35 லட்சம் ஒரு நைட்டுக்கு வாங்கிய நடிகை.. அதுவிடுங்க, தேர்தலே நடக்குமான்னு தெரியலயே.. பிரபலம் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரபேல் விமானங்கள் என்னாச்சு என்று ராகுல் கேட்டால், விமானிகள் பத்திரமாக இருப்பதாக சொல்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரம் அதிகமாக உள்ளதால், 2026ல் தேர்தல் நடத்துவது சரியல்ல, இன்னும் ஒரு வருடம் கழித்து நடத்தலாம் என்று மோடி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று டாக்டர் காந்தராஜ் கருத்து கூறியிருக்கிறார்.

டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை எப்ஐஆர் பதிவு செய்தது. இதையடுத்து, தாமாக முன்வந்து டாஸ்மாக் தொடர்பான இடங்களில் திடீர் சோதனைகளை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிவித்தது.

டாஸ்மாக் விசாரணை

டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விசாகனின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது விசாகனின் வீட்டருகே, கிடந்த சில ஆவணங்களை கைப்பற்றியதையடுத்து ரத்தீஷ் என்பவரை ரத்தீஷை விசாரிக்க அமலாக்கத்துறை அவரது வீட்டிற்கு சென்றது. ஆனால், அவர் அங்கு இல்லை என்பதால், அமலாக்கத்துறையினர் வீட்டுக்கு பூட்டு போட்டனர்.

இந்த ரத்தீஷ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என தகவல் வெளியானதையடுத்து, இந்த விஷயம் பெரும் பரபரப்பாகி கொண்டிருக்கிறது. அதேபோல, தயாரிப்பாளரும், டான் பிக்சர்ஸின் உரிமையாளருமான ஆகாஷ் பாஸ்கரனும் விசாரணை வளையத்தில் உள்ளார்..

சிவகார்த்திகேயன்

தனுஷின் இட்லி கடை , சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி , சிம்பு நடிக்க இருக்கும் எஸ்.டி.ஆர் 49 , அதர்வா நடிக்கும் இதயம் முரளி போன்ற படங்களை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.. 500 கோடி ரூபாய் மதிப்பிலான படங்களை ஒரே நேரத்தில் தயாரிப்பதால், சந்தேகம் கிளம்பியிருக்கிறது. எனவே, இப்படங்களில் நடிக்க சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் விசாரணை நடக்கலாம் என்கிறார்கள்.

இதேபோல, இளம் நடிகை ஒருவரும் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக சோஷியல் மீடியாவில் தகவல் கசிந்து வருகின்றன.

பிரபல நடிகை

இந்த ஊழலில் தொடபுடையவர்கள் நடத்திய பார்ட்டிக்கு இளம் நடிகை ஒருவரும் கலந்துகொண்டதாகவும், ஒரு இரவு பார்ட்டியில் விருந்தினராக செல்ல ரூ.35 லட்சம் சம்பளமாக பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளன. இந்த தகவல்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம், நடிகையின் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை

இந்நிலையில், Retro Voice என்ற சேனலில், உதயநிதியை அமலாக்கத்துறை குறி வைக்கிறதா? என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டாக்டர் காந்தராஜ், "இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதானே? தேர்தல் நெருங்க நெருங்க எதிர்க்கட்சி வீடுகளில் ரெய்டு செய்வதுதானே வேலை? பாஜகவின் டெக்னிக் இது..

அதே டெக்னிக்தான்

மதக்கலவரம், தீவிரவாத தாக்குதல் எல்லாவற்றையும் நடத்திவிட்டு, அது எதுவும் சரியாக வராவிட்டால், எதிர்க்கட்சி வீடுகளில் ரெயிடு நடத்துவதுதானே வேலை அமலாக்கத்துறையை உயர்நீதிமன்றம் கண்டித்து என்ன பயன்? என்ன நடவடிக்கை எடுத்தது? செந்தில் பாலாஜி விவகாரத்தில் கடைசிவரை என்ன கண்டுபிடித்தார்கள்?

தனக்கு பிடிக்காதவர்களை உள்ளே தள்ளுவார்கள், மிரட்டுவார்கள்.. ஒவ்வொரு தேர்தலின்போதும் இதே டெக்னிக்தான்.. நேரு, எ.வ. வேலு, பொன்முடி, சேகர்பாபு, ஈரோடு முத்துசாமி, ஜெகத் ரட்சகன், இவர்கள் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் இவர்கள் எல்லாம் தேர்தலில் புலிகள்.. இதை எந்நேரமும் எதிர்பார்க்க வேண்டும்.,

கருப்பு பணம்

இதுவரை அமலாக்கத்துறை நடத்தியிருக்கும் பல்வேறு ரெய்டுகளில் கைப்பற்றிய பணம் எவ்வளவு? யாரிடம் தந்தீர்கள்? அந்த பணத்தின் மூலம் பொதுமக்களுக்கு கிடைத்த திட்டங்கள் என்ன? என்பது பற்றி இதுவரை ஒரு தகவலும் வந்ததில்லை. கத்தை கத்தையாக கைப்பற்றியதாக சொல்கிறார்கள்.. ஆனால், இந்த பணத்துக்கெல்லாம் கணக்கு திரப்பட்டுள்ளதா? மக்களுக்கு இந்த பணத்தில் என்ன நலத்திட்ட உதவிகளை செய்தீர்கள்?

4 வருடங்களுக்கு முன்பு, இந்தியாவிலுள்ள கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றார் அமித்ஷா .. இப்போது மட்டும் எதுக்கு ரெய்டு நடக்குது? இதில் எது உண்மை? இதில் எத்தனை பேர் அடிபட்டாலும், ஓகே என்று சொல்லி கையெழுத்து போட்டால் போதும்.. எல்லாம் சரியாகிவிடும். 10 நிமிடத்தில் பரிசுத்தமாகி விடுவார்கள்..

மோடி வாஷிங் மெஷின்

மோடி வாஷிங் மெஷினில் போட்டால் எல்லாமே சுத்தமாகிவிடும் என்று ஏற்கனவே ராகுல் சொல்லியிருக்கிறார். விஜய் மல்லையாவை என்ன செய்தார்கள், நீரவ் மோடியை என்ன செய்தார்கள்? வரும் தேர்தலில் உதயநிதிக்கு நெருக்கடி தருவதற்காக இவ்வாறான ரெயிடுகள் நடத்தப்படுவதாக சொன்னாலும், 2026-ல் தேர்தலே நடக்குமான்னு தெரியல. அமிர்தசரஸ் வரை பாகிஸ்தான் குண்டு போட்டுட்டாங்க.

ரபேல் விமானங்கள் என்னாச்சு என்று ராகுல் கேட்டால், விமானிகள் பத்திரமாக இருப்பதாக சொல்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரம் அதிகமாக உள்ளதால், 2026ல் தேர்தல் நடத்துவது சரியல்ல, இன்னும் ஒரு வருடம் கழித்து நடத்தலாம் என்று மோடி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றெல்லாம் கருத்து கூறியிருக்கிறார் காந்தராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+