தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்ரா வீட்டில் விசேஷம்.. கணவரோடு வெளியிட்ட க்யூட்டான வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகை நக்ஷத்திரா நாகேஷ் இன்று தன்னுடைய கணவரோடு வரலட்சுமி விரதம் இருந்து பூஜை செய்து அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இன்று வரலட்சுமி விரதம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. என்னதான் மாடர்ன் உடை அணிந்து விதவிதமாக போட்டோக்கள் வெளியிட்ட நடிகைகள் கூட இன்று பாரம்பரிய உடைகளில் பவ்யமாக வரலட்சுமி விரதத்தை கொண்டாடி இருக்கின்றனர். திருமணமான பெண்கள் தங்களுடைய கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் தங்களுடைய வருங்கால கணவர் நல்லவராக ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்று வரலட்சுமி விரதம் இருந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று காலையில் இருந்து சின்னத்திரை, வெள்ளி திரை நடிகைகள் எல்லோரும் தங்களுடைய வீட்டில் கொண்டாடப்பட்ட வரலட்சுமி விரத புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சீரியல் நடிகை நக்ஷத்திரா நாகேஷ் தன்னுடைய கணவரோடு எடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். அதோடு தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு பிறகு நக்ஷத்திரா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்பதால் ஏதாவது விசேஷமா அதனால் தான் எந்த சீரியலிலும் நீங்கள் வரவில்லையா? என்று குழந்தை குறித்தும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நக்ஷத்ரா நாகேஷ் முதல்முறையாக 2014இல் வானவில் என்னும் நிகழ்ச்சியை தந்தி டிவியில் தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியில் காலடி எடுத்து வைத்தவர். சன் சிங்கர் என்னும் நிகழ்ச்சி மூலமாக பாடகர்களையும் பாட்டு ரசிகர்களையும் பரவசப்படுத்தி தன்னுடைய சிரிப்பான பேச்சால் தனக்கே உரிய தனி தமிழ் உச்சரிப்பு திறனுடன் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருந்தார்.
சன் டிவியில் தொகுப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவராக இவர் வலம் வந்து கொண்டிருந்தார். தொகுப்பாளர்களில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்து இழுத்தவர் என்று சொன்னதும் டக்கென்று ஞாபகத்திற்கு வருபவர் இவர் தான். அந்த அளவிற்கு தமிழ் உச்சரிப்பாலும் அழகாலும் அனைவரின் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருந்தவர்.
https://tamil.oneindia.com/news/delhi/election-commission-to-announce-maharashtra-j-k-haryana-assembly-elections-dates-today-630455.html
அதன்பிறகுதான் வாணி ராணி என்னும் சீரியலில் ருத்ரா கேரக்டரில் முதல் முதலில் சீரியல்களில் நடிக்க காலடி எடுத்து வைத்தார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்த குஷ்பூ இவருக்கு பேச மட்டுமல்ல நடிக்கவும் நன்றாகவே தெரிகிறது என்று தான் தனது லட்சுமி ஸ்டோர் என்னும் சீரியலில் இவருக்கு பாக்கியலட்சுமி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார் .அதிலும் தனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தி இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் பாக்கியலட்சுமி ஆக இடத்தை பிடித்து விட்டார்.
லட்சுமி ஸ்டோர் சீரியல் மூலமாக காதல் பண்ணும் இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவருக்கும் இந்த சீரியலில் நடிகருக்கும் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி காரணமாக பலர் தங்களுடைய ஸ்டேட்டஸ் சாங்களிலும் இவர்களுடைய போட்டோஸ்கள் தான் இடம்பெற்றன. இந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்த இவர் இந்த சீரியல் சீக்கிரத்தில் முடிக்கப்பட்டதும் இவரை காணாது இவருடைய ரசிகர்கள் தவித்து வந்தனர். அதன் பிறகும் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் இவர் சீரியலில் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில்தான் மீண்டும் நாயகி சீரியலில் இவருக்கு வாய்ப்பு வந்தது. கொரோனா லாக்டவுன் காலத்திற்கு முன்பாக நாயகி சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இந்த லாக்டவுன் காரணமாக இதில் ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த நடிகைகள் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதால் புதிய அத்தியாயத்துடன் இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டது.
அதில் இவர் இந்த சீரியலின் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த சீரியலில் நடித்த தெய்வமகள் பிரகாஷ்க்கும் மீண்டும் ஒரு திருப்புமுனையாக இந்த சீரியல் வலம் வந்தது. ஆனாலும் இதுவும் சீக்கிரத்தில் முடிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நக்ஷத்ராவிற்கு ராகவ் என்பவரோடு திருமணம் முடிவடைந்தது. திருமணத்திற்கு பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்தார்.












Click it and Unblock the Notifications