ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா! நயன்தாராவாக மாறிய நடிகை ஆர்த்தி..நீங்கள் பேரழகினு பாராட்டிய விக்கி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாரா அணிந்திருந்த திருமண உடையை போல் காமெடி நடிகை ஆர்த்தியும் அணிந்துக் கொண்டு எதிர்பார்ப்பிற்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்த்தி இந்த கெட்டபில் அழகாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Nayan-Wikki சாமி தரிசனம் | Chettikularanga Temple Visit *TamilNadu | Oneindia Tamil

    ஆர்த்தி 6 மாதத்திலிருந்து குழந்தை நட்சத்திரமாக வண்ண கனவுகள் படத்தில் அறிமுகமானவர். இவர் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்திருந்தவர். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் ஸ்டான்ட் அப் காமெடி செய்யும் நிகழ்ச்சியில் முதல் முறையாக தோன்றினார்.

    கிரி, படிக்காதவன், குட்டி, அருள், திருப்பதி, உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் காமெடி ரோல்களில் தோன்றுவார். காமெடியில் கலக்குவதால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கலைமாமணி விருதை பெற்றார்.

    வடிவேல்

    வடிவேல்

    வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி மிகவும் புகழ் பெற்றவை. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிரு்நதார். இவரும் மற்றொரு காமெடி நடிகர் கணேஷ்கரும் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் இணைந்து டான்ஸ் ஆடிய போது இவர்களுக்கு காதல் பற்றிக் கொண்டது. இதையடுத்து குருவாயூர் கோயிலில் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா


    இவர் ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் ஆர்த்தி சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார். ஆர்த்தி உடல் பருமனாக இருந்தால் அவர் ஆடும் நடனங்கள் மிகவும் நளினமாக இருக்கும் என்பதால் அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    இதனால் சமூகவலைதளங்களிலும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். கடந்த மே மாதம் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடந்தது. அப்போது நயன்தாரா சிவப்பு நிற சேலையை அணிந்துக் கொண்டிருந்தார். அவரை போலவே ஆர்த்தியும் உடைகள், நகைகளை அணிந்து கொண்டு, என்ன கொடுமை இது என கேட்டு எதிர்பார்ப்பு வெர்சஸ் ரியாலிட்டி என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

    விக்னேஷ் சிவன் ட்வீட்

    விக்னேஷ் சிவன் ட்வீட்

    இவரது இந்த ட்வீட்டை பார்த்த பலர் நீங்களும் நயனை போல் அழகாக இருக்கிறீர்கள் என தெரிவித்திருந்தனர். நடிகை பிரியா ஆனந்த் தனது ட்வீட்டில் நான் இந்த புகைப்படத்தில் இரு அழகான பெண்களை பார்க்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த படம் விக்னேஷ் சிவனின் கண்களில் பட்டுள்ளது. அப்போது அவர் அன்பான ஆர்த்தி! நீங்கள் மிகவும் அழகு என குறிப்பிட்டுள்ளார்.

     நடிகை ஆர்த்தி ஹேப்பி

    நடிகை ஆர்த்தி ஹேப்பி

    நடிகை ஆர்த்தியும் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில் தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரரே! தாங்கள் கூறியது போல் நானும் என்னை அழகியாகவே பார்க்கிறேன். ஆனால் உண்மையில் தங்களின் பேரழகி மனைவி அவர்களைப் போல் உடை அலங்காரத்தை நான் செய்து கொண்டதால்தான் இன்னும் மிளிர்கிறேன் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    குவியும் பாராட்டு

    குவியும் பாராட்டு

    ஆர்த்தி அழகாக இருப்பதாக விக்னேஷ் சிவன் அனுப்பிய ட்வீட்டை நயன்தாராவுக்கும் சில நெட்டிசன்கள் டேக் செய்துள்ளனர். ஆர்த்தியையும் நீங்கள் அழகாகத்தான் இருக்கிறீர்கள், உங்களின் நேர்மறை எண்ணங்கள் எங்களுக்கு பிடித்திருக்கின்றன என பாராட்டி வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+