"அந்த நடிகை" விஷாலை ஓவரா அடிப்பாங்களாமே? டிரைவர் மடியில் தலைவைத்து.. போட்டுடைத்த பிரபலம்..இது நிஜமா
சென்னை: உடல் மெலிந்து காணப்படும் விஷால், குணம் பெற்று வர எப்படியும் 6 மாத காலமாகும் என்றும், இயற்கை வைத்தியம் மூலம் சிகிச்சை மேற்கொண்டால் விரைந்து குணமடைய வாய்ப்புள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் அந்தணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Aram Naddu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள வலைப்பேச்சு அந்தணன், "எனக்கு தெரிந்த டைரக்டர் ஒருவர், தயாரிப்பாளருடன் விஷாலை சந்திக்க கடந்த மாதம் சென்றிருக்கிறார்.. புதிய படம் ஒன்றிற்கு அட்வான்ஸ் தந்துவிட வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளரும், டைரக்டரும் சென்றிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்: அப்போது விஷால் வீட்டில், டைரக்டரை கீழேயே உட்கார வைத்துவிட்டு, தயாரிப்பாளர் மட்டும் மேலே சென்று விஷாலை சந்தித்துள்ளார்.. பிறகு 15 நிமிடம் கழித்து கீழே இறங்கிவந்த தயாரிப்பாளர், டைரக்டரை விஷாலை சந்திக்க அழைத்து செல்லாமல், கையோடு வெளியே அழைத்து வந்துவிட்டாராம்.
ஏன் விஷாலை தான் சந்திக்க வேண்டாமா? என்று கேட்டதற்கு, "இப்போதைக்கு வேண்டாம்.. வேறு ஹீரோவை வைத்து படம் செய்து கொள்ளலாம். படத்தில் நடிக்கும் நிலையில் விஷால் இல்லை" என்று சொன்னாராம். இந்த தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்ட அந்த டைரக்டர், அன்று தயாரிப்பாளர் என்னை ஏன் விஷாலிடம் அழைத்து செல்லவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது என்று வேதனையுடன் சொன்னார்.
முதல் புள்ளி: "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது உண்மையென்றாலும், விஷாலின் இந்த நிலைமைக்கு முதல் புள்ளியை பாலாவிடம்தான் வைக்க வேண்டியிருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே ஆர்வமாக நடித்து கொண்டிருந்தார் விஷால். சண்டைக்கோழி, திமிர் இந்த 2 படங்களும் 40 கோடிக்கு ஆந்திராவில் வசூல் செய்ததாம். அன்றைய தினத்தில் இது மிகப்பெரிய வசூலாகும்.
சத்யம் பட டைரக்டர் என்னுடைய நெருங்கிய நண்பர் ஆவார்.. ஆந்திரா முழுக்க சத்யம் படத்துக்கு 1 கோடி ரூபாய்க்கு விஷாலுக்கு பேனர் வைத்தார்களாம்.. அந்த அளவுக்கு ஆந்திராவில் பிரபலமான விஷாலை, அவன் இவன் படத்தின் ஆபரேஷனால் எல்லாமே மாறிவிட்டது. மாறுகண் தைப்பதற்கு, பாலா சொல்லும்போதே, விஷால் உஷாராகியிருக்கணும்.
டிரைவர் மடி: ஆனால், இப்போது பல தகவல்களை விஷாலை பற்றி சொல்கிறார்கள்.. அதாவது, இவரிடம் நீண்ட காலமாக பணியாற்றும் டிரைவரின் மடியில், தலைவலி தாங்காமல் போய் படுத்து கொள்வாராம் விஷால்.. அந்த டிரைவரும், விஷாலின் தலையை மெல்ல பிடித்துவிடுவாராம். இப்படியெல்லாம் தலைவலியால் அவஸ்தைக்கு ஆளாகியிருக்கிறார்.
எனினும், ஒரு வலியை மறக்க இன்னொரு வலிக்குள் விழுந்துவிட்டார்.. விஷாலை குறை சொல்லவே சங்கடமாக இருக்கு.. ஆனால், இந்த பழக்கத்தை அவர் தவிர்த்திருந்தால், இன்று இந்த கொடுமையை அனுபவித்திருக்க வேண்டாம்.
லிவிங் டூகெதர்: ஒரு நடிகையுடன் விஷாலுக்கு அன்று நெருங்கிய தொடர்பு இருந்தது.. அந்த நடிகைக்கு திருமணமாகிவிட்டது. அவரது பெயரை இப்போது சொல்வது சரிகிடையாது. ஆனால் அவருடன் லிவிங் டூகெதரில் இருந்தபோது, குடித்துவிட்டு வந்தாலே, விஷாலை போட்டு அடிப்பாங்களாம் அந்த நடிகை.
ஏதாவது பார்ட்டி என்றால், முன்கூட்டியே நடிகைக்கு போன் செய்து, விஷயத்தை சொல்லி, அனுமதி கேட்டபிறகே தண்ணி அடிப்பாராம்.. நடிகையிடம் அந்த அளவு பயந்து நடந்து கொண்டாராம். நடிகையும் விஷாலை அந்த அளவுக்கு தன்னுடைய கன்ட்ரோலிலேயே வைத்திருந்தாராம். ஆனால், அந்த காதலும் முறிந்துபோய்விட்டது. ஒருவேளை அந்த நடிகையுடன் வாழ்க்கை அமைந்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது.
இயற்கை வைத்தியம்: விஷாலின் பெற்றவர்கள் மனம் என்ன பாடுபடும்? கட்டாயப்படுத்தியாவது திருமணத்தை அவருக்கு முன்பே செய்து வைத்திருக்கணும்.. விஜயகாந்த் கிட்டஇல்லாத பணமா? விஜயகாந்த்துக்கு செய்யாத சிகிச்சையா? ஆனாலும் குணப்படுத்த முடியவில்லை.
இப்போதுகூட பல இடங்களில் விஷால் சிகிச்சைகளை எடுத்து கொண்டுள்ளார். ஆனால், இயற்கை வைத்தியங்களை முயற்சித்தாலும் விரைந்து குணமாகும். எப்படியும் அவர் பழைய நிலைமைக்கு திரும்ப, குறைந்தது 6 மாத காலமாவது ஆகும்" என்று தெரிவித்துள்ளார் அந்தணன்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications