என் வாழ்க்கையில் பல ஏமாற்றம் நடந்திருக்கு.. கமல்ஹாசன் போனில் கேட்ட வார்த்தை.. மனம் திறந்த கோவை சரளா
சென்னை: நடிகை கோவை சரளா பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் உடன் ஜோடியாக சதிலீலாவதி திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். தன்னுடைய வாழ்வில் பல ஏமாற்றங்கள் கிடைத்த பொழுதிலும் சதிலீலாவதி திரைப்படத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்தும் அந்த பேட்டியில் கோவை சரளா பேசியிருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக வெளியே சிரித்து கொண்டிருப்பவர்கள் பலருடைய வாழ்க்கையில் சோகங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் அதை பலர் வெளியே காட்டிக் கொள்வது கிடையாது. அவர்களுடைய மறுபக்கம் ஏதாவது ஒரு இடத்தில் வெளியே தரும் தெரியபோதுதான் பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கும்.

அது போல தான் கோவை சரளா காமெடி நடிகையாக பல வருடங்களாக தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து புகழின் உச்சத்தில் இருக்கிறார், ஆனால் அவருடைய வாழ்க்கையிலும் பல ஏமாற்றங்களும் நம்ப முடியாத விஷயங்களும் நடந்து இருப்பதாக கோவை சரளா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். நடிகை கோவை சரளா ஆரம்பத்தில் வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற பலருக்கும் ஜோடியாக காமெடி கேரக்டரில் நடித்திருந்தாலும் நடிகர் கமல்ஹாசனோடு சதி லீலாவதி திரைப்படத்தில் ஜோடியாக நடித்ததை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது.
அந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் கோவை சரளா இரண்டு பேருமே கோவை தமிழில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள். நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் கிரேசி மோகன் இணைந்து விட்டால் அங்கு காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அதற்கு எடுத்துக்காட்டாக பல திரைப்படங்கள் இருந்தாலும் சதி லீலாவதி திரைப்படமும் அதில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
அரவிந்த்சாமி கூட நடிக்காத காரணம் இதுதான்.. வெளிப்படையாக நானே சொல்லிட்டேன்.. நடிகை மீனா ஓப்பன் அப்
அந்த திரைப்படத்தின் ஆரம்பத்தில் இருந்தே காதல், துரோகம் ஒரு பக்கம் இருந்தாலும் காமெடி பஞ்சம் இல்லாமல் பரவி இருக்கும். அதிலும் கோவை சரளா மற்றும் கமல்ஹாசன் இருவருடைய இயல்பான நடிப்பு பார்க்கும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும். அது பற்றி கோவை சரளா சமீபத்தில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் ஆரம்பத்தில் சதி லீலாவதி திரைப்படத்தில் நடிப்பதற்காக எனக்கு இயக்குனர் போன் பண்ணி பேசினார். முதலில் நான் நம்பவே இல்லை. என்னுடைய வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை நான் பார்த்திருக்கிறேன். எத்தனையோ திரைப்படங்களில் நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறேன் ஆனால் திரையில் பார்க்கும்போது அங்கே எதுவுமே இருக்காது. இது ஒரு முறை அல்ல பலமுறை என்னுடைய வாழ்க்கையில் நடந்திருக்கு.
அதனால் நான் பெருசாக எதற்கும் சந்தோஷப்பட மாட்டேன். சந்தோஷப்பட்டாலே கடைசியில் எனக்கு ஏமாற்றம்தான் கொடுக்கிறது. அதனால் நடக்கிறது நடக்கட்டும் என்று விட்டு விடுவேன். அது போல தான் கமல்ஹாசன் உடன் நீங்கள் ஜோடியாக நடிக்க போறீங்க என்று சொன்னது கூட எனக்கு தெரிந்தது. இல்லை என்றால் கமல்ஹாசன் உடன் நம்ம ஜோடியாக நடிக்க போறோமா? என்று சந்தோசம் எனக்கு தோன்றவே இல்லை.
இயக்குனர் என்னிடம் பேசும்போது நான் தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். நான் அங்கு கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தேன். நம்முடைய கேரக்டர் அந்த திரைப்படத்தில் முக்கியமா இருக்கோ இல்லையோ நாம அங்க அட்வான்ஸ் வாங்கியாச்சு அப்போ நடித்து கொடுத்து தான் ஆக வேண்டும்.
அந்த நேரத்தில் கமலுக்கு ஜோடி ஆக நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த நாள் சரியில்லாதது திரைப்படம் இயக்குனரிடம் கால்ஷீட் கொடுப்பதற்கு டேட்டே இல்லை என்று இப்போதைக்கு என்னால் முடியாது சார் என்று சொன்னேன். அதற்கு அவர் நீங்க எப்போதுதான் ஃப்ரீயா இருப்பீங்கன்னு கேட்டார். நான் ஆறு மாசம் ஆகும் என்று சொன்னேன். சரி என்று அவரும் சொல்லி வைத்து விட்டார்.
அப்போ கூட உண்மையில் நான் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க போக தான் போன் பேசுகிறார் என்று நம்பவில்லை. பிறகு கமல்ஹாசன் எனக்கு போன் பண்ணுனார் அதை என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அவரே பேசின பிறகு தான் நான் உண்மை என்று நம்பினேன். ஆனாலும் அப்போது எனக்கு கால்ஷட் இல்லை என்பதை அவரிடமும் சொன்னேன்.
அதற்கு கமல்ஹாசன் சரி நீங்க எப்போ ஃப்ரீயா இருப்பீங்க என்று கேட்க நான் நான்கு மாதம் ஆகும் என்று சொன்னேன். அதற்கு சரி என்று கமல்ஹாசனும் சொல்லிவிட்டார். பிறகு அவர் கனடா போய்விட்டார் அந்த நேரத்தில் அவருக்கும் பாலு மகேந்திராவிற்க்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதாவது காமெடி நடிகையை உங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதற்கு கமல்ஹாசன் கண்டிப்பாக கோவை சரளாதான் என்னோட நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். பிறகு பாலு மகேந்திரா சாரும் சரி என்று சொல்லிவிட்டார். படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு அவரே என்னிடம் கமல் உன்னை வைத்து நடிக்க வேண்டும் என்று தீவிரமா சொன்னார். ஆனால் படம் வெளியான பிறகு தான் எனக்கே தெரிந்தது அவர்கள் எடுத்த முடிவு எவ்வளவு சரியானது என்று என்னிடம் பேசி இருந்தார்.
அதுபோல நான் நான்கு மாதங்கள் பிஸியாக நடிக்கிறேன் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டு பிறகு கமல்ஹாசன் என்னையே நடிக்க வைத்தார். அது எனக்கு பெரிய கிப்ட் தான் என்று அந்த பேட்டியில் கோவை சரளா பேசியிருக்கிறார்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications