சீரியலில் நடிக்கற பொண்ணுங்க எல்லாம் அழகா இருக்காங்க.. விடிவி.கணேஷ்!
சென்னை: சீரியலில் நடிக்கும் பொண்ணுங்க எல்லாம் அழகா இருக்காங்க என்று, நடிகர் விடிவி.கணேஷ் கூறினார்.
சன் குடும்ப விருதுகள் விழாவுக்கு வந்திருந்த விடிவி. கணேஷ் மேற்கண்டவாறு கூறினார்.
மெர்சி சிவாவும், விடிவி.கணேஷும் நாங்க சீரியல் நடிச்சால் இப்படித்தான் இருக்கும் என்று எபிசோட் பிளே செய்து காண்பித்தார்கள்

விண்ணைத் தாண்டி வருவாயா?
விண்ணைத் தாண்டி வருவாயா 4000 மேற்பட்ட ஒரு எபிசோட் என்று காண்பித்து, அதை சன் குடும்ப விருது விழா மேடையில் ஒளிபரப்பினார்கள். விடிவி கணேஷ் பேப்பர் படிக்கிறார். அதில் வெங்காய விலையைப் பார்த்ததும் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருது.

நெஞ்சை பிடித்தபடி
நெஞ்சை பிடித்தபடி கீழே விழும் கணேஷ். தூரத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுக்க தவழ்ந்து வருகிறார். அப்போது மாடிப்படியில் இருந்து இறங்கி வரும் விடிவி கணேஷின் மனைவி என்னங்க என்று கத்தியபடி, என்னாச்சு இந்த மனுஷனுக்கு என்று நிற்கிறார். உடனே டாக்டருக்கு போன் செய்யலாமா என்று போன் செய்கிறார்.

டாக்டர் மெர்சி சிவா
டாக்டருக்கு போன் பண்றாங்க.. டாக்டர் மெர்சி சிவா. அதுக்குள்ளே தண்ணீர் பாட்டிலை எடுக்கும் விடிவி கணேஷிடம் இருந்து அதை எடுத்து என்னாச்சு உங்களுக்குன்னு கேட்டுட்டு, அந்த பாட்டிலை பிடுங்கி வேறு இடத்தில் வச்சுடறாங்க... டாக்டர் வந்துடறார்.என்னாச்சுன்னு கேட்டுட்டு...சாரி.. ஷூ போட்டுக்கிட்டு உள்ளே வந்துட்டேன்னு ஃ பீல் பண்றார்.

நானும் சாரி
நானும் சாரி சொல்றேன்.. டாக்டர்.. வீட்டுக்கு வந்த உங்களுக்கு காபி குடுக்காம பேசிகிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு. மறுபடியும் தண்ணீர் எடுக்க வந்த புருஷனிடம் இருந்து தண்ணீர் பாட்டிலை பிடுங்கி டாக்டரிடம் கொடுக்கறாங்க. டாக்டர் தண்ணீர் குடிச்சுட்டு பார்க்கும்போது இவர் கோமாவுக்கு போயிடறார்.சாரி.. எவ்வளவோ முயற்சி செய்தும்..அவரை காப்பாத்த முடியலை கோமாவுக்கு போயிட்டார்னு சொல்றார்.

சீரியலில் நடிகைகள்
இப்படித்தான் நாங்க சீரியல் நடிச்சா இருக்கும் சொன்னார் சிவா. வெளியில போயிட்டு வீட்டுக்கு வந்து டிவி பார்த்தால்.. சீரியலில் நடிக்கும் நடிகைகள் எல்லாரும் அழகா இருக்காங்க.நமக்கே கொஞ்சம் எனர்ஜி வந்த மாதிரி இருக்குன்னு விடிவி கணேஷ் சொன்னார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications