43 வயசுல தான் கல்யாணம்.. காரணமே இதுதான்.. இப்போ நிலைமை மாறிடுச்சு.. நடிகை லாவண்யா உருக்கம்
சென்னை: திரைப்படங்கள் மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லாவண்யா தனக்கு எதனால் 43 வயதில் திருமணம் ஆனது என்பது பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதோடு தான் திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடித்துக் கொண்டிருப்பது குறித்தும் தன்னுடைய கணவர் தனக்கு கொடுக்கும் சப்போர்ட் பற்றி அந்த வீடியோவில் லாவண்யா பேசியிருக்கிறார்.

அந்த வகையில் நடிகை லாவண்யா 1997 ஆம் ஆண்டு வெளியான சூரிய வம்சம் திரைப்படத்தில் சொப்னா என்ற கேரக்டரில் சின்னதாக அறிமுகம் ஆகி இப்ப வரைக்கும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததால் அதிகமாக ஜொலிக்க முடியாமல் போயிருக்கிறது.
லாவண்யா படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன், தங்க மகன் உட்பட பல பெரிய படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு 2014 ஆம் ஆண்டு பாலா படத்தில் தான் கடைசியாக லாவண்யா நடித்திருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த லாவண்யா கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இப்போது பகாசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு கடந்த வருடத்தில் திருமணம் ஆகியது. திருமணம் ஆகி ஒரு வருட திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியில் சில தகவல்களை பேசி இருக்கிறார்.
அதில் தான் 43 வயது வரைக்கும் திருமணம் செய்யாததற்கு காரணம் என்னுடைய குடும்ப சூழ்நிலைதான். எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாததால் அடுத்தது வேலைகளிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன் என்னுடைய குடும்பத்தினரும் எனக்கு சப்போர்ட்டாகவே தான் இருந்தார்கள். அந்த நேரத்தில் தான் நான் என்னுடைய கணவரை ஒரு திருமண பங்க்ஷனில் சந்தித்தேன்.
என்னுடைய குடும்ப நண்பர் மூலமாகத்தான் அவர் அறிமுகமானார். அதற்கு பிறகு நட்பாகத் தொடங்கிய எங்களுடைய பழக்கம் பிறகு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. எங்களுடைய காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும் எல்லோரும் சம்மதம் சொன்னார்கள். திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
கல்யாணத்தைப் பொறுத்த வரைக்கும் இப்போது எல்லாம் முன்பு போல நிலைமை இல்லை. எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்களோ அந்த நேரத்தில் தானே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால் எனக்கும் 43 வயது திருமணம் பண்ணி இருக்கிறோமே என்ற வருத்தம் இல்லை. என்னுடைய கணவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.
நான் இந்த கேரக்டரில் நடிக்கவா என்று கேட்டால் நல்ல கரெக்டாக இருந்தால் நீ நடி என்று சொல்லிவிடுகிறார். அதனால் திருமணத்திற்கு முன்பு இருந்ததை விடவும் இப்போது நான் தைரியமாகவும் நடிக்கிறேன். அதே நேரத்தில் நான் அதிகமான திரைப்படங்களில் தங்கச்சி கேரக்டரிலும் நடித்திருக்கிறேன். அதனால் பல கஷ்டங்களும் பெற்று இருக்கிறேன்.
கதாநாயகிகள் அழகாக இல்லை என்றால் நமக்கும் மேக்கப் போட்டு அசிங்கமாக்கி விடுவார்கள். அப்படியே நிறைய படங்களில் நடந்திருக்கிறது. ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அது வெளியே வராமலேயே போய்விட்டது என்று அந்த பேட்டியில் லாவண்யா உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications