"கயல்” சைத்ராவை கன்னத்தில் அறைந்த தோழி... என்னதான் இருந்தாலும் இப்படியா? ரசிகர்கள் கேள்வி
கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியை அவரது தோழி நட்சத்திரா கன்னத்தில் அறைந்து இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.
அவருடைய நெருங்கிய தோழியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் கதாநாயகி நட்சத்திரா இருந்து வருகிறார்.
இருவரும் வீட்டில் டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கும் போது சைத்ராவை நட்சத்திரா கன்னத்தில் அறைத்திருக்கிறார். அந்த வீடியோவை சைத்ரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

நட்பு கூட்டணி
தோழிகளாக இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலரும் மெச்சி கொள்ளும் வகையில் சின்னத்திரை நடிகைகளான சைத்ரா ரெட்டி, ரேஷ்மா முரளிதரன், நட்சத்திரா, ஷபானா ஆகியோர் இருந்து வந்தனர். இவர்கள் கொரோனா காலகட்டத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்ப வரைக்கும் பெண் தோழிகளின் பேவரைட் புகைப்படங்களாக இருந்து வருகிறது. இவர்களுடைய புகைப்படங்கள் தான் இப்போ வரைக்கும் நண்பர்கள் தினத்தில் பலருடைய வாட்ஸ் அப் சாங்குகளில் இடம்பெறும் புகைப்படமாக இருக்கிறது. அந்த அளவிற்கு இவர்கள் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தாலும் நட்பிலும் உறுதியாக இருந்தனர்.

திருமண கொண்டாட்டங்கள்
இந்த நட்பு கூட்டணியில் முதல் முதலாக சைத்ரா திருமணம் முடிந்தது. அவருடைய திருமணத்திற்கு பிறகு வரிசையாக ஒரு வருடத்திற்குள் ரேஷ்மா, ஷபானா என மூவருக்கும் திருமணமான நிலையில் பிறகு சில மாதங்களுக்கு முன்பு நட்சத்திராவும் எளிமையாக திருமணத்தை கொண்டிருந்தார். இந்த நிலையில் சைத்ரா திருமணத்தில் மட்டும்தான் மொத்த கூட்டமும் அமர்க்களப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் அதற்கு பிறகு ஒவ்வொரு நடிகையும் திடீர் திடீரென திருமணம் செய்து கொண்டதால் இவர்களில் அலப்பறைகள் அமைதியாக தான் நடந்து வந்தது.

ஒரே சீரியலில் நடிப்பு
இந்த நிலையில் சைத்ரா ரெட்டியின் தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவரும் அவருடைய நெருங்கிய தோழியான நட்சத்திராவும் ஜீ தமிழ் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் ஒன்றாக நடித்திருந்தனர். இந்த நிலையில் அந்த சீரியல் முடிவடைந்த பிறகு கலர்ஸ் தமிழில் நட்சத்திரா புது சீரியலில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலும் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நட்சத்திரா கர்ப்பமாக இருக்கிறார். அதே நேரத்தில் ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார்.

எதற்கு இந்த நாடகம்
இந்த நிலையில் சில காலங்களுக்கு முன்பு எப்போதும் அடிக்கடி ஜாலியாக ரீல்ஸ் வெளியிட்டுக் கொண்டிருக்கும் இந்த நட்பு கூட்டணியில் பல நாட்களுக்குப் பிறகு சைத்ரா ரெட்டியும், நட்சத்திராவும் இணைந்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் பழையபடி ஜாலியாக புகைப்படங்களையும் ரீல்ஸ்களும் வெளியிட தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் ரீல்ஸ்க்காக இவர்கள் இருவரும் டான்ஸ் ஆடி கொண்டிருக்கும்போது சைத்ரா நட்சத்திரா தலையில் அடித்து விட, நட்சத்திரா சைத்ராவின் கன்னத்தில் பளார் என்று அடித்து விடுகிறார். இது காமெடியாக இருந்தாலும் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த வீடியோவை பகிர்ந்த கயல் சைத்ரா, யாராவது உங்களை ஓவர் ஆக்ட் செய்ய சொன்னார்களா? ஏன் இவ்வளவு நாடகம் நட்சத்திரா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications