ஜெயா டிவியில் ஜாக்பாட்..குஷ்பூ செம சீன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயா டிவியில் நடிகை குஷ்பூ ரொம்ப வருஷமாகத் தொடர்ந்து ஜாக்பாட் என்று ஒரு நிகழ்ச்சி நடத்தி வந்தார். அதை ஜெயா டிவி இப்போது மறு ஒளிபரப்பு செய்து வருகிறது.

ஜாக்பாட் நிகழ்ச்சி ஆரம்பத்தில் பெண்களுக்கான நிகழ்ச்சி என்று மட்டுமே இருந்தது. பிறகு குடும்பமாக கலந்துக்கொள்ளுதல் என்று இப்படி பல வகைகளில் மாறிப்போனது.

நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த குஷ்பூ, ஒரு டீச்சர் மாதிரி செம சீனில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். ரொம்ப அழகாக இருந்தாலும், தோற்றத்துக்கு கண்டிப்பும் சேர்ந்து , மிக அழகாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் குஷ்பூ.

 ஜாக்பாட் ஜாக்கெட்

ஜாக்பாட் ஜாக்கெட்

குஷ்பூ தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிக்கு பெயர் ஜாக்பாட்டா ஜாக்கெட்டா என்று கேட்கும் அளவுக்கு, நிகழ்ச்சியில் குஷ்பூ அணிந்து வந்த ஜாக்கெட் அவ்ளோ பிரபலம். தினமும் என்ன டிசைன் ஜாக்கெட் குஷ்பூ அணிந்து வருகிறார் என்று பார்ப்பதற்கே பெண்கள் இந்த நிகழ்ச்சியை மிகவும் விரும்பிப் பார்த்தனர்.

 ஃபிரஷ் குஷ்பூ

ஃபிரஷ் குஷ்பூ

சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதன் முதலாக ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய குஷ்பூ, டிவிக்கு ரொம்ப ஃபிரஷாக இருந்தார். தமிழில் நன்றாக உரையாடி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திச் சென்றார். உண்மையில், மற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் இவரிடம் சில விஷயங்கள் கற்றுக்கொள்ளும் அளவுக்கு ஜாக்பாட் நிகழ்ச்சியை நன்றாகவே தொகுத்து வழங்கி வந்தார்.

 ஜாக்பாட் கான்செப்ட்

ஜாக்பாட் கான்செப்ட்

ஜாக்பாட் கான்செப்ட் தொலைக்காட்சிகளுக்கு புதிதாக இருந்தது. இன்றும் பார்க்கும் படி நிகழ்ச்சியின் கான்செப்ட் ஃபிரஷாக இருக்கிறது. ஒரு கேள்வி...இதற்கு முதலில் மக்களிடம் சர்வே...பின்னர் கலந்துக்கொண்டவர் அளிக்கும் பதில்கள் என்று நல்ல நிகழ்ச்சி ஜாக்பாட்.

 மறு ஒளிபரப்பு

மறு ஒளிபரப்பு

மறு ஒளிபரப்புத்தான் என்றாலும், , குஷ்பூ நடத்துவதாலும், ஜாக்பாட் புதுமையான ரசிக்க கூடிய நிகழ்ச்சி என்பதாலும், போரடிக்காமல் நன்றாகவே போகிறது. இந்த லாக்டவுனில் ஜாக்பாட் மறு ஒளிபரப்பு என்பது ஜெயா டிவி எடுத்த நல்ல முடிவுதான். சலிப்பு தட்டாமல் நிகழ்ச்சியை பார்க்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+