மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஜூலி.. ஏன் என்னாச்சு.. இன்ஸ்டாவில் ஹேப்பி தகவல்!
சென்னை: தனக்கு கண்களில் லென்ஸ் வைக்கும் லேசிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக நடிகை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஜூலியை தெரியாதவர்களும் பிடிக்காதவர்களும் இருக்க மாட்டார்கள். காரணம் 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தில் அதிமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து ஒட்டுமொத்த மக்களின் அன்பை பெற்றவர்.
இவர் பிக்பாஸ் சீசன் 1இல் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் அறிமுகத்திலேயே தலையில் சிவப்பு நிற துண்டை அணிந்து கொண்டு வந்திருந்தார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தன.

சுயரூபம்
ஆனால் உள்ளே சென்ற அவரின் சுயரூபம் மக்களுக்கு தெரியவந்தது. ஜூலி என்றாலே போலி என்று மக்கள் சொல்லும் அளவுக்கு வந்துவிட்டார். அதோடு விட்டாரா எப்போது பார்த்தாலும் ஓவியாவை வம்பிழுக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார். காயத்ரி ரகுராம் உள்ளிட்டோருடன் சேர்ந்து கொண்டு இவர் செய்த சம்பவத்தை பார்த்த மக்கள் ஜூலி மீது கடுங்கோபத்தில் இருந்தார்கள்.

ஜூலி போலி
ஜூலி சொல்லி ஒரு பொய்யை குறும்படம் மூலம் இந்த உலகிற்கு போட்டு காட்டினார் கமல்ஹாசன். மேலும் ஜூலியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றெல்லாம் கமல் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் ஜூலியை எவிக்ஷன் பிராசஸில் வெளியே அனுப்பும் போது ஜூலி மீது மக்கள் கோபத்தை காட்டக் கூடாது , உங்களை நம்பி அனுப்புகிறேன் என கமல் கூறியிருந்தார்.

வெறுப்பு
அந்த அளவுக்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி, பின்னர் சில படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டார். அப்போது ஜூலி தன் மீதான தவறான பிம்பத்தை உடைத்து மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்துள்ளார். இந்த நிலையில் அவர் கண்களில் லேசர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருந்தார்.

ஜூலிக்கு அறுவை சிகிச்சை
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் ஒரு மருத்துவமனையில் லேசிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கொண்டதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். எனது கண்கள் தொடர்பாக விசாரித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் ஜூலி. மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் ஜூலி பை பை டூ ஸ்பெக்ஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications