"காமெடி கிங்" கவுண்டமணி நடிக்கும் படத்தில் சன் டிவி சீரியல் நடிகையா? இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து
சென்னை: இலக்கியா சீரியலில் நடித்து வரும் நடிகை ஹிமா பிந்து தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். இதற்கான படபூஜை குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலிில் சஹானா கேரக்டரில் நடித்திருந்தவர் ஹிமா பிந்து. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார்.

ஹிமா பிந்து பல்வேறு அழகு குறிப்புகளையும் கூறியுள்ளார். அவருடைய முடி கருகருவென அழகாக இருக்கும். இதற்கு அவர் தினமும் கறிவேப்பிலை ஜூஸ் குடிப்பேன் என்றும் பொடுகு தொல்லைக்கு எலுமிச்சையும் தயிரும் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் சரியாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
இவர் தினமும் காலையில் முட்டை சாப்பிடுவதாகவும் வயிறு முட்ட சாப்பிட மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். இலக்கியா தொடர் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சினிமாவில் ஹீரோயினாக ஹிமா பிந்து என்ட்ரி கொடுக்கிறார்.

அவர் இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹீரோயினாக முதல் முறையாக நடிக்கிறார். கவுண்டமணி நீண்ட காலம் கழித்து தற்போது நடிக்கிறார். அந்த படத்திற்கு பெயர் ஒத்த ஓட்டு முத்தையா என்பதாகும். இந்த படத்தில்தான் ஹிமா பிந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். கவுண்டமணியுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். பட பூஜையில் கவுண்டமணி சாய்பாபாவின் சிலையை கையில் வைத்திருக்கிறார்.

இந்த படத்தில் கவுண்டமணி 3 வேடங்களில் நடிக்கிறாராம். நல்ல அரசியல்வாதி, கெட்ட அரசியல்வாதி, பொதுமக்களில் ஒருவர் என்ற 3 வேடங்களில் நடித்து வருகிறாராம். 2015 ஆம் ஆண்டு 49 ஓ படம், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, வாய்மை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 2016 க்கு பிறகு கவுண்டமணி எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது 7 ஆண்டுகள் கழித்து ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் நடிக்கிறார். இதில் யோகி பாபு, முத்துக்காளை, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, வையாபுரி என காமெடி பட்டாளமே இணைந்துள்ளார்கள். கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications