அடேங்கப்பா.. என்னா ஒரு வெறித்தனம்.. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கடும்உழைப்பாளிதான் போங்க!
சென்னை: விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பி ரேட்டில் முன்னணி இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் 4 அண்ணன் தம்பி, அவர்களுடைய மனைவிகளுக்கிடையே நடைபெறும் பாச போராட்டம், குடும்ப பிரச்சினை உள்ளிட்டவை குறித்த கதைதான் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதை போல் இந்த கதையும் உள்ளதால் மக்கள் இதை விரும்பி பார்க்கிறார்கள். இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முல்லை கேரக்டர
அவருக்கு பதிலாக முல்லை கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என பல கட்ட யோசனைகளுக்கு பிறகு பாரதி கண்ணம்மாவில் நடித்த காவ்யா அறிவுமணியை அணுகியதில் அவர் தற்போது முல்லையாக நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் சரிவை சந்தித்தாலும் தற்போது மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது.

காவ்யா
முல்லையாக நடித்து வரும் காவ்யா, பிக்பாஸ் நடிகர் கவினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் காவ்யா ஒரு உடற்பயிற்சிக் கூடததில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் வீடியோ
இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. புஸ் அப் எடுக்கும் காட்சிகள், ஸ்டாமினாவை தக்க வைத்துக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் பதிவாகியுள்ளன. இதை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர். நல்லா உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் அக்கா என பதிவிட்டு வருகிறார்கள்.

காவ்யா விலகுகிறாரா
முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி படங்களில் நடிக்கவுள்ளதால் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வந்தன. அவருக்கு பதிலாக ஆல்யா மானசா நடிக்கலாம் என சொல்லப்பட்டன. ஆனால் இதுகுறித்து உறுதி செய்யப்படவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications