அரவிந்த்சாமி கூட நடிக்காத காரணம் இதுதான்.. வெளிப்படையாக நானே சொல்லிட்டேன்.. நடிகை மீனா ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை மீனா பேட்டி ஒன்றில் நான் இதுவரைக்கும் அரவிந்தசாமி கூட ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை, அதற்கு காரணம் இதுதான் என்று சில தகவல்களை சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அரவிந்த்சாமி உடன் தன்னுடைய மகள் நடிக்கும் போது தான் அரவிந்த்சாமியிடம் சொன்ன வார்த்தைகளையும் அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா இப்போதும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக மீனா பல நடிகர்களோடு நடித்திருக்கிறார். அதிலும் தான் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுக்கு மகளாகவும் நடித்து அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.

Television Meena

அதுபோல மீனாவின் மகள் நைனிகாவும் இப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மீனா சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் எத்தனையோ நடிகர்களோடு நடித்திருக்கிறேன், ஆனால் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது அரவிந்தசாமி உடன் தான். ஆனால் அவருடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு காரணம் பற்றியும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அதில் மீனா பேசுகையில் நான் அந்த நேரத்தில் ரெஸ்ட்டே இல்லாமல் ஒரே நாளில் இரண்டு மூன்று படங்களுக்கு கூட ஷூட்டிங்கில் கலந்து கொண்டு இருந்தேன். நான் பல மொழிகளில் நடித்திருந்தாலும் அதிகமான நடிகர்களோடு நடித்து விட்டேன். ஆனால் தமிழில் அரவிந்த்சாமியோடு ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஆனால் ஒரு படத்தில் அவரோடு நடித்து விட வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டு கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் தான் எனக்கு அரவிந்த்சாமி உடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த நேரத்தில் எனக்கு கால்ஷீட் பிரச்சனை இருந்தது. வேறு ஒரு படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்ததால் அரவிந்த்சாமியின் படத்தில் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு பிறகு அந்த படத்தில் சுகன்யா நடித்தாங்கன்னு நினைக்கிறேன். அரவிந்த்சாமி எனக்கு அவ்வளவு பிடிக்கும். ரோஜா படத்தில் அவருடைய நடிப்புக்கு நான் ரசிகையாக மாறிவிட்டேன்.

அதற்கு பிறகு தான் அவரோடு நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. அவர் அதிகமான படங்களில் நடிக்க மாட்டார். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் தான் நடிப்பார். அதிலும் மணிரத்தினம் படம் என்றால் அதில் அவரை எதிர்பார்க்கலாம். அப்படி அவர் பார்த்து பார்த்து நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் நான் அவரோடு நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஒருமுறை வந்த வாய்ப்பு விலகிப் போய்விட்டது பிறகு எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் என்னுடைய மகள் அவருடைய படத்தில் நடித்து விட்டாள். பாஸ்கர் என்ற ராஸ்கல் படத்தில் அமலா பாலுக்கு மகளாக என்னுடைய மகள் தான் நடித்திருந்தார். அந்த ஷூட்டிங்கில் நான் நைனிகாவை கூட்டிக்கொண்டு போயிருந்தேன்.

அப்போது அரவிந்த்சாமியிடம் நேரடியாக உங்களோடு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனால் இதுவரைக்கும் நடக்கவே இல்லை என்று நேரடியாக சொன்னேன். அதற்கு கண்டிப்பாக நடக்கும் என்று அரவிந்த்சாமி சொன்னார் என்று சிரித்தபடி அந்த பேட்டியில் மீனா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+