எத்தனை ட்விஸ்டுப்பா? எதிர்நீச்சல் சீரியலில் பிரபல "தென்றல்" நடிகை வருகிறாரா? என்ன சொல்றீங்க?
சென்னை: 80 களில் பிரபல நடிகையாக இருந்த நடிகை ஜெயஸ்ரீ சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.
சினிமா படங்களுக்கு இணையாக சீரியல்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் வரும் நடிகர்கள், நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதனால் சீரியல்கள் சக்கை போடு போடுகின்றன. அப்படி ரசிகர்களை கவர்ந்த தொடர்களில் எதிர்நீச்சல் தொடரும் ஒன்று. இந்த தொடரில் ஆணாதிக்கத்தை எதிர்த்து 5 பெண்கள் போராடும் கதை.
பெண்கள் என்றால் வீட்டில் சமையல் செய்து குழந்தைகளை பார்த்துக் கொள்வது, கணவனை சந்தோஷப்படுத்துவது, வீட்டு வேலைகளை செய்வது இவை என்ற எண்ணம் கொண்ட 3 அண்ணன் தம்பிகளுக்கு எத்தனை படித்திருந்தாலும் படிக்காதவர்கள் போல் கணவன் கிழித்த கோட்டை கண்ணை மூடிக் கொண்டு தாண்டும் பெண்களாக இருக்கிறார்கள்.

கடைசி தம்பி
ஆனால் கடைசி தம்பிக்கு வரும் மனைவியோ வீட்டுக்குள்ளே பெண்களை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தர் என்ற வரிகளை நன்கு படித்தவர். அவருடைய தந்தையும் பெண்கள் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்பதை கருவிலேயே சொல்லி கொடுத்து வளர்த்தவர். எனவே 4 ஆவது மருமகளாக வரும் ஜனனி மற்ற 3 பெண்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆணாதிக்கம்
இவர்களுடன் இதே போன்ற ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பட்டம்மாள் பாட்டியும் இணைந்து கொண்டு பெண் விடுதலைக்காக போராடுகிறார். இந்த கதை நாள்தோறும் விறுவிறுப்பாக நகர்கிறது. இந்த காலத்தில் பெண்களை கொத்தடிமைகளாக நடத்துவதா என பெண்கள் கொந்தளிக்கும் அளவுக்கு நடிப்பில் அசத்துகிறார் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து.

ட்விஸ்ட்கள்
ட்விஸ்ட்கள் நிறைந்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பல அதிரடி திருப்பங்கள் நிறைந்த இந்த தொடரில் புதிதாக ஒரு நடிகை கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்கிறார். அவர் 80 களில் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக இருந்தவர்தான். அவரது பெயர் ஜெயஸ்ரீ. இவர் 1985 ஆம்ஆண்டு வெளியான தென்றலே என்னை தொடு எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

மலையாளம்
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவர் வீட்டில் மாடித் தோட்டம், பசுமை விவசாயம் குறித்து பல யூடியூப் சேனல்கள் வீடியோக்களுடன் பேட்டி எடுத்திருந்தன. அப்போது பார்த்தது போல் ஜெயஸ்ரீ அப்படியே இருக்கிறார். அதைவிட முக்கியம் அமெரிக்கா போனாலும் தமிழ் சரளமாக பேசுகிறார்.

சீரியல் என்ட்ரி
இவர்தான் இந்த சீரியல் மூலம் என்ட்ரி கொடுக்கிறார். கெஸ்ட் ரோலில் வருகிறார் என சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஜெயஸ்ரீ இந்த சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் என்றால் அது சாதாரணமாக இருக்காது, ஏதாவது கதைகளத்தை சுவாரஸ்யமாக நகர்த்த உதவும் என்கிறார்கள். எது எப்படியோ ரீ என்ட்ரி கொடுத்தவுடன் கதை சூடுபிடிக்கிறதா இல்லை எதிர்நீச்சல் நீச்சல் அடிக்க முடியாமல் தத்தளிக்கிறதா என்பது தெரியும்.

நடிகை ஜெயஸ்ரீ
நடிகை ஜெயஸ்ரீக்கு தற்போது 57 வயதாகிறது. பார்த்தால் அப்படி தெரியவில்லை. இவர் வங்கியில் பணி செய்து வந்த சந்திரசேகர் என்பவரை 1988 இல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஜெயலலிதா 2010 காதல் டூ கல்யாணம் என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அது ரிலீஸாகவில்லை. இதையடுத்து 2016இல் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடிகை ஜெயஸ்ரீயின் மணல் கயிறு 2 என்ற படம் சர்வதேச அளவில் ரிலீஸானது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications