இப்போதான் உண்மையே தெரிகிறது! 4 நிமிஷத்தில் நடந்த மாற்றம்.. மீண்டும் கை நடுக்கத்துடன் பேசிய விஷால்
சென்னை: நடிகர் விஷால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மீண்டும் கை நடுக்கத்துடன் பேசி இருக்கிறார். அதோடு இப்போது என்னை யாரெல்லாம் நேசிக்கிறார்கள் என்று எனக்கு தெரிந்திருக்கிறது என்று அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் அடிக்கடி சமூக வலைத்தளத்திலும் பரபரப்பு ஏற்படுத்திவிடுகிறார். விஷால் தெலுங்கு நாட்டில் பிறந்து இருந்தாலும் தமிழிலேயே அதிகமான படங்களை நடித்திருக்கிறார். அதிலும் செல்லமே என்ற படத்திற்கு பிறகு தான் பெரிய அளவில் பிரபலமானார்.

அதற்கு பிறகு சண்டைக்கோழி, திமிரு போன்ற படங்கள் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. திரைப்படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இவர் பேசும் வார்த்தைகள் சமூக வலைதளத்தில் பலராலும் ட்ரோல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சில கருத்துக்களை தைரியமாக முன்வைத்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படத்தின் ஃப்ரீ ரீலிசின் போது கை நடுக்கத்துடன் விஷால் பேசியது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "ஐயோ விஷாலுக்கு என்ன ஆச்சு..?" என்பதுதான் அன்று முழுக்க பேச்சாக இருந்தது. சமூக வலைத்தளத்தில் விஷால் உடைய நிலைமை குறித்து பலரும் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வந்தனர்.
ஒரு சிலர் விஷாலுடைய நிலைமையை பார்த்து இனி விஷாலுடைய கதை அவ்வளவுதான் என்று வசைப்பாடி வந்தனர். ஆனால் அடுத்த வாரமே மதகஜராஜா திரைப்படத்தின் ரிலீஸின் போது கெத்தாக விஷால் பழைய நிலையில் வந்தார். விஷால் இனி எழுந்து நிற்கவே முடியாது என்று பேசியவர்கள் முன்பு விஷாலுடைய கம்பீரமான தோற்றம் பலரையும் "வாவ்" சொல்ல வைத்தது.

இந்த நிலையில் மதகஜராஜா திரைப்படத்திற்கு பிறகு பல கோவில்களில் விஷால் தரிசனம் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் நேற்று கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது பட்ஜெட் பற்றியும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெண்கள் சென்ற காரை சிலர் துரத்தி வந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து நான் என்ன சொல்ல வேண்டும் என்றாலும் அதை கைநடுக்கத்துடன் சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் தான் மக்கள் மத்தியில் அது விரைவாக செல்கிறது. கை நடுக்கத்துடன் நான் பேசிய வீடியோ இவ்வளவு பரபரப்பு ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவே இல்லை. நான்கு நிமிட வீடியோவால் உலகத்தில் எங்கெல்லாம் என்னை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு பத்திரிக்கையாளர்கள் காட்டிவிட்டார்கள். அதற்கு நான் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று விஷால் கூறியிருந்தார்
அதோடு விஷால் உடைய உடல்நிலை குறித்து சிலர் அவதூறு கருத்துக்கள் பரப்பியதற்காக சில youtube சேனல்கள் மீது வழக்கு தொடர இருக்கிறோம் என்று நடிகரும் தென்னிந்திய சினிமா சங்க தலைவராக இருக்கும் நாசர் தெரிவித்து இருந்தார். அது குறித்து விஷாலிடம் கேள்வி கேட்டபோது ஆமாம் என்னைப் பற்றி மட்டுமல்லால் சில நடிகர், நடிகைகள் பற்றியும் சிலர் youtube சேனல்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள்.
அதற்கு கடிவாளம் போட வேண்டும் என்று நாங்கள் அதற்கான ஒரு முயற்சிகளை எடுத்து இருக்கிறோம். நடிகர்கள் நடிக்கும் படங்கள் பற்றி உங்களுடைய கருத்துக்களை தாராளமாக பேசுங்கள். ஆனால் நடிகர்களின் குடும்ப விஷயங்கள், அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் பற்றி அவதூறு பரப்பாதீர்கள். அது எல்லோருக்கும் நல்லது கிடையாது.
அப்படி பரப்புபவர்கள் முதலில் அவர்களுடைய வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். அவதூறு பேசுபவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அடுத்தவர்களை பற்றி துளி கூட வருத்தம் இல்லாமல் கண்டதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் மூலமாக சரியான தண்டனை கிடைக்கும்.
என்னுடைய உடல் நிலையை குறித்து ஒரு டாக்டர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நபர் என்னென்னமோ பேசினார் அவர் டாக்டரா கமெண்ட்ரா என்று கூட எனக்கு தெரியாது. அவர் மூன்று மாதத்தில் என் நிலைமை அவ்வளவு தான், இனி என்னால் எழுந்து நடக்கக்கூட முடியாது என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். நான் இப்போது மீண்டும் வந்து விட்டேன். இதற்கு அவர் என்ன பதில் சொல்வார் என்று அந்த பேட்டியில் நடிகர் விஷால் பேசி இருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications