அர்னவ் நல்லவன் இல்ல! கல்யாணத்துக்கு நான் போனேன்! ஆனால், என்கிட்டயே அப்படி கேட்டார்! அனுராதா பேட்டி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நேற்று அர்னவ் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவரோடு செல்லம்மா சீரியலில் நடித்த நடிகை அனுராதா அர்னவ்வைப் பற்றி சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நேற்று அர்னவ் நடந்து கொண்ட விதம் தான் பேசப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் வரலாற்றில் எந்த போட்டியாளரும் செய்யாத செயலை அர்னவ் செய்திருந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் என்னதான் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தாலும் எவிக்ஷன் ஆகி வெளியே வந்து தொகுப்பாளர் முன்பு நின்று கொண்டு சக போட்டியாளர்களிடம் பேசும்போது எல்லோரும் பழைய பகையை மறந்து பேசிக்கொள்வார்கள். ஆனால் நேற்று தன்னுடைய மொத்த வன்மத்தையும் ஆண் போட்டியாளர்கள் இடம் அர்னவ் கொட்டி இருந்தார். அதை விஜய் சேதுபதி கண்டித்து திட்டியும் இருந்தார்.

இதனால் இணையத்தில் அர்னவ் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அர்னவைப் பற்றி நடிகை அனுராதா பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அனுராதா பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். தற்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அர்னவ் நடித்த செல்லம்மா சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அனுராதா அர்னவ் பற்றி கலாட்டா youtube சேனலில் பேசும்போது,அர்னவ் நல்லவன் எல்லாம் கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் எங்களிடம் எல்லாம் நன்றாக தான் ஆரம்பத்தில் பேசுவார். ஆனால் அவருடைய நிஜ கேரக்டர் என்று பார்த்தால் என்னை பொருத்தவரைக்கும் மோசம் என்று தான் சொல்வேன். அன்ஷிதா மற்றும் அர்னவ் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது எதார்த்தம் என்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நிஜத்தில் அப்படியெல்லாம் கிடையாது.அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் சூட்டிங் ஸ்பாட்டில் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்கள் என்று நாங்களே கண்ணால் பார்த்து இருக்கிறோம். ஆனால் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்யும்போது அந்த திருமணத்திற்கு எங்களை கூப்பிட்டு இருந்தார். நானும் இன்னும் இரண்டு நடிகைகளும் அந்த திருமணத்திற்கு போயிருந்தோம்.
அர்னவ் கல்யாணம் செய்த அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. அர்னவுடன் ஐந்து வருடம் லிவிங்கில் வாழ்ந்தது. அப்போது திவ்யாவிற்கு அர்னவ் சில பெண்களோடு உள்ள தொடர்பு தெரிந்ததால் தான் திருமணத்தை விரைவில் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து பிரச்சனை செய்து தான் திருமணத்தை செய்தது. அந்த திருமணத்திற்கு நாங்கள் சென்றபோதுதான் திவ்யாவை முதன் முதலில் சந்தித்தோம்.
அதற்கு முன்பு திவ்யா யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் திருமணத்திற்கு பிறகு அன்ஷிதாவோடு அர்னவ் பழகுவதை நாங்கள் திவ்யாவிடம் சொல்லிவிட்டோம் என்று அர்னவ் என்னிடம் கோபப்பட்டார். உங்களால் தான் எங்களுடைய வீட்டில் பிரச்சனை என்று சொன்னார். என்னிடம் அவர் அப்படி கேட்டது எனக்கு கோபமாக இருந்தது. காரணம் நான் திவ்யாவிடம் எதுவும் சொல்லவே இல்லை.
செல்லமா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஒருவர்தான் திவ்யாவிடம் சொல்லிக் கொடுத்தது. ஆனால் உண்மை தெரியாமல் அர்னவ் என்னிடம் கோபப்பட்டார். நான் திட்டி விட்டு விட்டேன். அவனுடைய கல்யாணத்தில் நான் கலந்து கொண்டதுதான் தப்பு என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் அவன் என்னை பலிகடா ஆக்கிவிட்டான்.
அதுபோல திவ்யா அவ்வளவு அவசரமாகஅர்னவை கல்யாணம் செய்து இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அவங்க இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இருந்தால் அவனுடைய ட்ரூ கலர் வெளியே வந்து இருக்கும் என்று அந்த பேட்டியில் அனுராதா பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications