விஷாலை பத்திரமாக சேரில் உட்கார வைத்த விஜய் ஆண்டனி! உருகும் ரசிகர்கள்
சென்னை: மதகஜராஜா படம் கிட்டதட்ட 13 வருடங்கள் கழித்து வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஷால் விரைந்து குணம்பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் இணையதளங்களில் உருக்கமாக கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக மதகஜராஜா படம் அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்தே மதகஜராஜாவை படக்குழுவினர் எம்ஜிஆர் என்றே அழைத்து வந்தனர். இப்படத்தின் ஷூட்டிங்கும் அப்போதே விரைந்து முடிக்கப்பட்டது. ஆனால், படம் மட்டும் திரைக்கு வரவேயில்லை..

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
சிறப்பு தோற்றம்: இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருப்பதாக கூறப்பட்டது. அதேபோல, நடிகை சதா ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்தது.
இந்நிலையில் 12 வருடங்களுக்கு பிறகு, ஜனவரி 12ம் தேதி தியேட்டரில் வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி அதாவது படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்க, விஷால், சுந்தர் சி, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மேடையில் படத்தை பற்றி பேசினார். "சமீபகாலமாக தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணிக்கையளவில் குறைந்து வருகின்றன. அப்படி உள்ள தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குநருக்கும் அவரது படைப்பு திறனுக்கும் வாய்ப்புக் கொடுப்பது குறைவுதான். அதை ஜெமினி தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும்.
விஜய் ஆண்டனி: விஜய் ஆண்டனிக்கு நான் நன்றி சொல்கிறேன்... விஜய் ஆண்டனி என்னிடம் சொல்லும்போது, "எனக்கு ஒரு பாடகர் தேவைப்படுகிறார். அவர் இனிமேல் பாடவேக்கூடாது. அப்படி ஒரு பாடகர், நீங்கள்தான்" என்றார்" என்று கூறினார்.
விஷால் இப்படி சொல்வதற்குள்ளேயே கைகள் பயங்கரமாக நடுங்க ஆரம்பித்துவிட்டன. குரலிலும் நடுக்கம் வெளிப்பட்டது. இதைப்பார்த்த நிகழ்ச்சி குழுவினர், உடனடியாக சோஃபா ஒன்றை அவர் அருகே கொண்டு வந்து போட்டனர்.
சிறந்த நடிகர்: தொடர்ந்து விஷால் பேசும்போது, "இந்த வருடத்தில், சிறந்த நடிகருக்கான விருது எனக்கு கிடைக்காமல் கூட போகலாம்... ஆனால் சிறந்த பாடகருக்கான விருது கிடைக்கும்" என்றார்.
உடனே டிடி குறுக்கிட்டு, "விஷால் சார், நீங்கள் இந்தக் கதையில் குறிப்பிட்ட விஜய் ஆண்டனி அவர்களையும், சுந்தர் சி அவர்களையும் மேடைக்கு அழைக்கலாமா? நீங்கள் 3 பேரும் உட்கார்ந்து இதைப்பற்றி பேசினால் சிறப்பாக இருக்கும். முதன்முதலா பாட்டுப்பாடி வைரல் ஆனது நீங்கதான்... இன்னைக்குக்கூட வைரல் காய்ச்சலோடுதான் வந்திருக்கீங்க" என்றார்..
டிடி விளக்கம்: டிடி அப்படி சொன்னபோதுதான், விஷாலுக்கு வைரல் காய்ச்சல் என்பதே அனைவருக்கும் தெரியவந்தது. ஆனாலும், விஷாலின் கை நடுக்கத்துடனேயே காணப்பட்டது.. அவரது பேச்சிலும் தடுமாற்றம் நிறைந்திருந்தது. உடல்நிலை குறித்த விளக்கத்தை டிடி தெரிவித்துவிட்டாலும், விஷாலுக்கு என்ன ஆச்சு என்றே பலரும் கேட்டு வருகிறார்கள்.
பட புரோமஷனுக்காக காய்ச்சலுடன் வந்ததால்தான் விஷாலின் கைகள் நடுக்கம், குரலில் பதற்றம் இருந்ததாக கூறப்பட்டாலும், விஷாலால் நின்று பேச முடியவில்லை.. இதனால், உடனடியாக ஒரு சேர் வரவழைத்து அவரை உட்கார வைத்தனர்.. விஜய் ஆண்டனி மேடைக்கு வந்தபோதுகூட, விஷாலின் கைகளை பிடித்து சேரில் உட்கார வைத்தார்.
வேண்டுகோள்: விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ பதிவு, இணையத்தில் பெரும் வைரலான நிலையில், விஷால் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைவு தெரிவித்து வருகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே பார்த்துவிட்ட விஷாலை, இப்படி பார்க்க வருத்தமாக உள்ளதாக அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.. உடல்நலனில் இனியாவது அக்கறை காட்ட வேண்டும் என்றும் அக்கறையுடன் அட்வைஸ் தந்து கொண்டிருக்கிறார்கள்.
விஷாலின் இந்த நிலைக்கு வைரல் ஜூரம் மட்டும்தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. எனினும் விஷால் சார் உடம்பை பார்த்துக்குங்க என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சபாஷ்: அதேபோல, விஷாலின் கெட்டப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருக்கவும், ரசிகர்கள் குழப்பமடைந்துவிட்டார்கள்.. எனினும், கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு படம் ரிலீஸ் ஆக உள்ளதால், அந்த விழாவை புறக்கணிக்க கூடாது என்கிற நோக்கத்தில் காய்ச்சலுடன் பங்கெடுத்து கொண்டுள்ளதற்கு விஷாலுக்கு பாராட்டையும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications