அட்ஜஸ்மென்ட் செய்தால்தான் சினிமா வாய்ப்பு! தனுஷ் மேனேஜர் பெயரில் அழைப்பு? போட்டுடைத்த நடிகை மான்யா
சென்னை: கோலிவுட்டில் அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவது வாடிக்கையாகி விட்ட நிலையில், தற்போது சின்னத்திரை நடிகை ஒருவர் அளித்திருக்கும் பேட்டி, நடிகர் தனுஷை மையமாக வைத்து மீண்டும் ஒரு விவாதப் பொருளைக் கிளப்பியுள்ளது. சன் டிவி தொடர்களான 'வானத்தைப் போல' சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை மான்யா ஆனந்த் தான், தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அழைப்பு குறித்துப் பகிரங்கமாகப் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனுஷ் டீம் பெயரில் வந்த அழைப்பு
நடிகை மான்யா ஆனந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்குச் சினிமா வாய்ப்பு தேடி வந்தபோது, தான் சந்தித்த அட்ஜெஸ்ட்மென்ட் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இதில் அவர் குறிப்பிட்ட சில விஷயங்கள், நடிகர் தனுஷின் பெயரைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் நடப்பதாகக் கூறப்படும் சம்பவங்களைப் போல இருப்பதாகக் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மான்யா ஆனந்த் கூறியதாவது:
"நடிகர் தனுஷின் டீமில் இருந்து ஷ்ரேயாஸ் என்பவர் பெயரில் எனக்கு மெசேஜ் செய்திருந்தார். என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு, பண்ணுறீங்களா எனக் கேட்டார். அதற்கு நான், ரொம்ப ஓவர் கிளாமரா இருந்தா நடிக்க மாட்டேன், ரொம்ப ரொமாண்டிக்காக இருந்தாலும் பண்ண மாட்டேன். எனக்கு டீசண்டான கேரக்டர் இருந்தால் நடிப்பேன் எனச் சொன்னேன். அவர், 'தனுஷ் சார் படமாக இருந்தாலும் பண்ண மாட்டீங்களா?' எனக் கேட்டார். நான் 'யார் படமாக இருந்தாலும் பண்ண மாட்டேன்' எனச் சொல்லிவிட்டேன்.

நடிகை மான்யாவின் குற்றச்சாட்டு
வாய்ப்பு குறித்த பேச்சு தொடர்ந்து நடந்தபோது, அந்த நபர் தனக்குத் தவறான அழைப்பு விடுத்ததாக மான்யா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார். "அடுத்ததாக, 'கமிட்மெண்ட் இருக்கும்' என்று சொன்னாங்க. அப்படின்னா என்னனு கேட்டேன். அதற்கு அவர், 'ஹீரோ கூடக் கமிட்மெண்ட் இருக்கும்' என்று சொன்னார். நான் 'அதெல்லாம் பண்ண மாட்டேன்' என்று சொல்லிவிட்டேன்." பின்னர் சில நாள் கழித்து, இதேபோல் இன்னொரு மேனேஜரிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அவரும் தனுஷ் படத்தில் நடிக்கச் சான்ஸ் தருவதாகக் கூறினார். ஸ்கிரிப்டையும் எனக்கு அனுப்பினார்.
இந்தச் சம்பவங்கள் உண்மையிலேயே தனுஷின் தரப்பிலிருந்து நடந்ததா அல்லது அவரது பெயரைப் பயன்படுத்தி மோசடிகள் நடக்கிறதா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர், தனுஷின் மேனேஜர் ஷ்ரேயாஸ் இதுபற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். தனது பெயரைப் பயன்படுத்திச் சிலர் மோசடியில் ஈடுபடுவதாக அவர் கூறியிருந்தார். ஒருவேளை அதுபோன்ற ஒரு மோசடி வலையில் மான்யா சிக்கி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை மான்யா, தனுஷுடன் வேலை பார்த்த தனது சக நடிகை ஒருவரிடம் இதைப்பற்றிச் சொன்னபோது, அதற்கு அவர், "இது தனுஷுக்கே தெரியாமல் நடக்கலாம்" எனச் சொன்னதாக மான்யா கூறியுள்ளார். எனக்கு மட்டுமில்லை, நிறைய நடிகைகளுக்கு இதுமாதிரி நடந்திருக்கிறது. இதைத் திரையுலகமும், தனுஷ் டீயும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று நடிகை மான்யா ஆனந்த் கூறியிருப்பது, கோலிவுட்டில் மீண்டும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications