காய்ச்சலில் தவித்த ஆலியா.. மகள் செய்த வேலையை பாருங்க! இப்படி எல்லாம் செய்யலாமா? கோவிச்சுட்டாங்க
சென்னை: நடிகை ஆலியா மானசா தன்னுடைய மகன் பிறந்தநாளை அந்தமானில் கொண்டாடிவிட்டு தற்போது தான் ஊருக்கு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய மகளிடம் தனக்கு காய்ச்சலாக இருக்கிறது என்று சொல்ல, அந்தக் குழந்தை செய்த செயலை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவ் ஆகவும் பெரும் பரபரப்பாகவும் இருக்கும் ஜோடி தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் தற்போது சீரியல்களில் இந்த அளவிற்கு நடித்துக் கொண்டிருக்கிறார்களோ அதே அதே போல நிஜ வாழ்க்கையிலும் எப்போதும் கேமராவோடு சுற்றிக் கொண்டிருக்கின்றனர். வீட்டிற்குள் தாங்கள் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் அப்படியே வீடியோவாக எடுத்து தன்னுடைய யூடியூப் சேனல்களில் தட்டி விடுவது வழக்கமாக இருக்கின்றனர்.

ஆலியா மானசாவிற்கு சமூக வலைதளத்தில் அதிகமான ரசிகர்கள் பல வருடங்களாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் ஆலியா மானசா தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு அடிக்கடி பதில் அழித்துக் கொண்டிருப்பார். ஆனால் இப்போது சூட்டிங் மற்றும் வீட்டிலும் குழந்தைகளோடு பிசி என்று காரணத்தை சொல்லி ரசிகர்களை கண்டு கொள்வதில்லை என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் தங்களுடைய மகனுடைய பிறந்த நாளை மாலத்தீவில் குடும்பத்தோடு குதூகலமாக கொண்டாடி மிகுந்திருந்தனர். ஒரே கலரில் குடும்பத்தோடு ஆடை அணிந்து விதவிதமாக கேக் வெட்டி தன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் பங்க்ஷனை பிரம்மாண்டமாக கொண்டாடிவிட்டு, தற்போது சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய வீட்டிலும் குழந்தைகளை வைத்து அடுத்த வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தன்னுடைய மகளான ஐலாவிடம் தனக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று கூறிக்கொண்டு ஆலியா நடிக்க அதற்கு அந்த குழந்தை ஒரு டாக்டராக மாறி அம்மாவை பார்த்துக் கொள்கிறது. அதை பார்த்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சஞ்சீவ் உங்களுக்கு இது எல்லாம் யாரு சொல்லிக் கொடுக்கா என்று கேட்க, அதற்கு ஆலியா நான் தான் என் குழந்தையை இவ்வளவு அழகா வளர்த்துக்கிட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார். இதுதான் ரசிகர்களுக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது தான்.
எப்போதுமே ஆலியா மானசாவின் குழந்தைகள் சஞ்சீவ் உடைய அம்மாவிடம் தான் வளர்ந்து வருகிறது. ஆலியா மானசா தன்னுடைய உடற்பயிற்சி மேற்கொள்வதற்காகவும் சூட்டிங்கிலும் பிசியாக இருக்கும் நிலையில் எப்போது குழந்தைகளை பார்த்துக் கொள்வார்? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இருந்தாலும் கடைசியில் அந்த வீடியோவில் ஆலியா மானசாவின் மகள் ஐலா தன்னுடைய தம்பியான அர்ஷ் மீது தெரியாமல் கை பட்டதால் அர்ஷ் அழுததால் ஆலியா திட்டி விட்டதால் கடும் கோபத்தில் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். அதை வைத்து ஆலியா கலாய்த்து கொண்டு இருக்க, இதுவும் க்யூட்டாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications