Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் பிக் பாஸ் போகாத காரணமே இதுதான்! புது குண்டை தூக்கி போட்ட திவ்யா ஸ்ரீதர்.. வதந்திகளுக்கு பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதர் தான் எதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு அவருடைய கணவர் அர்னவ் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பலருக்கும் திவ்யா ஸ்ரீதர் தெரிந்திருப்பார். சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தன்னுடைய கணவர் நடிகர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

arnav divya sridhar

அதற்குப் பிறகு அவருடைய கணவரான அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகையோடு நெருங்கி பழகி வருவதாகவும் அதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவதாகவும் பேட்டிகளில் பேசியிருந்தார். அதுபோல அர்னவ் பல பெண்களோடு பேசிய பல ஆடியோக்களை அடுத்தடுத்து திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டு இருந்தார்.

அது மட்டுமல்லாமல் திவ்யா ஸ்ரீதரை அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் மிரட்டும் ஆடியோக்களும் வெளியாகி இருந்தது. இப்போது கூட இணையத்தில் இந்த வீடியோக்கள் வலம் வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி தொடங்கப்படும் போது இந்த நிகழ்ச்சியில் அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்றதும் திவ்யா ஸ்ரீதரும் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பிறகு சில வாரங்களில் வைல்ட் கார்ட் என்ட்ரி நடக்கும் போது கூட திவ்யா ஸ்ரீதர் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போதும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இப்போது நிகழ்ச்சியே முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில் திவ்யா ஸ்ரீதர் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அதிகமானோர் நீங்க ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்காங்க. அதற்கு விளக்கம் கொடுக்கணும்னு நினைக்கிறேன். நான் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிடையாது.

காரணம் எனக்கு ஒரு குட்டி பொண்ணு இருக்கிறது. அந்த குழந்தையை வச்சுக்கிட்டு என்னால் சூட்டிங் கூட போக முடியல. சூட்டிங் போயிட்டு வந்ததும் என்னை ரொம்ப தேடுறா. அந்த பாப்பாவ விட்டுட்டு என்னால் 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்க முடியாது.

அதுபோல நான் செவ்வந்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த சீரியலில் இருந்தும் என்னால் விலக முடியாது. அதனால் தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதுபோல இன்னொரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

arnav divya sridhar

சில செய்திகளிலும் அர்னவின் முன்னாள் மனைவி நான் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கும் அவருக்கும் விவாகரத்து நடக்கவில்லை. எங்கள் இருவருக்கும் பிரச்சனை என்பதால் நாங்கள் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான். எங்களுக்குள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறதே தவிர எங்களுக்கு விவாகரத்து இன்னமும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே அன்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் க்ராண்ட் பினாலேவில் விஜய் சேதுபதியுடன் பேசும்போது நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வருவதற்கு முன்பு என்னை ஒருவர் மனதளவில் உடைத்து நொறுக்கி தான் உள்ளே அனுப்பினார். ஆனால் மூன்றாவது வாரத்திலேயே நான் எதார்த்தத்தை புரிந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் நான் அவரிடம் நமக்குள் இனி எதுவும் இல்லை, நீ என்னுடைய வாழ்க்கைக்கு தேவை இல்லை என்று சொல்லிவிட்டேன்.

அந்த நபர் என்னை கஷ்டப்படுத்திவிட்டு இப்போது இன்னொரு பெண்ணோடு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். அப்போது கேமரா அர்னவை போக்கஸ் செய்தது. இதனால் அன்ஷிதா சொல்வது அர்னவை தானா? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. ஆனால் அர்னவ் அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் திவ்யா ஸ்ரீதர் நான் அர்னவ்க்கு முன்னாள் மனைவி கிடையாது, நாங்கள் பிரிந்து இருக்கிறோம் அவ்வளவுதான் என்று கூறி இருப்பதால் அன்ஷிதா சொல்லுவது அர்னவ்வை தானா என்றும் சிலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+