பிரசவத்துக்கு மேக்கப்புடன் ரெடியான நட்சத்திரா.. ஆனா சொல்ற காரணத்தை பாருங்க.. ரொம்ப ஓவர் இதெல்லாம்!
சென்னை: பிரவசத்திற்கு ஃபுல் மேக்கப்புடன் சின்னத்திரை நடிகை நட்சத்திரா தயாரான வீடியோ வெளியாகியுள்ளது. அவரது தாயும் கணவரும் கிண்டல் செய்த போது தான் ஏன் மேக்கப் செய்கிறேன் என்பது குறித்து ஒரு விளக்கத்தை சொன்னார் பாருங்க!
ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் யாரடி நீ மோகினி . இதில் வெண்ணிலா எனும் அப்பாவி பெண் கேரக்டரில் நடித்திருப்பவர் நட்சத்திரா. இவர் கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நட்சத்திரா ஜீ தமிழ் சேனல்லில் சீரியல்களின் தயாரிப்பு நிர்வாக பணிகளை மேற்கொண்டு வரும் விஸ்வநாதனை காதலித்து வந்துள்ளார். இவர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ குடும்பத்திற்கு நெருக்கமானவர் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சேர்ந்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நட்சத்திரா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதற்கு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறினர். இதைத் தொடர்ந்து நட்சத்திராவுக்கு கடந்த இரு மாதங்ககளுக்கு முன்பு வளைகாப்பு நடந்தது.
இந்த விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை சைத்ரா ரெட்டி கலந்து கொண்டு தனது தோழியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். இருவரும் நெருக்கமான தோழிகள். கர்ப்பிணியான நட்சத்திராவை சைத்ரா ரெட்டி விளையாட்டுக்காக டார்ச்சர் செய்த விவகாரம் இன்ஸ்டாகிராமில் வெளியானது. இதனால் கயலை ரசிகர்கள் செல்லமாக திட்டினார்கள்.
நிறைமாதமாக இருந்த நிலையில் கூட நட்சத்திரா ஆக்டிவ்வாக இருந்தார். இந்த நிலையில் நட்சத்திராவுக்கு சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். குழந்தையின் கைகளை பிடித்துக் கொண்டிருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க தற்போது இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நட்சத்திரா பிரசவத்திற்கு ரெடியான வீடியோ! இந்த வீடியோ @nakshathradiary என்ற ஷார்ட்ஸில் இருந்து எடுக்கப்பட்டது. என்னாது பிரசவத்திற்கு ரெடியாவாங்களா, இதென்ன புதுசா இருக்கேனு கேட்கலாம். ஆம்! முகத்தில் கிரீம் போட்டுக் கொண்டு, உதட்டில் லிப் பாம் போட்டுக் கொண்டு அதுவும் சிசேரியன் டெலிவரிக்கு ஃபுல் மேக்கப்புடன் நட்சத்திரா தயாரான வீடியோ வைரலாகி வருகிறது. ஆபரேஷன் தியேட்டருக்கு போக போற மேக்கப் என்ன வேண்டிக் கிடக்கு என அவருடைய தாய் கேட்கிறார். அதற்கு நட்சத்திராவோ அப்பாவியாக என் குழந்தை என்னை முதல் முறையாக பார்க்கும் போது நான் அழகாக இருக்க வேண்டாமா என சிரித்தபடியே கேட்கிறார். அதற்கு அவருடைய தாயும் கணவர் விஸ்வநாதனும் சிரிக்கிறார்கள். நக்சு இதெல்லாம் ஓவர்தான்!
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications