ்வாறு தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications