மந்த்ரா ஓபனா சொல்லிட்டாங்களே.. அஜித்தை பார்த்துட்டே இருப்பாராம்.. நடிகை மந்த்ரா கவனித்த அந்த மாற்றம்
சென்னை: மந்த்ரா திரையுலகிலிருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த நிலையில், சமீப காலமாக சீரியல்கள், திரைப்படங்களில் நடித்து வருகிறார்.. அதேபோல பேட்டிகளையும் அவ்வப்போது தந்து வருகிறார். அந்த வகையில், நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்தது பற்றி பல்வேறு தகவல்களையும் தன்னுடைய பேட்டிகளில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரபல நடிகை மந்த்ரா ஆந்திராவை சொந்த ஊராக கொண்டவர்.. இதனால் தெலுங்கு படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக 6வயதில் நடிக்க ஆரம்பித்தார்.. ஹீரோயினாக அறிமுகமானதும் தெலுங்கு படத்தில்தான்.. இவரது நிஜப்பெயர் ராசி.. ஒரு சில படங்களில் விஜயா என்றும், தமிழில் மந்த்ரா என்றும் அழைக்கப்படுகிறார்.

"பிரியம்" என்ற படத்தின் மூலம் 1996ம் ஆண்டு தமிழில் அருண் விஜய்யுடன் அறிமுகமானார். இதையடுத்து, விஜய்யுடன் லவ் டுடே', அஜித்துடன் 'ரெட்டை வயசு', பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கொண்டாட்டம்" போன்ற வரிசையாக பல படங்களில் நடித்தார்.
சீரியல்கள்: கிளாமர் ரோல்களிலேயே அதிகம் நடித்து கொண்டிருந்தபோதும், இவரால் முன்னணி நடிகையாக தமிழில் உயர முடியவில்லை. எனினும், தெலுங்கில் ஏராளமான குடும்ப பாங்கான படங்கள் அமைந்தன.. பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். கடந்த 2005ல் பிரபல டைரக்டர் ஸ்ரீமுனி என்பவருடன் திருமணம் ஆனநிலையில், சினிமாவை விட்டு ஒதுங்கயிருந்தார். கடந்த 2013ம் ஆண்டிலிருந்து மீண்டும் சீரியல்களிலும், சில படங்களிலும் நடிக்க துவங்கியிருக்கிறார்.
அதேபோல, அவ்வப்போது சில பேட்டிகளையும் தந்து வருகிறார்.. சமீபத்தில் தந்திருந்த ஒரு பேட்டியில், கிளாமர் மற்றும் கவர்ச்சி இரண்டிற்குமான வித்தியாசம் என்ன என்பதை பற்றி விளக்கமாக கூறியிருந்தார்.
அதாவது, "நாம் எப்படி பார்க்கிறோமோ அதை பொறுத்து அமைவதே கிளாமர்.. பெண்களை ஆபாசமாக பார்ப்பது வேறு, கிளாமராக பார்ப்பது வேறு... ஒருவரின் கண்ணோட்டமே முக்கியம். சேலை கட்டினாலும் கிளாமர் உள்ளது.. அனைத்துமே டைரக்டர்கள் முடிவு செய்ததுதான்..
ஆபாசம் டிரஸ்: சிலசமயம், சங்கோஜமான டிரஸ் எனக்கு தரப்பட்டால், "இந்த டிரஸ் வேண்டாமே" என்று ரெக்வஸ்ட் செய்வேன். மார்டன் டிரஸ் என்றாலே ஸ்லீவ்லெஸ் கண்டிப்பாக இருக்கும்.. அப்படியிருந்தும் சில படங்களில் ஸ்லீஸ்லெஸ் இல்லாமல், தவிர்த்திருக்கேன் என்றெல்லாம் கூறியிருந்தார்.
இந்நிலையில் மந்த்ரா, குமுதம் சேனலுக்கு தந்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதில், நடிகர் அஜித்துடன் தான் இணைந்து நடித்ததை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அஜித்: "அஜித் ரொம்ப ஜோவியலாக பேசக்கூடியவர்.. ரெட்டை ஜடை வயசு ஷூட்டிங்கில் ஃப்ரீ டைம் இருக்கும்போது, என் அம்மா, அப்பாவுடன் உட்கார்ந்து சீட்டு விளையாடுவார்.. புரொடக்ஷனுடன் உட்கார்ந்துதான் சாப்பிடுவார்.. நான் அப்போது யாரிடமும் பேசமாட்டேன்.. ரொம்ப அமைதியான டைப்.. ஒருவேளை என் வயது, காரணமாக இருக்கலாம்.. என்னுடனேயே அம்மா, அப்பா இருவருமே இருப்பார்கள்.
ஆனாலும் அஜித்தை பார்த்துகிட்டே இருப்பேன்.. அப்போது அஜித் சார்மிங்காக இருப்பார்.. உடனே என் அம்மா, ஏன் அப்படி பார்க்குறேன்னு கேட்பாங்க.. ஒன்னுமில்லைன்னு சொல்லிடுவேன்.. அப்படித்தானே சொல்ல முடியும்? ஆனால், அஜித் ஹ்யூமர் சென்ஸ் அதிகமுள்ளவர்.. விஜிபி பீச்சில் ஒரு பாட்டு ஷூட்டிங்கின்போதுதான் அவரது ஹ்யூமர் எனக்கு தெரியவந்தது.
மிஸ்ஸிங்: ரெட்டை ஜடை வயசுக்கு பிறகு நீண்ட வருடம் கழித்து, ராஜா படத்தில் வெத்தலகொடியே பாட்டுக்கு ஆடியிருந்தேன். கேரவன் வந்த நேரம் அது.. அஜீத்துக்கு கல்யாணமாகி, ஷாலினியும் அந்த ஷூட்டிங்குக்கு வந்திருந்தார்.. ஆனால், அப்போது அந்த ஹ்யூமர் அஜித்திடம் மிஸ்ஸாகியிருந்தது.. ஒருவித சைலண்ட் தெரிந்தது.. ரொம்ப மரியாதைக்குரியவராக காணப்பட்டார்" என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications