அடுத்த ஜென்மத்துல குணசேகரனுக்கு rugged மாமியாரா நீங்க பொறக்கணும்.. எதிர்நீச்சல் நந்தினிக்கு கோரிக்கை
சென்னை: எதிர்நீச்சல் கரிகாலனின் பிறந்தநாளுக்கு நந்தினி வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.
சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் ரசிகர்களின் மனதிற்கு பிடித்துவிட்டார்கள். அதிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவுக்கு என ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஜான்சிராணி, ஜீவானந்தம் உள்ளிட்ட கேரக்டர்களில் நடிப்போரும் அருமையாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஜீவானந்தம் கேரக்டரில் நடிப்பது இயக்குநர் திருச்செல்வம். அவரது நடிப்பை கேட்கவா வேண்டும்.
பெண்ணடிமை, ஆணாதிக்கம் உள்ளிட்டவைதான் கதையின் கரு. இதை எப்படி உடைத்து பெண்களும் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை சீரியலில் வரும் ஆணாதிக்க ஆண்களுக்கு புரிய வைக்க போராடுகிறார்கள். அதிலும் ஆதி குணசேகரனின் மகளை கரிகாலனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பள்ளி படிக்கும் சிறுமியை திருமணம் செய்து கொடுக்க முடியாது என வீட்டில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதி குணசேகரனின் தங்கை ஆதிரைக்கு கரிகாலனை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார். ஆனால் ஆதிரையே அருண் என்பவரை விரும்புகிறார். ஆதிரையின் திருமணத்திற்கு அண்ணியார்கள் உதவுவதாக கூறுகிறார்கள்.
ஆனால் ஆதிரையை நடுரோட்டில் வைத்து கரிகாலனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார் ஆதி குணசேகரன். இதைத் தொடர்ந்து ஜான்சிராணி, மகனையும் மருமகளையும் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கு அவர்களுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜான்சிராணியின் அட்டூழியத்திற்கு அஞ்சி உள்ளே செல்லும் ஆதிரை,தான் ஏற்கெனவே அருணுடன் சேர்ந்து விட்டதாக கூறி கரிகாலனின் தலையில் கல்லை தூக்கி போடுகிறார்.
மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் கூறக் கூடாது என்றும் கரிகாலனை மிரட்டுகிறார். இந்த சீரியலில் கரிகாலனின் காமெடி கலந்த நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த கரிகாலன் கேரக்டரில் நடித்து வருபவர் விமல். இந்த சீரியலில் நடிக்கும் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி, கதிர், ஞானம் உள்ளிட்டோர் அவ்வப்போது ரீல்ஸ் போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் விமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை வித்தியாசமான முறையில் நந்தினி கூறியுள்ளார். இருவரும் அண்ணன் தங்கையாக ரீல்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டுவாழ்த்து கூறியுள்ளார். அந்த வீடியோ ஏதோ ஒரு படத்தில் சிவாஜியும் மனோரமாவும் பேசிக் கொள்வது போல் இருக்கிறது. அடுத்த ஜென்மம்னு இருந்து நாம ரெண்டு பேரும் பிறந்தோம்னா அதில் நான் அண்ணனாகவும் நீ தங்கையாகவும் பிறக்க வேண்டும் என்கிறார் விமல்.
அதற்கு ஹரிபிரியாவோ இந்த ஜென்மத்திலேயே அப்படித்தானே இருக்கிறோம், வேறு என்ன குறை என்கிறார். அதற்கு விமல் "கடவுள் புண்ணியத்துல உனக்கு எந்த விதமான குறையும் வரக் கூடாது, நீ நல்லா இருக்கணும் என்கிறார். இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் குணசேகரனுக்கு ரக்குடு மாமியாரா நீங்க பொறக்கணும் என ஹரிபிரியாவை சொல்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications