முதல் மனைவிக்கு புற்றுநோய்! எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை! கலங்கினேன்! விஷ்ணு விஷால் ஓபன் டாக்!
சென்னை: எனக்கு முதல் மனைவி ரஜினியுடன் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அவருக்கு கேன்சர் இருப்பது தெரியும். ஆனாலும் அவரை நான் திருமணம் செய்து கொண்டேன். எனினும் அவர் என்னுடன் மனக்கசப்பை ஏற்படுத்திக் கொண்டு நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் விவாகரத்து செய்து கொண்டார் என நடிகர் விஷ்ணு விஷால் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
விஷ்ணு விஷாலுக்கு ஏற்கெனவே ரஜினி (மூன்றாம் பிறை புகழ் நடிகர் நட்ராஜின் மகள்) என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவருடன் 8 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டு ஷட்டில் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்குத்தான் நடிகர் அமீர்கான் மிரா என பெயர் வைத்தார்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு முதல் மனைவியான ரஜினியுடன் திருமணம் ஆக ஒரு மாதம் இருந்த போது அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது. 'என்ன நடந்தாலும் உன்னை நான் பார்த்துக் கொள்வேன்' என சொல்லித்தான் திருமணம் செய்து கொண்டேன்.
6 ஆண்டுகள் வரை
திருமணம் செய்து 6 ஆண்டுகள் வரை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுடன் இருந்தோம். அந்த 6 ஆண்டுகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது நான் சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்தினேன். நான் முழுக்க முழுக்க சினிமா என கவனம் செலுத்தியதால் தன் மீது எனக்கு அக்கறை இல்லை என ரஜினி நினைத்துவிட்டார்.
மனக்கசப்பு
இதனால் அவருக்கு என்னுடன் மனக்கசப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விவாகரத்து வரை சென்றது. நான் வேண்டாம் என சொல்லியும் அவர் கேட்கவில்லை. ராட்சசன் படம் வெளியாகி அந்த படத்தின் வெற்றியை எல்லாம் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் நான் விவாகரத்தால் கலங்கி போய்விட்டேன்.
ரஜினியுடன் பழக்கம்
'எப்போதும் பார்த்துக் கொள்வேன் ' என அவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின்படி இன்று வரை ரஜினியுடன் பழகிக் கொண்டுதான் இருக்கிறேன் என விஷ்ணுவிஷால் தெரிவித்தார். காவல் துறை அதிகாரி ரமேஷ் குடாவ்லாவின் மகன்தான் விஷ்ணு விஷால்.
யார் இந்த விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடிக் குழு எனும் படத்தின் மூலம் நடிகராக விஷ்ணு விஷால் அறிமுகமானார். இந்த படம் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக் கூட்டம், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அருமையான படம்
நீர்ப்பறவை படத்திலும் அவர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். எனினும் அந்த படம் வசூல் ரீதியில் சொல்லிக் கொள்ளும்படி கலெக்ஷன் ஆகவில்லை. முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் நல்ல வெற்றியை தந்தன.
சூப்பர் ஹிட்
விஷ்ணு விஷால் ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு என வித்தியாசமாக கதாபாத்திரங்களில் நடித்தார். அதேபோல் அவருக்கு ராட்சசன், கட்டா குஸ்தி ஆகிய படங்களும் ஹிட்டாகின. ஆனால் கடைசியாக நடித்த லால் சலாம் தோல்வியடைந்தது.
பெண் குழந்தைக்கு பெயர்
இந்த நிலையில் அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அவர் குரல் கொடுத்து வந்தார். இதனிடையே அவருக்கு மகள் பிறந்தார். அந்த குழந்தைக்கு மிரா என நடிகர் அமீர்கான்தான் சூட்டினார். இதற்காக விஷ்ணுவும் ஜுவாலாவும் உருக்கமாக நன்றித் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications