Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரவுடி மாதிரி இருக்காருன்னு மறுத்து..பிறகு காதல் திருமணம்..முதல் நாளே பிரச்சனை-நடிகர் செந்தாமரை மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய கணவர் குறித்தும் தனக்கு எப்படி திருமணம் நடந்தது என்பது பற்றியும் சில சுவாரஸ்யமான கதையை சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

முதலில் ரவுடி போல இருக்கிறார் என்று வேண்டாம் என்று சொன்ன நடிகை கௌசல்யா பின்பு செந்தாமரையை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.

Actress Kausalya, wife of actor Senthamarai, spoke about their married life

மிரட்டிய வில்லன்

எம்ஜிஆர் சிவாஜி காலங்களில் தொடங்கி ரஜினி கமல் காலங்கள் வரைக்கும் வில்லனாக பல நடிகர்களை மிரட்டி கொண்டிருந்த செந்தாமரையை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. நடிகர் செந்தாமரையின் மாஸ் வசனம் மற்றும் அவருடைய முகபாவனை அப்படியே பார்த்ததும் மிரண்டு போகும் வகையில் தான் இருக்கும். அதிலும் இவர் நடித்த பல திரைப்படங்கள் இப்ப வரைக்கும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகர் செந்தாமரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

வில்லன் நடிகர்

வில்லன் நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்த செந்தாமரை முதலில் மேடை நாடகராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். இவர் நடித்ததில் மலையூர் மம்பட்டியான், மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு, தனிக்காட்டுராஜா, குரு சிஷ்யன், எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் இவருடைய வேறு முகத்தை வெளிக்கொண்டு வந்து காட்டியது. நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பனாக இருந்த இவர் ரஜினிகாந்த்திற்க்கு பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

Actress Kausalya, wife of actor Senthamarai, spoke about their married life

செந்தாமரையின் மனைவி

நடிகர் செந்தாமரை தன்னுடைய 57வது வயதில் மாரடைப்பின் காரணமாக கல்யாண மாலை என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இறந்து போனார். அவருக்கு கௌசல்யா என்கிற மனைவி இருக்கிறார். அவருடைய மனைவி வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் சின்ன திரையில் பல சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் முடிவடைந்த ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் பாட்டி கேரக்டரில் நடித்திருப்பார். ஆரம்பத்தில் இந்த பாட்டி வில்லித்தனம் செய்யும் வில்லியாக இருந்தாலும் இவர் காமெடியாக செய்யும் செயல்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும் அதனாலே இவருக்கு ஜீ தமிழ் அவார்ட் எல்லாம் கிடைத்தது.

முதல் அறிமுகம்

இந்த நிலையில் தன்னுடைய காதல் கதை கல்யாண வாழ்க்கையை குறித்து நடிகை கௌசல்யா சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் ஆரம்பத்தில் சிவாஜியின் நாடக நிறுவனத்தில் நடித்து வந்த செந்தாமரை பிறகு எம்ஜிஆரின் நாடக கம்பெனிக்கு வந்திருக்கிறார். அங்கு தான் நடிகை கௌசல்யாவுடன் செந்தாமரையும் நடிக்க வந்தாராம் அப்போது கௌசல்யாவிற்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. நாடகம் நடக்கும்போதெல்லாம் இவர் புத்தகம் படித்துக் கொண்டு இருப்பாராம். அதேபோல நடிகர் செந்தாமரைக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

குடும்பத்தால் நடந்த அவமானம்

ஒரு நாள் கௌசல்யா புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் போது அதை பார்த்த செந்தாமரை அந்த புத்தகத்தை வாங்கி படித்திருக்கிறார். அந்த புத்தகம் அவருக்கு பிடித்துப் போக, இதை நான் முழுதும் படித்திட்டு தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு கௌசல்யாவும் சரி என்று சொல்லிவிட பிறகு படித்து முடித்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு கௌசல்யாவின் வீட்டிற்கு செந்தாமரை வந்திருக்கிறார். செந்தாமரையை பார்க்க ரவுடி மாதிரி இருந்து இருக்கிறார். அதனால் அவருடைய வீட்டில் இருந்தவர்கள் செந்தாமரையை திட்டி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி அனுப்பி விட்டார்களாம்.

Actress Kausalya, wife of actor Senthamarai, spoke about their married life

காதல் தொடங்கியது

பிறகு வழக்கம் போல கௌசல்யா அடுத்த நாள் சூட்டிங் சென்றிருக்கிறார். அப்போது உன் வீட்டில் நல்ல மரியாதை கொடுத்தாங்ம்மா என்று கோபமாக சொன்னாராம். அதற்கு பிறகு தான் கௌசல்யாவுக்கும் செந்தாமரைக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கௌசல்யாவின் தோழியான நடிகை லலிதா இருவருக்கும் காதல் பாலமாக இருந்திருக்கிறார். செந்தாமரையை திருமணம் செய்ய சொல்லி கௌசல்யாவிடம் கேட்டபோது வேண்டாம் அவரைப் பார்த்தாலே ரவுடி மாதிரி இருக்க எனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம். அதற்குப் பிறகு லலிதா கௌசல்யாவின் வீட்டில் பேசி இருக்கிறார். கௌசல்யாவின் வீட்டில் உள்ளவர்கள் செந்தாமரைக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். அப்போதுதான் கௌசல்யாவுக்கு செந்தாமரை அதிகமாக பிடிக்கத் தொடங்கி விட்டதாம்.

திருமணமும் புரிதலும்

பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் செந்தாமரையை கௌசல்யா திருமணம் செய்து இருக்கிறார். திருமணம் ஆன முதல் நாளே பிரச்சனை தொடங்கி இருக்கிறது. அவருடைய திருமணம் கோவிலில் வைத்து நடந்திருக்கிறது. ஆனால் செந்தாமரை சாமி கும்பிட மாட்டாராம். அப்போது திருமணம் முடிந்ததும் நேராக அண்ணா சமாதிக்கு கூட்டிக்கொண்டு சென்று விட்டாராம். இங்கே தான் சாமி இருக்கு வா என்று அழைத்ததும் கௌசல்யாவும் போனாராம். பிறகு வீட்டிற்கு வந்ததும் எங்க வீட்டில் நிறைய பேர் இருக்காங்க எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழனும் என்று கௌசல்யாவுக்கு சொன்னாராம். கௌசல்யாவிற்கு கோவம் வந்து எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்று அவருடைய அம்மா வீட்டுக்கு போய் விட்டாராம். பிறகு ஆறு மாதம் கழித்துதான் செந்தாமரை பற்றி நன்றாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பிறகு எங்களுக்குள் சண்டையே வரவில்லை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்தோம் என்று கௌசல்யா கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+