குழந்தை விஷயத்துல எங்களுக்குள்ள நிறைய சண்டை வரும்... இனி இதுதான் நடக்கப்போகுது- கன்னிகா சினேகன்
: குழந்தைகளைப் பற்றி பேசி நிறைய முறை சண்டையிட்டு இருக்கிறேன் என்று கன்னிகா மனம் திறந்து கூறியிருக்கிறார்.
சென்னை: நடிகை கன்னிகா ரவி தன்னுடைய கணவரிடம் குழந்தைகளுக்காக சண்டையிட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
குழந்தைகள் வந்த பிறகு தன்னை கவனிக்க மாட்டீர்கள் என்று இப்போதே பலமுறை என்னிடம் சண்டை இடுகிறார் என்று சினேகன் கன்னிகா மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்.
என்னுடைய இடத்தை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் அது குழந்தைகளாக இருந்தாலும் சரி என்று கன்னிகா தெரிவித்து இருக்கிறார்.

கல்யாண வீடு சீரியலில் அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான நடிகை கன்னிகா ரவி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஒரு நடிகையாக தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தான் இவருக்கு பாடல் ஆசிரியர் சினேகன் உடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து காதலித்து வந்தாலும், தங்களுடைய துறைகளில் சாதித்து விட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தங்களுடைய காதலை ரகசியமாக வைத்திருந்தனர்.

பிரம்மாண்டமான திருமணம்
இவர்களுடைய உறவினர்களின் வற்புறுத்தலினால் தங்களுடைய காதலை அனைவருக்கும் அறிவித்துவிட்டு, திருமணத்தை பிரமாண்டமாக செய்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்டிருந்தார். அதுபோல பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டு பாடல் எழுதிக் கொண்டும் வருகிறார். கன்னிகாவும் திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி தன்னுடைய புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் அடிக்கடி பகிர்ந்து மகிழ்கின்றனர்.

செல்லமான சண்டை
அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் பேட்டி ஒன்றில் பேசி இருக்கின்றனர். அப்போது திருமணமான இரண்டு மாதங்களில் இருந்து தொடர்ச்சி ஆக குழந்தை எப்போது என்ற கேள்வியை போகும் இடங்களில் கேட்டு வருகிறார்கள். இது கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் பல நேரங்களில் நான் என்னை சினேகன் பாசமாக பார்க்கும்போது இதே பாசம் குழந்தை வந்த பிறகும் என் மீது குறைய கூடாது என்று செல்லமாக சண்டையிடுவேன் என்று கூறி இருக்கிறார்.

அந்த இடத்தை விட முடியாது
அதுமட்டுமல்லாமல் காரில் செல்லும்போது கூட முன் பக்கத்து சீட்டில் நான்தான் உட்காருவேன். குழந்தைகள் வந்தாலும் அவர்களை பின்னாடியே கட்டி வைத்து விட வேண்டும். முன்னாடி யாருக்கும் நான் இடம் கொடுக்க மாட்டேன் என்று செல்லமாக சிரித்தபடியே கூறியிருக்கிறார். தன்னுடைய கணவரின் முழு அன்பும் எனக்கு மட்டும்தான். அதற்குப் பிறகுதான் குழந்தைகளுக்கெல்லாம் என்று இவர் கூற, அதற்கு சினேகன் ஆனால் நான் கண்டிப்பாக சொல்கிறேன் குழந்தைகள் வந்தால் கன்னிகாவிற்க்கு என்மீது பாசம் குறைந்து விடும். அவளுக்கு குழந்தைகள் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று எனக்கு தான் தெரியும். குழந்தைகள் பற்றிய நிறைய கனவு இருக்கிறது. அதனால் குழந்தைகள் வந்த பிறகு நமக்கு பாசம் குறைந்துவிடும். ஆனாலும் அது நம்மளுடைய குழந்தைகள் மீது தானே போகிறது என்று நான் மனதை தேற்றிக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து விரைவில் பெற்றோர்களாக மாற வாழ்த்து கூறி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications