"நாம் இருவர் நமக்கு இருவர்" சீரியல் தீபாவுக்கு 2ஆவது திருமணம்.. பரபரப்பு வீடியோவை வெளியிட்டார் நடிகை
சென்னை: பிரபல சீரியல் நடிகை தீபா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த திருமண வீடியோவை வெளியிட்டு தகவலை உறுதிப்படுத்தினார் தீபா.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடர் மூலம் பிரபலமானவர் தீபா. இந்த தொடரில் வடிவு எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

இதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் தொடர்களிலும் நடித்து வருகிறார். ஏற்கெனவே திருமணமான தீபா முதல் கணவருடன் முறைபடி விவாகரத்து பெற்றுவிட்டார்.
தனது மகனுடன் வசித்து வந்தார். இவர் சாய் கணேஷ் பாபு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. தீபாவை மறுமணம் செய்ய சாய் கணேஷ் வீட்டில் எதிர்ப்புகள் கிளம்பியதால் இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என கூறப்பட்டது. இந்த நிலையில் சாய் கணேஷ் பாபுவை தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோவை இணையதளத்தில் தீபா வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வருபவர் சாய் கணேஷ் பாபு. இவர் பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். இவரை பாபு என்றே அழைப்பார்களாம். தீபாவும் பாபுவும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலை ஆரம்பத்திலிருந்தே பாபுவின் வீட்டார் ஏற்கவில்லை என தெரிகிறது.
இதனால் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. பாபு திரைக்கதை வசனகர்த்தாவும் ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சி பிரிவுத் தலைவருமான ரமண கிரிவாசனின் உடன் பிறந்த சகோதரன் ஆவார். இவர்களுடயை காதலுக்கு ரமணாவும் எதிர்ப்பு என்கிறார்கள்.

இரண்டாவது திருமணம் என்றால் பெரும்பாலும் வீடுகளில் எதிர்க்கத்தான் செய்வார்கள். இந்த எதிர்ப்புகளை எல்லாம் சரி செய்துவிட்டு திருமணம் குறித்து முறைப்படி அறிவிப்பேன் என தீபா கூறியிருந்த நிலையில் தற்போது திருமணத்தை உறுதி செய்யும் விதமாக அவர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதமே பாபுவுடன் இருக்கும் புகைப்படத்தை தீபா வெளியிட்டு மை லவ் என குறிப்பிட்டிருந்தார். இதை வைத்தே இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என தகவல்கள் வெளியாகின. பாபுவும் தீபா விவாகரத்தானவர் என தெரிந்தே அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறித்தான் பழகினார் என தீபாவுடன் நடித்தவர்கள் கூறியிருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications