பிரபல நடிகைக்கு 2வது கல்யாணமா? மீனாவை அம்பிகா இடுப்பில் தூக்கி வைக்க பட்ட பாடு! ஆமா, இவர் சொல்வதென்ன
சென்னை: நடிகை மீனா முத்து படத்தில் நடித்தபிறகு ஜப்பானிலும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். வருடா வருடம் கோடை விடுமுறையில், 20 நாட்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு செல்வது மீனாவின் வழக்கமாகும். மீனாவுக்கு அன்றும், இன்றும் என்றும் உற்ற துணையாக இருப்பது அவரது அம்மாதான்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "அன்றைய லேடி சூப்பர் ஸ்டார் மீனா.. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என சூப்பர் ஸ்டார்களோடு நடித்த சூப்பர் ஸ்டார் நடிகை.. நெஞ்சங்கள் என்ற படத்தில் சிவாஜியின் மகளாக முதன்முதலாக நடித்திருப்பார்.. அப்போது 4, 5 வயதிருக்கும்.. பிறகு அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்தார்.. ரஜினி, அம்பிகாவின் மகளாக, எங்கேயோ கேட்ட குரல் படத்தில் நடித்திருந்தார்..

அம்பிகா பட்ட பாடு
அப்போது மீனா ரொம்ப குண்டாக இருந்தார்.. அந்த படத்தில் மீனாவை இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, அம்பிகாவால் மீனாவை தூக்க முடியவில்லையாம்.. "பக்கத்துல ஒரு சேர்வைங்க, அதில் கையில் தாங்கிக்கொண்டே மீனாவை தூக்கி இடுப்பில் வைத்து கொள்கிறேன்" என்று விளையாட்டாக சொல்வாராம் அம்பிகா.
ஓவர்நைட்டில் புக்கான 20 படங்கள்
இதற்குபிறகு பிறகு கஸ்தூரி ராஜாவின, ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார் மீனா.. ஆனாலும், ரஜினி ஜோடியாக எஜமான் படத்தில் நடித்ததுமே, ஓவர்நைட்டில் படங்கள் மீனாவுக்கு குவிய தொடங்கியது. அதாவது, வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதா நடித்தபோது, அனைவராலும் அவரது நடிப்பு பேசப்பட்டது..
ஆனால், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆருடன் நடித்தபோதுதான், ஜெயலலிதாவுக்கு மளமளவென ஓவர்நைட்டில் 20 படங்கள் புக்காயின. எம்ஜிஆருடன் நடித்த நடிகை என்பதால், இந்திய அளவில் அப்போதுதான் கவனிக்கப்பட்டார்.. அதுபோலவே ரஜினியுடன் மீனா நடித்ததுமே, தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்..
மீனாவுக்கு 2வது திருமணம்?
மீனாவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 7 மொழிகள் தெரியும்.. அத்தனை மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் மீனா. 2வது கல்யாணத்துக்கு நிறைய ஆஃபர்கள் மீனாவுக்கு இன்னமும் வந்துகொண்டுதான் இருக்கிறது.. அதற்கு காரணம், இன்றும் மீனா அழகாகவே இருக்கிறார்.. புத்திசாலியான பெண் என்பதுடன் நல்ல பெண்ணும்கூட.
எனவே, பெரிய பெரிய விஐபிகள், தொழிலதிபர்கள் என பலரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், மீனா அதனை விரும்பவில்லை.. எனினும், அவரது 2வது திருமணம் குறித்த சர்ச்சைகள் அடிக்கடி வெளியாவதால், அதிகமாக மனம் வேதனைப்பட்டுள்ளார் மீனா.
மீனாவின் மகள்
மீனாவின் மகள் மிகவும் புத்திசாலி... இப்போதைக்கு மீனா டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறார்.. தன்னுடைய மகளின் படிப்பு, எதிர்காலத்தில் மட்டுமே பிரதானம் கவனத்தை மீனா செலுத்தி வருகிறார்.
முத்து படத்தில் நடித்தபிறகு ஜப்பானிலும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். வருடா வருடம் கோடை விடுமுறையில், 20 நாட்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு செல்வது மீனாவின் வழக்கமாகும். மீனாவுக்கு அன்றும், இன்றும் என்றும் உற்ற துணையாக இருப்பது அவரது அம்மாதான்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications