Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயம் தியேட்டர் வாசலில் படுத்த பிரபல நடிகை அஞ்சலி.. சென்னை ஜவுளிக்கடையில் சேல்ஸ் கேர்ள்? ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அங்காடித்தெரு படத்தில் அஞ்சலி நடிக்க முடிவானது எப்படி? அந்த படத்தில் அஞ்சலியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 2 சம்பவங்கள் என்னென்ன? என்பது குறித்து பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "வசந்தபாலன் இயக்கத்தில், பிரபல ஜவுளிக்கடையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அங்காடித்தெரு.. ஜவுளிக்கடை தொழிலாளர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிய படம்..

Dindigul feast spirituality

ஜவுளிக் கடையில் 16 மணி நேரம், குறிப்பாக பெண்கள் நின்றுகொண்டே வேலை பார்க்க வேண்டும், உட்காரவே கூடாது.. என்பதற்கான ஸ்கிரிப்ட்டை வசந்த பாலன் தயாரித்தார்..

சேல்ஸ் கேர்ள் பணிகள்

மகேஷ் என்ற கதாநாயகனை தேர்ந்தெடுத்தாலும், சேல்ஸ் கேர்ளாக யாரை நடிக்க வைப்பது என்று யோசித்தார்.. சேல்ஸ் கேர்ள்களின் வலியை சொல்லும் படம் என்பதுதான் படத்தின் மையக்கரு என்பதால், அதற்கான கதாநாயகியை தேடினார்கள்..தென்மாவட்டத்திலிருந்துதான் அந்த கடைக்கு அப்போதெல்லாம் பெண்களை வேலைக்கு அமர்த்துவார்கள்.. எனவே, அதுபோன்ற சாயலிலும், பக்கத்து வீட்டு பெண்களை போலவே இருக்க வேண்டும் என்ற சாயலிலும் ஹீரோயின்கள் தேடப்பட்டார்கள்.

இதற்காக ஹிந்தியிலிருந்துகூட ஹீரோயின்கள் வந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் சேர்ஸ் கேர்ள் போல இல்லை.. ஒருநாள் டிவியில், கற்றது தமிழ் படத்தை வசந்தபாலன் பார்த்து கொண்டிருந்தபோதுதான், அஞ்சலியை பார்த்து வியப்படைந்தாராம்.

கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு

கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தோமே என்று நினைத்து, அஞ்சலியிடம் வசந்த பாலன் தன்னுடைய படம் குறித்து பேசியிருக்கறார். கமர்ஷியல் படங்களில் நடிக்க வேண்டும், அஜித், விஜய் போன்றோருடன் நடிக்க வேண்டும் என்று ஆசையில் இருந்த அஞ்சலி, தனக்கு எல்லாமே ஒரே மாதிரியான படங்களாகவே வருகிறதே என்று தயங்கியிருக்கிறார்.

இந்த கதைக்கு நான் சரியாக இருப்பேனா சார்? என்று அஞ்சலி சந்தேகத்துடனும் கேட்டுள்ளார். பிறகு டைரக்டர் தந்த உறுதி, பெரிய சம்பளம் போன்ற காரணங்களால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

நிறைய சேல்ஸ் கேர்ள்களை நேரில் பார்த்திருக்கிறேன், தன்னால் நடிக்க முடியும் என்று அஞ்சலி சொன்னாலும், "4 மணி நேரமாவது ஏதாவதொரு பெரிய ஜவுளி கடையில் நின்று, சேல்ஸ் கேர்ள் செய்யும் பணிகளை கவனிக்க வேண்டும், முடிந்தால் அவர்களிடம் பேசுங்கள்" என்றாராம் டைரக்டர்.

உடைச்ச கடலை, சுக்கு காபி

அந்தநேரத்தில், ஒரு படம் மட்டுமே நடித்திருந்ததால், அஞ்சலியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. டைரக்டர் சொன்னதுபோலவே, பண்டிகை நேரத்தில், சேல்ஸ் கேர்ள் பணிகளை கவனித்துள்ளார்..

கஸ்டமர்களுக்கு துணிகளை எடுத்து போட்டபடியே, சாப்பிடக்கூட நேரமில்லாமல் வேலை பார்த்துள்ளனர்.. கடை ஓனர் தரும், வெறும் உடைச்சக்கடலை, சுக்குகாப்பியை மட்டுமே குடித்துவிட்டு, அந்த பெண்கள் செய்யும் பணிகளை பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தாராம் அஞ்சலி..

இதை தன்னுடைய டைரக்டரிடம் சொல்லி, உடனே படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், தான் ஏற்கனவே தெலுங்கில் நடிப்பதற்காக வாங்கியிருந்த 2 படத்துக்கான அட்வான்ஸ் பணத்தையும், இந்த அங்காடித்தெரு படத்துக்காக திருப்பி தந்துவிட்டாராம் அஞ்சலி. பிறகு அங்காடித்தெரு கடையில் வரும் செட் போடப்பட்டது.

உதயம் தியேட்டர் வாசல்

இந்த அங்காடித்தெரு படம் எடுக்கும்போது, அஞ்சலிக்கு மனரீதியான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதாவது, அஞ்சலியும், அவரது தங்கையும், சென்னை உதயம் தியேட்டர் முன்புள்ள பிளாட்பாரத்தில் படுத்து தூங்குவது போலவும், வீராணம் ராட்சத குழாய்களில் தங்குவது போலவும், நடிக்க வேண்டும் என்று சொன்னதுமே, அந்த சீன்களில் நடிக்க மறுத்தாராம் அஞ்சலி. பிறகு, டைரக்டரின் கட்டாயத்தில், வேண்டாவெறுப்பாக அந்த சீன்களை நடித்து தந்துள்ளார்.

இதனால் டைரக்டர், அஞ்சலியை சமாதானம் செய்வதற்காக, அதுவரை அந்த படத்தில் எடுக்கப்பட்ட அஞ்சலியின் சீன்களை எல்லாம் அவருக்கே போட்டு காட்டியிருக்கிறார். அதையெல்லாம் பார்த்ததுமே, அஞ்சலிக்கு டைரக்டர் மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்து, படத்தில் ஈடுபடுத்தி கொண்டு நடித்தார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+