சீக்ரெட்டை போட்டுடைத்த அனன்யா.. "எங்கேயும் எப்போதும்" படத்தில் அஞ்சலியின் மணிமேகலை கேரக்டரில் அமுதா?
சென்னை: 2024 எல்லாருக்குமே நிறைய கஷ்டங்களை தந்துவிட்டது. வரப்போகும் 2025 வருஷம் அனைவருக்கும் நல்லதா அமையணும்" என்று பிரபல நடிகை அனன்யா விருப்பம் தெரிவித்துள்ளார். அத்துடன் தான் நடித்த எங்கேயும் எப்போதும் படம் குறித்த நினைவுகளையும் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Wow Tamizhaa யூடியூப் சேனலுக்கு, நடிகை அனன்யா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் தான் படித்த படங்கள் குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.. குறிப்பாக எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தது பற்றி சொல்லும்போது, "தமிழில் படங்களை நடிக்க துவங்கியபோது, ஒருநாள் "எங்கேயும் எப்போதும்" படத்தின் கதையை டைரக்டர் சரவணன் சார் எனக்கு சொன்னார்.. ஆனால், அந்த கதை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்விட்டேன்.

கொஞ்ச நாள் கழித்து , மறுபடியும் என்னுடைய வீட்டுக்கே வந்து கதையை சொன்னார். ஆனால், அஞ்சலி நடிக்கவிருந்த கேரக்டரைதான் எனக்கு சொன்னார்.. பிறகு 2 நாள் கழித்து, முருகதாஸ் சார் போன் செய்து, நீ நடிக்க வேண்டியது அஞ்சலி கேரக்டர் கிடையாது, அமுதா என்ற இன்னொரு கேரக்டர் என்றார்.
அமுதா: வெறும் அமுதா என்று பெயரை மட்டும் சொன்னாரே தவிர, அந்த கேரக்டர் பற்றி விரிவாக சொல்லவில்லை. அதற்கு பிறகே, டைரக்டர் அந்த கேரக்டரை எடுத்து சொல்லவும், எனக்கு பயம் வந்துவிட்டது. என்னால் அவ்வளவு பெரிய கேரக்டரை செய்ய முடியுமா? என்று தயக்கம் வந்தது. ஆனால், என் மீது அனைவருமே நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை தந்தார்கள்.
நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படம் மாதிரி ஏன் நடிப்பதில்லை என்று கேரளாவில்கூட என்னை கேட்கிறார்கள்..
இதற்கு காரணம், டைரக்டர்கள் எனக்கு சின்ன சின்ன விஷயங்களைகூட அன்று சொல்லி தந்ததுதான்.
வாய்ஸ் நோட்: ஒவ்வொரு இயக்குனர்களிடமிருந்தும் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். பெரும்பாலும் ஸ்கிரிப்டைதான் முன்கூட்டியே தருவார்கள். ஆனால், எனக்கு அது சம்பந்தமான வாய்ஸ் நோட்டும் அனுப்புவார்கள்.. அதில், என்னுடைய கேரக்டர், மாடுலேஷன், டயலாக், சிச்சுவேஷன் என அனைத்தையுமே விளக்கி சொல்லுவார்கள். இதுதான் எனக்கு பலத்தை தந்தது. எத்தனை முறை, டயலாக் குறித்து சந்தேகம் கேட்டாலும், சொல்லி தருவார்கள்.
நிறைய கேரக்டர்கள் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருக்கிறது. ஆனால், எதிர்பார்க்கும் கேரக்டர்கள் இன்னும் எனக்கு அமையவில்லை. இப்போது நடித்துள்ள திருமாணிக்கம் படத்திலும் நிறைய எமோஷனல் சீன்கள் இருந்தது.. எனக்காகவே ஒருநாள் முழுக்க ஒதுக்கினார்கள்.. பெரிய வசனத்தை மனப்பாடம் செய்து, எமோஷனலுடன் சொல்ல வேண்டியிருந்தது.
நல்லா இருக்கணும்: புதுவருடம் துவங்கும்போது தீர்மானம் எதுவும் எடுக்க மாட்டேன்.. இது வாழ்க்கை.. எதையும் முன்கூட்டியே முடிவு செய்து, முடிவெடுக்க முடியாது.. நாம் எதிர்பார்த்து எதுவும் நடக்காமல் போய்விட்டால், தேவையில்லாமல் மனசு கஷ்டம்.. அதனால், வருவதை ஏற்றுக் கொண்டு வாழ்வே சிறப்பு.. இந்த 2024 எல்லாருக்குமே நிறைய பிரச்சனையை தநதுவிட்டது. வரப்போகும் 2025 வருஷம் அனைவருக்கும் நல்லதா அமையணும்" என்றெல்லாம் அனன்யா தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications