அப்படியெல்லாம் வதந்தி பரப்பாதீர்கள்! திடீரென இன்ஸ்டா பதிவில் நடிகை ஹேமாராஜ்!
சென்னை: தன்னை பற்றி வதந்தி எதையும் பரப்ப வேண்டாம் என பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா கேட்டுக் கொண்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இது அப்படியே எதிர்நீச்சலுக்கு உல்டாவான சீரியல்.

எதிர்நீச்சலில் 4 அண்ணன் தம்பிகளும் தங்கள் மனைவிகளை மதிக்கவே மாட்டார்கள் (சக்தி தற்போது ஜனனியை மதித்தாலும் ஆரம்பத்தில் குணசேகரனின் பேச்சை கேட்டு அவரை வீட்டை விட்டு விரட்டினார்). ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூத்த அண்ணனாக வரும் சத்யமூர்த்தி கேரக்டர் தனது தம்பி மனைவிகளின் மீது ஆதிக்கம் செலுத்த மாட்டார்.
அந்த வகையில் இரு சீரியல்களையும் மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது தற்போது 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின் முத்து, குமரன் தங்கராஜன், ஹேமா, வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம், விஜே தீபிகா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்தவர் விஜே சித்ரா. இவர் 2020 ஆம் ஆண்டு ஒரு ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவருக்கு பதிலாக காவ்யா அறிவுமணி ஓராண்டாக முல்லையாக நடித்தார். இதையடுத்து அவரும் சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் முல்லை கேரக்டரில் லாவண்யா நடித்து வருகிறார்.

அது போல் கண்ணனின் மனைவியாக வைஷாலி தணிகா நடித்து வந்தார். அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதால் சாய் காயத்ரி நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து சாய் காயத்ரியும் விலகியதால் தற்போது விஜே தீபிகா , ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் பெயர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதாகும். இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக சுஜிதா இல்லை, நிரோஷா நடித்து வருகிறார். சரவண விக்ரம் பிக்பாஸ் சென்றுவிட்டார். இந்த நிலையில் ஹேமா இந்த சீரியலில் நடித்து வருகிறார் என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கூறியிருப்பதாவது: தயவு செய்து நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் நடிக்கிறேன் என தவறான செய்தியை பரப்பாதீர்கள், அது குறித்து இன்னும் முடிவாகவில்லை. ஒரு வேளை முடிவானால் உங்கள் அனைவருக்கும் நான் சொல்கிறேன், நன்றி என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications