கௌசல்யா இவ்ளோ ஓபனா சொல்லிட்டாரே.. கல்யாணம் பண்ணிக்காம இருக்க இதுதான் காரணமாம்.. சபாஷ் நடிகை
சென்னை: பிரபல நடிகை கௌசல்யா, தனக்கு ஏன் இன்னமும் திருமணம் ஆகவில்லை என்பது குறித்து கூறியிருக்கிறார். இவர் திருமணம் உட்பட பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கும் அந்த பேட்டிதான் இணையத்தில் தற்போது மீண்டும் சுற்ற துவங்கியிருக்கிறது.
1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் கவுசல்யா. இவர் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் வெற்றியால் கோலிவுட்டில் மிகவும் பிரபலமானார்.

பிரபல நடிகை: இதைத்தொடர்ந்து 'பூவேலி', 'நேருக்கு நேர்', 'ஜாலி', 'பிரியமுடன்', ''சொல்லாமலே', 'உன்னுடன்', 'வானத்தைப்போல', 'ஜேம்ஸ்பாண்ட்', 'மனதை திருடி விட்டாய்' உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
அந்த பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி பேசியிருந்தார்.. நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தின் டைரக்டர் தங்கர்பச்சான், எனக்கு ஒரு சீன் சொல்லி தந்தார்.. அதை நான் சரியாக செய்யவில்லை, உடனே அவர், நீ எல்லாம் குரங்கு மூஞ்ச வச்சிக்கிட்டு எதுக்கு நடிக்க வர்ற? என்று என்னை பார்த்து கேட்டுட்டார். எல்லார் முன்னாடியும் என்னை அவர் அப்படி திட்டியது எனக்கு வருத்தமாக இருந்தது...
டயலாக்: மெதுவாக எனக்குள்ளே டயலாக் சொல்லி கொண்டிருப்பேன்.. எனக்கு தமிழ் சரியாக தெரியாததால், இப்படி எனக்குள்ளேயே டயலாக் சொல்லிக்கொண்டிருந்தேன். "விஜய் பார்த்து கத்துக்குங்க.. எவ்வளவு தெளிவாக டயலாக் பேசறார் பாருங்க" என்றார். அதுக்கப்பறம்தான் என்னை நான் மாற்றிக் கொண்டேன். இதுபோல சினிமாவில் பல அவமானங்களும் நிறைந்து இருக்கிறது" என்று அந்த பேட்டியில் கௌசல்யா கூறியிருந்தார்.
பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகை கௌசல்யா வெகுநாட்களுக்கு அப்புறம் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் நடித்தார். பின்னர் வேறு எந்த சினிமாவிலும் அவர் தலைகாட்டவே இல்லை. ஆனால், பேட்டிகளை அடிக்கடி தந்து வருகிறார். சமீபத்தில் இவர் தந்திருந்த பேட்டி திரையுலகில் பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
திருமண வாழ்க்கை: கௌசல்யாவுக்கு தற்போது 46 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து கவுசல்யா மற்றொரு பேட்டியில் கூறும்போது, ''நான் திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆனாலும் கல்யாணம் செய்து வாழ்க்கையை தொடங்கும் அளவுக்கு சரியான நபரை இன்னும் சந்திக்கவில்லை. ஒருவர் என் வாழ்க்கையில் வந்தார். ஆனால், அந்த உறவும் முறிந்துவிட்டது.
நான் எதிர்பார்க்கும் ஒருவரை சந்தித்து இருந்தால் நிச்சயம் கல்யாணம் செய்திருப்பேன்.. நான் பெற்றோரோடு இருப்பதும், திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம்.. நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. அவர்களை பிரிந்து என்னாலும் இருக்க முடியாது. நான் பிசியாக நடித்தபோது நரம்பு சம்பந்தமான நோய் எனக்கு ஏற்பட்டது. அதுக்காக நிறைய மருந்துகள் சாப்பிட்டதால் உடல் எடை கூடிவிட்டது.
வெளிப்படை பேச்சு: குடும்பம், குழந்தைங்கிற பெரிய பொறுப்பை என்னால சிறப்பா கையாள முடியுமான்னு தெரியல. இப்போ வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறதுக்கு இதுவும்கூட ஒரு காரணம்" என்று பேசியிருந்தார்.
திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயம் என்றாலும், கௌசல்யா வெளிப்படையாக பேசியிருந்த இந்த பேட்டிதான் தற்போது இணையத்தில் மீண்டும் ரவுண்டு அடித்து கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications