கனவு நிறைவேறியது! மகிழ்ச்சியில் பதிவு வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்து வரும் நடிகை அணிலா ஸ்ரீகுமார் தன்னுடைய பல வருட கனவு நிறைவேறியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அணிலா சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக இப்போது அதிகமான தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமாகி இருக்கிறார். ஆனால் இந்த சீரியலுக்கு முன்பே சின்னத்தம்பி, பாவம் கணேசன் போன்ற சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான்.

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை மட்டும் பிடிக்காத மாமியாராக, மற்ற இரண்டு மருமகள்களுக்கு விஜயா ஓரவஞ்சனை செய்து கொண்டிருக்கிறார். இதனாலேயே இவரை ஊரெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் தன்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் இது என்று இவர் சந்தோஷமாக பேட்டிகளில் பேசி இருக்கிறார்.
சீரியல்களில் அம்மாவாக அணிலா நடித்துக் கொண்டிருந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு ஜோடி சீசன் 10 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அவருடைய டான்ஸ் திறமையை பார்த்து பலரும் மெய்சிலிர்த்து இருந்தனர். அணிலாவின் சொந்த ஊர் கேரளா தான்.

அவர் கேரளாவில் இருந்து தமிழில் முதலில் நடிக்க வந்தபோது, தமிழில் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், உன்னால் அங்கு நிலைத்து நிற்க முடியாது என்று அவருடைய நண்பர்களே சொல்லி இருக்கிறார்கள். அதனால் அணிலாவிற்கு முதலில் பயம் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது தமிழ் ரசிகர்களின் மனதில் மாமியாராகவும், அம்மாவாகவும் அணிலா நினைத்து நிற்கிறார்.
அதுபோல இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய சொந்த ஊரான மலையாளத்தில் சீரியலில் நடிக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார் எனக்கு மாதத்தில் 30 நாட்கள் தான் இருக்கிறது, இன்னும் பத்து நாட்கள் இருந்தால் இன்னும் ஒரு சீரியலிலும் நடிக்கலாம் என்று ஆசையாக இருக்கிறது என்று சொல்லி இருந்தார்.

இப்போது அவருடைய ஆசை நிறைவேறி இருக்கிறது. அதாவது மலையாளத்தில் பவித்திரம் என்ற சீரியலில் இவர் அம்மா கேரக்டரில் நடிக்கிறார். இது குறித்து சந்தோஷமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவித்திரம் சீரியல் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இதுவரைக்கும் ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் நடித்து வந்த அணிலா இப்போது மூன்று மொழிகளிலும் நடிக்கிறார் இதனால் இவர் ஒரு சீரியலில் இருந்து விலகுவாரா என்று கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கிறது. அது குறித்த கமெண்ட்களும் ரசிகர்கள் போட்டு இருக்கிறார்கள். அதற்கு அணிலா கண்டிப்பா இல்ல நான் விலக மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஒரே நேரத்தில் மூன்று சீரியல்களிலும் முக்கிய கேரக்டரில் அணிலா நடிக்கும் நிலையில் அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை சொல்லிக்கொள்ளலாம்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications