"இப்போ சாத்தினதை சாத்து" சிக்னேச்சர் ஸ்டெப் போட்ட நடிகை மீனா! ஸ்டார்ட் மியூசிக்கில் அதிர்ந்த அரங்கம்
சென்னை: சேதுபதி ஐபிஎஸ் படத்தில் இடம் பெற்ற இப்போ சாத்தினதை சாத்து பாடலுக்கு விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக்கில் நடிகை மீனா கொடுத்த ரியாக்ஷனால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களை கவர்ந்தது ஸ்டார்ட் மியூசிக். இந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை விஜே பிரியங்கா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் பல கலைஞர்கள் இரு அணிகளாக கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் கடந்த முறை மாமியார் வாரம் என்பதால் விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் வில்லி மாமியார்களும் மருமகள்களும் கலந்து கொண்டனர். அது போல் ஒரு முறை சுரேஷ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ரியாலிட்டி ஷோ 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 3 சீசன்கள் முடிந்து தற்போது 4ஆவது சீசன் நடந்து வருகிறது. அதில் 1, 2, 4 சீசன்களை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார். 3ஆவது சீசனின் போது பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதால் அந்த நிகழ்ச்சியை மட்டும் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்கியுள்ளார்.
இதுவரை 84 எபிசோடுகள் போயுள்ளன. இதில் இசை, பாடல் தொடர்பான சில சுற்றுகளும் அதில் வென்றால் பரிசுத் தொகைகளும் இருக்கும். இந்த வாரம் 90ஸ் களில் வெள்ளித்திரையை கலக்கிய கதாநாயகிகள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் மீனா, சங்கவி, மகேஸ்வரி ஆகியோர் ஒரு புறம் கலந்து கொண்டுள்ளனர். இதில் சவுண்ட் பார்ட்டி எனும் சுற்றில் ஒரு அணியில் உள்ளவருக்கு 3 பாடல்கள் கொடுக்கப்படும். அந்த அணியில் உள்ளவர் அதை நடித்துக் காட்ட அந்த சரியான பாடலை மற்ற இருவரும் கண்டுபிடிக்க வேண்டும். அது போல் எதிரணிக்கும் இதே போல் நடத்தப்பட்டு அந்த சுற்றின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

அந்த வகையில் மீனா ஆக்ஷனில் இறங்க சங்கவி, மகேஸ்வரி ஆகியோர் சவுண்ட் பார்ட்டில் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அப்போது டிஜே ஒளிபரப்பும் பாடல் அந்த இருவரை தவிர மற்றவர்களுக்கு மட்டுமே கேட்கும். மீனாவுக்கு இப்போ சாத்தினதை சாத்து பாடல் ஒளிபரப்பப்பட்டது.
உடனே மீனா நான் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் எப்படி நடனம் ஆடினாரோ அதே போல் சூப்பர் ஸ்டெப்ஸ்களை போட்டார். இதற்கு அரங்கமே அதிர்ந்தது. ஆனால் சங்கவி, மகேஸ்வரியால் அந்த பாடலை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சாத்து என்பதற்காக இரு கைகளையும் மூடுவது போல் கூட மீனா நடித்து காட்டினார். ஆனால் சங்கவி, சாத்து, மூடு என அதற்கு பெயர்களை சொல்கிறார்களே தவிர சரியான பாடலை கண்டுபிடிக்கவில்லை. அந்த பாடலை கண்டுபிடித்தாரா இல்லை டைம் முடிந்துவிட்டதா என்பதை வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி பார்ப்போம். அது போல் இவர்களுக்கு எதிரணியில் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் இரு தினங்களில் ப்ரோமோக்களில் வெளி வர வாய்ப்புள்ளது.
விஜயகாந்த், மீனா நடித்த சேதுபதி ஐபிஎஸ் படத்தில் விஜயகாந்த் ஐபிஎஸ் ஆபிஸர். மீனா ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருப்பார். அப்போது மீனாவின் பள்ளியை தீவிரவாதிகள் பிணையாக பிடித்து வைத்துக் கொண்டு விஜயகாந்திடம் பேரம் பேசுவார்கள். அதில் கசான் கான்தான் தீவிரவாதியாக நடித்திருப்பார். அவரது கவனத்தை திசைதிருப்பி போலீஸாரை உள்ளே விடும் முயற்சியாக மீனா கவர்ச்சியாக நடனம் ஆடுவார். அந்த பாடல்தான் இப்போ சாத்தினதை சாத்து... பாடல்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications