மந்த்ராவின் சீக்ரெட்.. வெயிட் லாஸ் செய்தது இப்படித்தானாம்.. என்னாது விடிகாலை 4.30 மணிக்கா? அடேங்கப்பா
சென்னை: நடிகை மந்த்ராவின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதில், தன்னுடைய திரையுலக வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், உடல் எடையை குறைக்க அவர் மேற்கொண்ட பயிற்சிகள் என்னென்ன என்பது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.
நடிகை மந்த்ரா ஆந்திராவை சேர்ந்தவர்.. தெலுங்கு படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக 6வயதில் நடிக்க துவங்கினார்.. ஹீரோயினாக அறிமுககமானதும் தெலுங்கில்தான்.. இவரது நிஜப்பெயர் ராசி.. ஒரு சில படங்களில் விஜயா என்றும், தமிழில் மந்த்ரா என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

அருண் விஜய்: "பிரியம்" என்ற படத்தின் மூலம் 1996ம் ஆண்டு தமிழில் அருண் விஜய்யுடன் அறிமுகமானார்.. இதையடுத்து, விஜய்யுடன் லவ் டுடே', அஜித்துடன் 'ரெட்டை வயசு', பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கொண்டாட்டம்" போன்ற வரிசையாக பல படங்களில் நடித்தார். கிளாமர் ரோல்களிலேயே அதிகம் நடித்து கொண்டிருந்தபோதும், முன்னணி நடிகையாக தமிழில் இவரால் வர முடியவில்லை.
ஆனால், தெலுங்கில் இவருக்கு நிறைய குடும்ப பாங்கான படங்கள் அமைந்தன.. இதற்காக பல படங்களில் பல விருதுகளை பெற்றிருக்கிறார்.. கடந்த 2005ம் ஆண்டு பிரபல டைரக்டர் ஸ்ரீமுனி என்பவரை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார்.. பிறகு, கடந்த 2013ம் ஆண்டிலிருந்து மீண்டும் படங்களிலுடம், தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.
கிளாமர்: இந்நிலையில், சமீபத்தில் பிரபல சேனலுக்கு மந்த்ரா ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், தன்னுடைய திரையுலக பயணம் குறித்து ஏராளமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.. குறிப்பாக, கிளாமர் மற்றும் கவர்ச்சி இரண்டிற்குமான வித்தியாசம் என்ன என்பது குறித்து விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:
"கிளாமர் என்பது, நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்தது.. பெண்களை ஆபாசமாக பார்ப்பது வேறு, கிளாமராக பார்ப்பது என்பது வேறு... ஒருவரின் கண்ணோட்டத்தை பொறுத்துதான் இது அமைகிறது. சேலை கட்டினாலும்கூட, அதில் கிளாமர் உள்ளது..
ஸ்லீவ்லெஸ்: டைரக்டர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்று கேட்கிறார்களோ, அதற்கேற்றபடிதான் நடிக்க வேண்டும்.. அனைத்துமே டைரக்டர்கள் முடிவு செய்துதான் எல்லாம்.. சிலசமயம், சங்கோஜமான டிரஸ் ஏதாவது இருந்தால் மட்டும், "இந்த டிரஸ் வேண்டாமே" என்று நான் ரிக்குவஸ்ட் செய்து கேட்பேன்..
பெரும்பாலும், ஸ்லீவ்லெஸ் போடறதுக்கு எனக்கு கஷ்டமா இருக்கும்.. ஆனால், மார்டன் டிரஸ் என்றாலே ஸ்லீவ்லெஸ் இல்லாமல் எப்படி இருக்கும்? ஆனாலும், சில படங்களில் ஸ்லீஸ்லெஸ் இல்லாமல், தவிர்த்திருக்கேன்
ஹோம்லி கேரக்டர்கள்: ஆனால், தெலுங்கில் என்னை ஹோம்லியாகவே மக்கள் பார்க்கிறார்கள்.. அவங்க வீட்டு பெண்ணாகவே என்னை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. பக்கத்து வீட்டு பெண்ணாக கூட இல்லை, தங்கள் சொந்த வீட்டு பெண்ணாகவே என்னை, ஒரு அண்ணியாக, அக்காவாக, மகளாக., தங்கையாகவே பார்க்க துவங்கினார்கள்.
அதனால்தான், தெலுங்கில் நிறைய ஆஃபர்கள் வந்தன. நான் அதிகமாக நடித்ததும் தெலுங்கில்தான்.. 50 படங்களுக்கு மேலாக தெலுங்கில் நடித்திருக்கிறேன். நடுநடுவுல பட வாய்ப்புகள் வந்ததால், அவைகளில் மட்டுமே நடித்து வந்தேன்.. ஒருமுறை சீரியல் வாய்ப்பு என்னை தேடி வந்தது.. அப்போது என்னுடைய மகளும் ஸ்கூலுக்கு போக ஆரம்பித்துவிட்டதால், அந்த சீரியலில் நடித்தேன்.. ஆனால், அந்த சீரியல், எதிர்பார்க்காத அளவுக்கு ஹிட் ஆயிடுச்சு..
வெயிட் லாஸ்: அப்போது நான் குண்டாக இருந்தேன்.. சீரியல் நடித்துக் கொண்டே வெயிட் குறைக்கவும் துவங்கினேன்.. வெயிட் குறைவதற்காக, ஒருவேளை சாப்பிடும் சாப்பாட்டை, 6 வேளைக்கு பிரித்து சாப்பிடுவேன்.. நிறைய தணணீர் குடிப்பேன்.. வேகமாக வாக்கிங் போவேன்.. ஸ்விம்மிங்கில் ஏரோபிக்ஸ் செய்வேன்.
விடிகாலை 4.30 மணிக்கே நீச்சல் குளத்தில் ஏரோபிக்ஸ் செய்ய ஆரம்பித்துவிடுவேன்.. இப்படித்தான் 95 கிலோவிலிருந்து 62 கிலோவாக என்னுடைய எடையை குறைத்தேன்"என்றெல்லாம் மந்த்ரா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications